சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இது சாம்பல்-பச்சையா இல்லை பிங்க்-வெள்ளையா.. நம்மையே குழப்பும் ‘வைரல்’ ஷூ!

ஷூ ஒன்றின் படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: சமூகவலைதளங்களில் ஷூ ஒன்றின் புகைப்படம் வைரலாகி இருக்கிறது.
மூளைக்கு வேலை தருவது போன்ற புதிர்கள் அவ்வப்போது சமூகவலைதளங்களில் வெளியாவது உண்டு. ஆனால், இம்முறை நம் எந்தப் பக்க மூளை வேலை செய்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள என புதிய புதிர் ஒன்று வைரலாகியுள்ளது.

இது தொடர்பான புகைப்படத்தில், ஷூ ஒன்று உள்ளது. ஆனால், அது நம் கண்களுக்கு என்ன நிறமாகத் தெரிகிறது என்பது தான் இங்கே கேள்வி. ஒரு சிலருக்கு இந்த ஷூ சாம்பல் -பச்சையாகவும், மற்றவர்களுக்கு பிங்க்-வெள்ளையாகவும் இது தெரிகிறது.

2 மாதங்களில் விற்பனையான தேர்தல் பத்திரங்களின் மதிப்பு என்ன.? வெளியான அதிர்ச்சி தகவல்.. 2 மாதங்களில் விற்பனையான தேர்தல் பத்திரங்களின் மதிப்பு என்ன.? வெளியான அதிர்ச்சி தகவல்..

மூளையின் செயல்பாடு:

மூளையின் செயல்பாடு:

இதன்படி, சாம்பல்-பச்சை நிற ஷூ தெரிந்தால், அவர்கள் இடது மூளை செயல்பாட்டு ஆதிக்கத்தில் இருக்குமென்றும், பிங்க்-வெள்ளை நிற ஷூ தெரிந்தால் அவர்களுடைய வலது மூளை செயல்பாடு ஆதிக்கத்தில் இருக்குமென்றும் கூறப்படுகிறது.

ஒளி மாயை:

ஒளி மாயை:

இது ஒருவகை ஆப்டிக்கல் இல்லுஷன் (Optical Illusion) எனப்படும் ஒளி மாயை புகைப்படம் ஆகும். ‘தாட்ஸ் ஃபார் லைப்' (Thoughts for Life) என்ற அமைப்பு இந்த ஷூவின் புகைப்படத்தை கடந்த வாரம் தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டது. அந்த புகைப்படம், 4 லட்சத்திற்கும் மேலான கமென்ட்களைப் பெற்றுள்ளது. மேலும், இந்த புகைப்படம் 4.3 லட்சத்திற்கும் அதிகமானோரால் பகிரப்பட்டுள்ளது.

வைரல் புகைப்படம்:

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இதே போன்று ஒரு உடையின் புகைப்படம் இணையத்தில் வைரலானது. ஒளி மாயையின் காரணமாக இரண்டு வித நிறங்களில் அது தோற்றமளித்தது. அந்த வகையில் தற்போது இந்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

என்ன கலர்:

இந்தப் புகைப்படங்களைப் பார்ப்பவர்கள் தங்கள் கண்களுக்கு என்ன நிறத்தில் தெரிகிறது என்பதைக் குறிப்பிட்டு, மற்றவர்களுக்கு அதனை அனுப்பி வருகின்றனர். இதனால் பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்சப் என சமூகவலைதளங்களில் இந்த புகைப்படம் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

English summary
For the last one week the internet has been divided over a single photo of a shoe. The question at hand: Is the shoe pink and white? Or is it actually gray and pink?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X