ராஜீவ் காந்தி கொலை வழக்கு.. 6 பேரை விடுதலை செய்த சுப்ரீம் கோர்ட்.. திருநாவுக்கரசர் சொன்ன கருத்து!
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள 6 பேரும் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில், காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி உள்ளிட்ட 6 பேரையும் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை அடிப்படையாக வைத்து தங்களையும் அதே அடிப்படையில் விடுதலை செய்யவேண்டும் என்று கோரி நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் மனுதாக்கல் செய்திருந்தனர்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நாகரத்தினம் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கில் சுமார் 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. அதில், பேரறிவாளன் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு, ஏனைய 6 பேருக்கும் பொருந்தும்.

6 பேரும் விடுதலை
சிறையில் 6 பேரின் நடத்தையும் திருப்திகரமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளது. அதேபோல் நன்னடத்தை, சிறையில் கல்வி கற்றது, பரோல் விதிமுறை, ஆளுநரின் தாமதம் ஆகியவற்றின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் நளினி, அவரது கணவர் முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஆறு பேரும் விடுதலை பெற இருக்கிறார்கள்.

திருநாவுக்கரசர் கருத்து
உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு திமுக, அதிமுக, விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை தொடர்பாக காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ராஜீவ் காந்தி கொலை எங்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. ராஜீவ் காந்தி வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டவர்கள், அவர்களின் விடுதலையால் குடும்பத்தினர், அரசியல் கட்சிகள், உடனிருந்தவர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைவார்கள்.

ஏற்கவோ, மறுக்கவோ ஏதும் இல்லை
அதே நேரத்தில் 6 பேரின் விடுதலையால் எல்லோரும் மகிழ்ச்சியடைவார்கள் என்று சொல்ல முடியாது. இது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தான் என்றாலும், சரியான முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அதுமட்டுமல்லாமல் நாட்டில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருப்பவர்களை விடுவிக்க வேண்டும். நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை செய்யப்பட்டதில் ஏற்றுக்கொள்வதற்கோ, மறுப்பதற்கோ எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications