நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!
சென்னை: இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக ஏற்பட்ட வர்த்த கேஸ் தட்டுப்பாடு நாடு முழுவதும் பல துறைகளை பாதித்த நிலையில், தற்போது நிலைமை படிப்படியாக சீராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூழலில், வர்த்தக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர்களின் ஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த முடிவு உணவகங்கள், தொழிற்சாலை கேன்டீன்கள் உள்ளிட்ட பல துறையினருக்கு பெரிய நிம்மதியை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
சமீபத்தில் மேற்கு ஆசியப் பகுதியில் இஸ்ரேல் - ஈரான் - அமெரிக்கா இடையே ஏற்பட்ட போர் பதற்றத்தின் காரணமாக எரிபொருள் மற்றும் கேஸ் விநியோகத்தில் உலகளவில் பெரும் சிக்கல் உருவானது. அதன் தாக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டது.
இந்த நிலைமையை சமாளிக்கும் வகையில், வீட்டு பயன்பாட்டுக்கான சமையல் கேஸ் சிலிண்டர்களுக்கு முன்னுரிமை வழங்க மத்திய அரசு முன்பு சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி, வர்த்தக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர்களின் விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டது.

வர்த்தக கேஸ் சிலிண்டர்
இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள உணவகங்கள், ஹோட்டல்கள், தொழிற்சாலை கேன்டீன்கள், சமூக உணவகங்கள் மற்றும் உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் கடுமையான சிரமங்களை சந்தித்தன. பல இடங்களில் உணவு தயாரிப்பு குறைந்தது, சில இடங்களில் தற்காலிகமாக சேவைகளும் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக வீட்டு பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர்களின் முன்பதிவு குறைந்துள்ளதுடன், அவற்றின் விநியோகம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
கேஸ் விநியோகம்
இதனால் வர்த்தக பயன்பாட்டுக்கான கேஸ் விநியோகத்தை அதிகரிக்க மத்திய அரசு கட்டாய முடிவுகளை எடுத்து வருகிறது. முதலில், வர்த்தக காஸ் சிலிண்டர்களின் விநியோகத்தில் 5-ல் ஒரு பங்கு மீண்டும் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் மாநிலங்களுக்கு கூடுதலாக 10 சதவீத ஒதுக்கீடு வழங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனுடன், நகரங்களில் குழாய் (Pipe) மூலம் காஸ் விநியோகம் செய்யும் திட்டங்களையும் விரைவுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
50 சதவீதம் ஒதுக்கீடு
தற்போது இந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கூடுதலாக மேலும் 20 சதவீத ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் வர்த்தக காஸ் சிலிண்டர்களுக்கான மொத்த ஒதுக்கீடு 50 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த உயர்வு உடனடியாக நடைமுறைக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹோட்டல் ஓனர்கள் நிம்மதி
இந்த முடிவின் மூலம் உணவு விடுதிகள், சிறிய மற்றும் பெரிய ஹோட்டல்கள், தொழிற்சாலை கேன்டீன்கள், சமூக உணவுக் கூடங்கள் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு தேவையான அளவில் காஸ் சிலிண்டர்கள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக ஏற்பட்டிருந்த உணவு தயாரிப்பு சிக்கல்கள் படிப்படியாக சரியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் பல கோயில்கள் மற்றும் பெரிய சமையல் மையங்களிலும் காஸ் தட்டுப்பாடு காரணமாக பிரசாதம் தயாரிப்பில் சிக்கல்கள் ஏற்பட்டிருந்தது.
வர்த்தக கேஸ் ஒதுக்கீடு
இந்நிலையில், வர்த்தக கேஸ் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதால், அங்கு மீண்டும் வழக்கமான செயல்பாடுகள் விரைவில் தொடங்கும் என நம்பப்படுகிறது. வர்த்தக காஸ் சிலிண்டர்களின் ஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தியுள்ள மத்திய அரசின் இந்த முடிவு, சமீப காலமாக ஏற்பட்டிருந்த காஸ் தட்டுப்பாடு பிரச்சனையை குறைக்க உதவும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் உணவகங்கள் உள்ளிட்ட பல துறைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
-
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை! -
சொந்த செலவில் சூனியம்.. 2022க்கு பிறகு அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி! டிரம்புக்கு எதிராக மக்கள் -
அமெரிக்கா ஈரானை அடித்த அடி.. ஏழைகள் வயிற்றில் விழுது! கிடைக்காத கேஸ் சிலிண்டர்.. கடைகளுக்கு பூட்டு! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே














Click it and Unblock the Notifications