சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தயாராகும் தலைநகர்.. கண்டெயின்மெண்ட் விதியை மொத்தமாக மாற்றிய சென்னை.. திடீர் முடிவிற்கு என்ன காரணம்?

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் கண்டெயின்மெண்ட் சோன் என்று அழைக்கப்படும் கட்டுப்பாட்டு பகுதிகளில் முக்கியமான விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று மட்டும் 798 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 538 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 8,002 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 4372 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுக்க ஊரடங்கில் சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

சென்னை, மும்பைக்கு வாய்ப்பு இல்லை.. மோடி கேட்ட சென்னை, மும்பைக்கு வாய்ப்பு இல்லை.. மோடி கேட்ட

சென்னை நிலை

சென்னை நிலை

இந்த நிலையில் சென்னையில் கட்டுப்பாட்டு பகுதியில் திடீர் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கண்டெயின்மெண்ட் சோன் என்று அழைக்கப்படும் கட்டுப்பாட்டு பகுதிகள் 587 இருக்கிறது. ஒரு தெருவில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா ஏற்பட்டால் அந்த பகுதி கட்டுப்பாட்டு பகுதி என்று அழைக்கப்படும். ஒரே தெருவில் பலருக்கு பரவினால் இப்படி அறிவிக்கப்படும். அந்த தெரு மொத்தமும் சீல் வைக்கப்படும். சென்னையில் இப்படி 587 பகுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

மாற்றம் செய்தனர்

மாற்றம் செய்தனர்

ஆனால் இதில்தான் தற்போது மாற்றங்களை செய்ய உள்ளனர். அதன்படி இனிமேல் தெரு முழுமைக்கும் சீல் வைக்க மாட்டார்கள். அதாவது மொத்தமாக ஒரு தெருவை கட்டுப்பாட்டு பகுதி என்று அறிவிக்க மாட்டார்கள். அதற்கு பதிலாக எங்கெல்லாம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறதோ அந்த குறிப்பிட்ட வீட்டை மட்டும் சீல் செய்வார்கள். அருகருகே உள்ள வீடுகளில் கொரோனா வந்து இருந்தாலும். அந்த வீடுகளை மட்டும்தான் சீல் செய்வார்கள்.

புதிய விதிகள்

புதிய விதிகள்

தெருவை லாக் செய்ய மாட்டார்கள்.மேலும் அடுக்குமாடி குடியிருப்புகளில் யாருக்காவது கொரோனா வந்து இருந்தால், அந்த அடுக்குமாடி குடியிருப்பு மொத்தத்திற்கும் சீல் வைக்கப்படும். ஆனால் மொத்தமாக அந்த தெருவுக்கு சீல் வைக்கப்படாது. இதன் மூலம் சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகள் மொத்தமாக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகளின் பரப்பளவு குறையும் என்று கூறுகிறார்கள்.

காரணம் என்ன

காரணம் என்ன

இதற்கு நிறைய காரணம் சொல்லப்படுகிறது. சென்னையில் கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கும் மக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அங்கிருக்கும் மக்கள் வெளியே சென்று பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்யும் விதமாக கட்டுப்பாட்டு பகுதியில் இந்த புதிய விதிகளை கொண்டு வருகிறார்கள். இது சென்னையில் மிக முக்கியமான தளர்வாக பார்க்கப்படுகிறது.

நேற்று முடிவு

நேற்று முடிவு

நேற்று சென்னையில் ரிப்பன் கட்டிடத்தில் நடத்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டம் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். இதனால் சென்னையில் தளர்வுகள் கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்படுகிறது என்று கூறுகிறார்கள்.

ஊரடங்கு தளர்வு

ஊரடங்கு தளர்வு

இந்தியாவில் மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு மே 17க்கு பின் தளர்த்தப்படும் என்று கூறுகிறார்கள். இந்த ஊரடங்கு தளர்வு கட்டுப்பாட்டு பகுதிகளில் கொண்டு வரப்பட வாய்ப்பு இல்லை. இந்த நிலையில்தான் சென்னையில் கட்டுப்பாட்டு பகுதி குறித்த விதிகள் மாற்றப்பட்டுள்ளது. இதனால் சென்னை ஊரடங்கு தளர்வுக்கு தயார் ஆகி வருகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது.

English summary
Coronavirus: Containment rules and regulations changed in Chennai to ease the curfew.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X