Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய் இல்லாமலே.. பவரை காட்டிவிட்டோம்.. தவெக எதற்கு? கேரளாவில் டாட்டா காட்ட ரெடியான காங்கிரஸ்!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: 2025 கேரளா உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக வந்த்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி கேரளாவில் காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்க நினைக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு பெரிய சிக்கலாக மாறி உள்ளது.

விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கேரளாவில் 2026 சட்டமன்றத் தேர்தல்களில் களமிறங்க ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும், சில தொகுதிகளில் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகளை TVK ஆய்வு செய்து வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க கேரளாவில் முயன்று வருகிறார். ஆனால் அங்கே நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தவெக கட்சியின் கனவிற்கு எதிராக திரும்பி உள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் திட்டம்

தமிழர்கள் கணிசமாக வாழும் பகுதிகள் மற்றும் விஜய்க்கு வலுவான ரசிகர் பட்டாளம் இருக்கும் மாவட்டங்களில், கட்சி உறுப்பினர்கள் களப்பணியைத் தொடங்கியுள்ளனர். இது, கட்சி கேரள அரசியலில் கால் பதிப்பதற்கான முதல் படியாக பார்க்கப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக, கேரளாவில் TVK ஆதரவாளர்களின் சமூக வலைத்தள செயல்பாடு அதிகரித்துள்ளது. சாத்தியமான வேட்பாளர்களாகக் கருதப்படும் சிலர், சமூக நலன் சார்ந்த பணிகள், தொண்டு நடவடிக்கைகள் மற்றும் உள்ளூர் சமூகப் பங்கேற்புகள் குறித்த வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர்.

நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (TVK) தமிழ்நாடு, கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் போட்டியிட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்காக முக்கியமான பார்முலா ஒன்று அவர் சமர்ப்பித்து உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி தமிழ்நாட்டில் முதல்வர் வேட்பாளர் + 100 இடங்களில் தவெக போட்டியிடும் காங்கிரஸ் இந்த கூட்டணியில் இருக்கும். கேரளாவில் 10 இடங்கள் + துணை முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிடும். புதுச்சேரியில் 5- 10 தொகுதிகள் + துணை முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிடும். இதற்காக விஜய் தீவிரமாக காங்கிரசின் டெல்லி தலைகள் உடன் பேசி வருகிறாராம். இதற்காக காங்கிரஸ் உடன் அக்கட்சி ஆலோசனை செய்து வருகிறதாம்.

Congress Reluctant to Tie Up With Vijay s TVK in Kerala as UDF Rides Strong Winning Momentum

கேரளா உள்ளாட்சி தேர்தல்

இப்படிப்பட்ட நிலையில்தான் 2025 கேரளா உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக வந்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி கேரளாவில் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு பெரிய சிக்கலாக மாறி உள்ளது.

சமீபத்திய அதிகாரப்பூர்வ முடிவுகளின்படி, உள்ளாட்சி அமைப்புகளில் காங்கிரஸ் கூட்டணியான UDF தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது. 87 நகராட்சிகளில் UDF 54, இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) 28, பாஜகவின் NDA 2 இடங்களை வென்றன. 941 கிராம பஞ்சாயத்துகளில் UDF 500, LDF 341, NDA 26 இடங்களையும் கைப்பற்றின.

152 பிளாக் பஞ்சாயத்துகளில் UDF 77, LDF 64 இடங்களைப் பெற்றன; NDA ஒரு இடத்தையும் வெல்லவில்லை. 14 மாவட்ட பஞ்சாயத்துகளிலும் UDF, LDF தலா 7 இடங்களை வென்று சமநிலையில் இருந்தன. NDA-விற்கு மாவட்ட பஞ்சாயத்துகளில் வெற்றி இல்லை.

மாநகராட்சி முடிவுகளும் அரசியல் மாற்றங்களைக் காட்டின. கேரளாவின் 6 மாநகராட்சிகளில் UDF 4, LDF 1 என வென்றன. பாஜக திருவனந்தபுரம் மாநகராட்சியை வென்று முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. தலைநகரின் 101 வார்டுகளில், NDA 50, LDF 29, UDF 19, பிறர் 2 இடங்களைப் பெற்றன. பாஜக தலைமையிலான NDA திருவனந்தபுரம் மாநகராட்சியைக் கைப்பற்றியது இதுவே முதல்முறை, அது நீண்டகால அரசியல் சமன்பாடுகளை மாற்றியது.

காங்கிரஸ் எழுச்சி

காங்கிரஸ் தலைவர்கள் தங்களின் எழுச்சி அமைப்பு பலம், உள்ளூர் தலைமை, வாக்காளர் ஈடுபாடு இவற்றின் விளைவே, பிரபல செல்வாக்கினால் அல்ல என்கின்றனர். இதுதான் விஜய்க்கு எதிராக மாறும் என்கிறார்கள். அதாவது விஜய் உடன் கூட்டணி எல்லாம் வேண்டாம். அவர் இல்லாமலே நாம் வெல்கிறோம்.

விஜயுடன் எதற்கு கூட்டணி என்ற நிலைப்பாட்டை காங்கிரஸ் கேரளாவில் எடுக்கும் நிலை வரும் என்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கே.சி. வேணுகோபால், நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதாகத் தகவல்கள் தெரிவித்தன.

வேணுகோபால், தற்போது ஆலப்புழா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும் முக்கியப் பொறுப்புகளை வகித்து வருகிறார். தேசிய அரசியலில் நீண்ட அனுபவமும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் கேபினட் அமைச்சராகப் பணியாற்றிய அனுபவமும் கொண்ட இவர், விஜய்யின் வளர்ந்து வரும் அரசியல் செல்வாக்கை நல்ல அரசியல் வாய்ப்பாகக் கருதுகிறார் என்று கூறப்பட்டது.

ஆனால் இப்போது விஜய் இல்லாமலே காங்கிரஸ் தனது பவரை நிரூபணம் செய்துள்ளதால்.. அவரை கூட்டணி அழைக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. முக்கியமாக விஜய் போன்ற நடிகருடன் கூட்டணி வைப்பது, கட்சிக்கு கிடைத்த அங்கீகாரத்தைக் குறைக்கும்; கட்சி ஆளுகையிலிருந்து தனிநபர் அரசியலுக்கு கவனத்தை மாற்றிவிடும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வாதிடுகின்றனர்.

விஜய் தயவு இல்லாமலே நாம் இவ்வளவு காலம் வென்று வந்துள்ளோம்.. இப்போது வென்றுள்ளோம்.. அப்படி இருக்க ஏன் விஜயுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் வாதம் வைக்க தொடங்கி உள்ளார்களாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+