Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திடீரென அதிகரித்த தினசரி கொரோனா தொற்று.. மீண்டும் முதலிடம் சென்ற கோவை.. என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பில் சென்னை தொடர்ந்து முதலிடம் பிடித்து வந்த நிலையில் கோவை அதனை முந்தியுள்ளது. 125 பாதிப்புகளுடன் கோவை முதலிடத்தில் உள்ளது.

அதிரடியாக குறையும் கொரோனா

அதிரடியாக குறையும் கொரோனா

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது கொரோனா 800-க்குள் குறைந்து விட்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா மொத்த பாதிப்பு 27,19,515 உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏற்ற, இறக்கமாக உயிரிழப்பு

ஏற்ற, இறக்கமாக உயிரிழப்பு

கொரோனா உயிரிழப்பு தொடர்ந்து ஏற்ற, இறக்கமாக உள்ளது. சென்னையில் அதிகபட்சமாக கொரோனாவுக்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் செங்கல்பட்டிலும் 3 பேர் இறந்துள்ளனர். சேலத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 36,361 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 879 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 26,74,327 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

2-வது இடம் சென்ற சென்னை

2-வது இடம் சென்ற சென்னை

8,827 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,00,705 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 5,23,27,681 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 118 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வந்த சென்னை இரண்டாவது இடம் சென்று விட்டது.

இரண்டு சதம்

இரண்டு சதம்

கோவையில் திடீரென பாதிப்பு அதிகரித்துள்ளது. கோவை 125 பாதிப்புகளுடன் மீண்டும் முதலிடம் சென்றுள்ளது. செங்கல்பட்டில் 58 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 15 பேருக்கும், மதுரையில் 13 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 11 பேருக்கும், திருவள்ளூரில் 26 பேருக்கும், திருச்சியில் 29 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 48 பேருக்கும், ஈரோட்டில் 73 பேருக்கும், சேலத்தில் 41 பேருக்கும், நாமக்கல்லில் 39 பேருக்கும், தஞ்சாவூரில் 23 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையிலும், கோவையிலும் தினசரி பாதிப்பு தொடர்ந்து 100-ஐ கடந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+