அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே! களைகட்டிய கிறிஸ்துமஸ்..தேவாலயங்களில் வழிபாடு!
சென்னை : இயேசுபிரான் அவதரித்த நன்னாளால் இன்று உலகம் எங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு எந்தவித கட்டுப்பாடும் இன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு பிரார்த்தனைகளில் மக்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்
இயேசு கிறிஸ்து உலகில் அவதரித்த நாளான டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்த மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகள் கட்டுப்பாடுகளுடன் வழக்கத்தை விட எளிமையாக கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில் இந்த ஆண்டு அரசின் செயல்பாடுகள் காரணமாக கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதால் கிறிஸ்துமஸ் வழிபாடு நடத்துவதற்கு எந்த வித கட்டுப்பாடுகளுமின்றி வழக்கமான உற்சாகத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

கிறிஸ்துமஸ்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்த மாதத்தின் தொடக்கம் முதலே மக்கள் தங்கள் வீடுகளில் முகப்புகளில் நட்சத்திரங்களை தொங்கவிட்டும் கிறிஸ்துமஸ் மரங்கள் மற்றும் கிறிஸ்துமஸ் குடில் அமைத்து பண்டிகையை கொண்டாட தயாராகி வந்தனர். இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்படுகின்றன. தேவாலயங்களில் பல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஏராளமான மக்கள் கூடி இருக்கின்றனர்.

சிறப்பு பிரார்த்தனை
இரவு 11 மணி முதல் அதிகாலை 2 வரை இந்த சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. பல திருச்சபைகளில் அதிகாலை 4 மணிக்கு தொடங்கி காலை 7 மணி வரை பிரார்த்தனைகள் நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள புகழ்பெற்ற சாந்தோம் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி பல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஏராளமான மக்கள் வருகை தந்தனர்.

மக்கள் கூட்டம்
இந்த நிகழ்ச்சியில் சென்னை மயிலை பேராயர் கலந்துகொண்டு கிறிஸ்துமஸ் மக்களுக்கு சிறப்பு நற்செய்தியை வழங்கினார். சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயம் பரங்கி மலையில் அமைந்துள்ள மாதா ஆலயம் பாரிமுனை அந்தோணியார் ஆலயம் எழும்பூர் திருஇருதய ஆலயம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இது மட்டுமல்லாமல் நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள வேளாங்கண்ணி ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

நல்வாழ்த்துகள்
இதேபோல் தூத்துக்குடி, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்திலுள்ள பல்வேறு பகுதிகளிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது . வழிபாடு முடிவடைந்து கிறிஸ்துமஸ் மக்கள் ஒருவருக்கொருவர் சமாதானத்தை தெரிவிக்கும் வகையில் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டதோடு இனிப்புகளை வழங்கி கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
-
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications