சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு... ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் இந்தியாவில் 2.6 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

class 12 board exams postponed in Tamilnadu amid raise in corona

கொரோனா பாதிப்பு நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு வரையிலான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் மே 4ம் தேதி முதல் 21ம் தேதி வரை என அறிவிக்கப்பட்டிருந்தது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் +2 தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும் என்று கல்வியாளர்கள். சுகாதாரத் துறை வல்லுநர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதற்கிடையே முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று தலைமை செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்நிலையில், +2 வகுப்பு பொதுத்தேர்வு வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கொரோனாோ பாதிப்பு அதிகரித்து வருவதால் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், 12ஆம் வகுப்புத் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாகவும் மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தது.

English summary
TN government announced to postpone class 12 board exam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X