சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அட நீங்க வேற.. சென்னை பெருமழைக்கு மேக வெடிப்பு காரணமல்ல... புவியரசன் விளக்கம்

சென்னையில் பெய்த பெருமழைக்கு மேகவெடிப்பு காரணமல்ல என்று வானிலை ஆய்வு யைம இயக்குநர் புவியசரன் கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: நேற்று பெய்த அதிகனமழைக்கு மேக வெடிப்பு காரணம் இல்லை என்றும் மேலடுக்கு சுழற்சி திடீரென நிலப்பரப்பை நோக்கி நகர்ந்ததே காரணம் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
அதிகனமழையை கணிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டதாகவும் புவியரசன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    #RedAlerd 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இன்றும் நாளையும் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், தமிழக கடற்கரையை நோக்கி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறினார்.

     ஷாக் மேல் ஷாக்.. முதலில் பெரியவர்கள்.. அடுத்தடுத்து குழந்தைகள்.. கிலி தரும் தொற்று.. கதறும் வல்லரசு ஷாக் மேல் ஷாக்.. முதலில் பெரியவர்கள்.. அடுத்தடுத்து குழந்தைகள்.. கிலி தரும் தொற்று.. கதறும் வல்லரசு

    மிககனமழைக்கு வாய்ப்பு

    மிககனமழைக்கு வாய்ப்பு

    டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம்,செங்கல்பட்டு ,காஞ்சிபுரம் ,சென்னை ,திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியுள்ளார்.

    மிககனமழை

    மிககனமழை

    நாளை கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், டெல்டா மாவட்டங்கள் ,கடலூர், விழுப்புரம்,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

    மிதமான மழை

    மிதமான மழை

    நாளை மறுநாள் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். வருகிற 3ஆம் தேதி தென்மாவட்டத்தில் தென் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்ய கூடும். ஜனவரி 4ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் புவியரசன் கூறியுள்ளார்.

    மழையை கணிப்பதில் சிக்கல்

    மழையை கணிப்பதில் சிக்கல்

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்தார். சென்னையில் அதிகனமழையை கணிப்பதில் சில சிக்கல்கள் இருந்தாக கூறிய புவியரசன், கடலில் இருக்கும் என்று கணிக்கப்பட்ட மேலடுக்குச் சுழற்சி நிலப்பகுதிக்கு நகர்ந்ததே அதிக கனமழைக்குக் காரணம் என்றும் தெரிவித்தார்.

    மாறிய கணிப்பு

    மாறிய கணிப்பு

    வளி மண்டல மேலடுக்குச் சுழற்சியால் இன்று தான் கனமழை பெய்யும் என்று எதிர்பார்த்தோம் நேற்றே அதிகனமழை விடாமல் பெய்தது. கணிப்புகளையும் தாண்டி காற்றின் நகர்வு வேகமாக இருக்கவே அதிக கனமழை பெய்ததாக வானிலை மைய இயக்குநர் கூறியுள்ளார்.

    மேலடுக்கு சுழற்சி

    மேலடுக்கு சுழற்சி

    சென்னையில் மேக வெடிப்பு ஏற்பட்டதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதனை மறுத்த புவியரசன், சென்னையில் பெய்த மழை மேக வெடிப்பு காரணம் என்று இல்லை என்று கூறினார். மேலடுக்குச்சுழற்சி காரணமாகவே மழை பெய்தது. மேக வெடிப்பு என்றால் சில நிமிடங்களில் மழை கொட்டி விட்டு போய் விடும் என்று கூறிய புவியரசன் மேலடுக்கு சுழற்சியால்தான் பல மணி நேரம் மழை விடாமல் பெய்தது என்றும் தெரிவித்துள்ளார். மழையை கணிக்க சென்னையில் அதிநவீன கருவிகள் தேவைப்படுவதாகவும் புவியரசன் கூறியுள்ளார்.

    English summary
    The director of the Meteorological Center, Puviarasan, said that the cloudburst was not the cause of yesterday's heavy rains and that the overlay rotation was due to a sudden move towards the mainland. Puviarasan also said that there were problems in predicting heavy rains.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X