சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சத்தமே இன்றி சாதித்த சென்னை.. மும்பை, பெங்களூர், டெல்லிக்கு வழிகாட்டியாகும் "தலை நகர்".. பின்னணி!

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா பாதிப்பு நாடு முழுக்க பெரிய நகரங்களில் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தின் தலைநகர் சத்தமே இல்லாமல் சாதனை ஒன்றை செய்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 4979 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,65,714 லிருந்து 1,70,693 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 1254 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 85859 ஆக உயர்ந்துள்ளது .

இதுவரை இல்லாத உச்சம்.. தமிழகத்தில் இன்று 4979 பேருக்கு கொரோனா.. 1.70 லட்சம் பேர் பாதிப்பு.. ஷாக்!இதுவரை இல்லாத உச்சம்.. தமிழகத்தில் இன்று 4979 பேருக்கு கொரோனா.. 1.70 லட்சம் பேர் பாதிப்பு.. ஷாக்!

சென்னை நிலைமை

சென்னை நிலைமை

தமிழகத்தில் இப்படி கொரோனா கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் சென்னையில் மட்டுமே இதுவரை 5 லட்சம் கொரோனா மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிக கொரோனா மாதிரி சோதனை செய்த நகரமாக, மாவட்டமாக சென்னை மாறியுள்ளது. இதற்காக சென்னை மாநகராட்சி சார்பாக 200 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.

எப்படி சத்தியம்

எப்படி சத்தியம்

சென்னையை 15 மண்டலமாக பிரித்து இந்த சோதனையை செய்து இருக்கிறார்கள். மொத்தமாக சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டிற்காக 400 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் இத்தனை சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. வீடு வீடாக சென்று சென்னையில் சோதனைகள் செய்யப்பட்டு இந்த சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளது.

குறைந்தது

குறைந்தது

சென்னையில் தற்போது கொரோனா டெஸ்ட் - பாதிப்பு சதவிகிதம் 37%த்தில் இருந்து 12%ஆக குறைந்துள்ளது. அதாவது முன்பு 100 பேருக்கு சோதனை செய்தால் 37 பேருக்கு கொரோனா வந்த நிலையில் தற்போது 12 பேருக்கு மட்டுமே கொரோனா வருகிறது. இதை 5% ஆக குறைக்கும் நோக்கில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. முன்பு 3500 பேரை டெஸ்ட் செய்தால் 1400 பேருக்கு கொரோனா வரும்.

செம ரிசல்ட்

செம ரிசல்ட்

இப்போதெல்லாம் 13 ஆயிரம் பேர் தினசரி சோதனை செய்யப்படுகிறார்கள். இப்போதெல்லாம் தினசரி 1200 கேஸ்கள் மட்டுமே வருகிறது. அதேபோல் 6 மணி நேரத்தில் வெளியான சோதனை முடிவுகள் தற்போதெல்லாம் வெறும் 3 மணி நேரத்தில் வெளியாகிறது. இதனால்தான் சென்னையில் வேகமாக கொரோனா சோதனைகள் செய்யப்பட்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மொத்தம் எத்தனை

மொத்தம் எத்தனை

இன்று 52993 மாதிரிகள் தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. 1932492 மாதிரிகள் இதுவரை தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 51640 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 1855817 பேருக்கு தமிழகத்தில் இதுவரை கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. சோதனைகளை தமிழகம் துரிதப்படுத்தி உள்ளது.

Recommended Video

    Tamilnadu Lockdown Extension | Salem District பிரிப்பு பற்றி Edappadi Palanisamy பதில்
    மற்ற நகரங்கள்

    மற்ற நகரங்கள்

    • கொரோனா சோதனையில் மற்ற மாநிலங்கள் மற்றும் நகரங்களின்
    • மகாராஷ்டிராவில் 15 லட்சம் சோதனைகள் - மும்பையில் மட்டும் 4.2 லட்சம் சோதனைகள் செய்யப்பட்டுள்ளது
    • கர்நாடகாவில் 9 லட்சம் சோதனைகள் - பெங்களூரில் மட்டும் 2.4 லட்சம் சோதனைகள் செய்யப்பட்டுள்ளது
    • குஜராத்தில் 5 லட்சம் சோதனைகள் - மும்பையில் மட்டும் 1.4 லட்சம் சோதனைகள் செய்யப்பட்டுள்ளது
    • மொத்தமாக டெல்லியில் 7.9 லட்சம் சோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

    English summary
    Coronavirus: Chennai completed overall 5 Lakh sample tests for the first time in India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X