சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்திலேயே கொரோனா தடுப்பூசி உற்பத்தி- முதல்வர் ஸ்டாலின் அதிரடி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்திலேயே கொரோனாவுக்கான தடுப்பு மருந்து, தடுப்பூசி தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசியை போல் ஆக்ஸிஜன், மருத்துவ உயர் தொழில்நுட்ப சாதனங்கள், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்டவை தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

 CM Stalin announces Corona vaccine will be manufactured in TN

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில், ஒரு நிரந்தரத் தீர்வாக நம் மாநிலத்திலேயே ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களைத் துவக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.

இதுமட்டுமின்றி, மருத்துவ உயர் தொழில்நுட்ப சாதனங்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், தடுப்பூசிகள் மற்றும் கொரோனா
தொடர்பான மருந்துகள் உற்பத்தியை நம் மாநிலத்திலேயே உருவாக்குவதற்கும், தொழில் கூட்டு முயற்சிகளை உருவாக்கவும் உத்தரவிட்டுள்ளார்கள்.

தமிழகத்தில் 18+ அனைவருக்கும்..தடுப்பூசி பணிகளில் சில தினங்களில் தொடங்கும்..அமைச்சர் மா.சுப்பிரமணியன்தமிழகத்தில் 18+ அனைவருக்கும்..தடுப்பூசி பணிகளில் சில தினங்களில் தொடங்கும்..அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இதனடிப்படையில் தொழில் துறையின்கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO), மேற்காணும் அத்தியாவசிப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ஆதரவையும், உதவிகளையும் அளிக்கும் என்றும், குறைந்தபட்சம் 50 கோடி ரூபாய் முதலீடு செய்யும் நிறுவனங்களுடன், டிட்கோ நிறுவனம் கூட்டாண்மை அடிப்படையில் (Joint Venture) இவ்வாலைகளை நிறுவுவதற்கு விருப்பமுள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து விருப்பக் கருத்துகளை (Expression of Interest ) 31-5-2021-க்குள் கோரியுள்ளது.

அவ்வாறு பெறப்படும் விருப்பக் கருத்துகள் ஆய்வு செய்யப்பட்டு, ஆக்சிஜன், தடுப்பூசிகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் உற்பத்தி உட்கட்டமைப்புகளை விரைவில் நிறுவிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
CM Stalin says that TN government is looking to produce Corona vaccine in our state itself.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X