சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வீங்கிய முகம்.. மூக்கில் ரத்தம்.. கேரளாவில் 15 பேருக்கு கரும்பூஞ்சை.. ஒருவரின் கண் அகற்றப்பட்டது!

Google Oneindia Tamil News

சென்னை: கேரளாவில் கரும்பூஞ்சை எனப்படும் பிளாக்பங்கஸ் நோய் தீவிரமாக பரவி வருகிறது. அங்கு இதனால் ஒருவருக்கு கண் அகற்றப்பட்டுள்ளது.

Recommended Video

    Black Fungus எப்படி ஏற்படுகிறது? | எவ்வாறு தடுப்பது? | Treatments & Medicines | Dr VPB Paramasivam

    இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பிளாக் பங்கஸ் அல்லது மியூகோமைகோசிஸ் என்று அழைக்கப்படும் கரும்பூஞ்சை நோய் வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியா முழுக்க இந்த நோய் தற்போது தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    நான்காவது கணவனை ரூமில் அடைத்து.. டார்ச்சர் செய்த ஏட்டு சந்தியா ராணி.. போலீசிடம் அழுது புகார் நான்காவது கணவனை ரூமில் அடைத்து.. டார்ச்சர் செய்த ஏட்டு சந்தியா ராணி.. போலீசிடம் அழுது புகார்

    தமிழகத்தில் 9 பேருக்கு இந்த நோய் தாக்கி உள்ளது. இதில் 6 பேர் சர்க்கரை வியாதி பாதிப்புகொண்டவர்கள் . இவர்கள் எல்லோரும் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டவர்கள்.

    பிளாக் பங்கஸ்

    பிளாக் பங்கஸ்

    இந்தியாவில் கொரோனா நோயாளிகள் பலருக்கு இந்த கரும்பூஞ்சை ஏற்பட தொடங்கி உள்ளது. முக்கியமாக நீரிழிவு குறைபாடு உள்ளவர்கள் பலருக்கும் கரும்பூஞ்சை எனப்படும் பிளாக் பங்கஸ் பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. கொரோனாவிற்கு ஸ்டிராய்டு போன்ற மருந்துகள் எடுக்கும் நபர்கள் சிலருக்கு உடலில் எதிர்ப்பு சக்தி குறையும் நேரங்களில் இந்த பிளாக் பங்கஸ் நோய் தாக்குதல் ஏற்படுகிறது.

    கேரளா

    கேரளா

    கேரளாவிலும் இந்த பிளாக் பங்கஸ் தாக்குதல் தீவிரமாக பரவி வருகிறது. இதுவரை கேரளாவில் பிளாக் பங்கஸ் தாக்குதலால் 15 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கேரளாவில் அனுமதிக்கப்பட்ட 15 பேரில் 8 பேர் மிக மோசமாக பிளாக் பங்கஸ் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் இந்த தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

    எங்கு

    எங்கு

    திருவனந்தபுரம், கொச்சி, மலப்புரம் மாவட்டங்களிலும் கூட இந்த தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதில் கொச்சியில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு முகம் முழுக்க வீங்கி, மூக்கு துவாரங்கள் அடைக்கும் அளவிற்கு முகம் வீங்கி இருந்தது. அதேபோல் பலருக்கு கண்கள் சிவந்து, கண்களுக்கு கீழே அரிப்பு ஏற்பட்டு இருந்தது.

     நீக்கப்பட்டது

    நீக்கப்பட்டது

    மலப்புரம் திரூர் என்று ஊரில் 62 வயது நபருக்கு இதேபோல் கொரோனா ஏற்பட்டு பின்னர் பிளாக் பங்கஸ் ஏற்பட்டுள்ளது. இவருக்கு கண்களில் பிளாக் பங்கஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், இடது கண் நீக்கப்பட்டுள்ளது. இன்னொரு கண்ணில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவருக்கு கொரோனா ஏற்பட்டு சில நாட்கள் முன் குணமடைந்தார்.

     சர்க்கரை வியாதி

    சர்க்கரை வியாதி

    இவருக்கு சர்க்கரை வியாதி இருந்துள்ளது. கொரோனாவிற்கு எதிராக ஆக்சிஜன் குறைபாடு காரணமாக ஸ்டிராய்டு மருந்துகளை எடுத்துள்ளார். இதனால் இவருக்கு பிளாக் பங்கஸ் தாக்குதல் மிக மோசமாக இருந்தது என்கிறார்கள். இன்னும் சில பிளாக் பங்கஸ் நோயாளிகளுக்கும் இதேபோல் கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    English summary
    Coronavirus: 15 Patients affected by Black Fungus and one lost his one eye in Kerala. Many affected with serious symptoms.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X