சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஹு சொன்ன வழிமுறை.. கொரோனாவால் பலியான அன்பழகன்.. உடல் அடக்கம் செய்யப்பட்டது எப்படி? முழு விபரம்!

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா காரணமாக பலியான திமுக எம்எல்ஏ அன்பழகன் உடல் எப்படி அடக்கம் செய்யப்பட்டது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளது.

Recommended Video

    Anbazhagan உடல் எப்படி அடக்கம் செய்யப்பட்டது? முழு விவரம்

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்து வருகிறது. நாளுக்கு நாள் கேஸ்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் திமுக எம்எல்ஏ மற்றும் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ. அன்பழகன் இன்று காலை கொரோனா காரணமாக மரணம் அடைந்தார்.

    இவருக்கு கடந்த 2ம் தேதி காய்ச்சல் அறிகுறி வந்தது. அதன்பின் அவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் கொரோனா காரணமாக பலியாகும் முதல் எம்எல்ஏ ஜெ. அன்பழகன்தான்.

    சட்டசபையில் சண்டமாருதமாய் முழங்கியவர்... எதற்கும் அஞ்சாத கொள்கைச் சிங்கம் ஜெ. அன்பழகன்: வைகோ சட்டசபையில் சண்டமாருதமாய் முழங்கியவர்... எதற்கும் அஞ்சாத கொள்கைச் சிங்கம் ஜெ. அன்பழகன்: வைகோ

    அன்பழகன் கொரோனா

    அன்பழகன் கொரோனா

    அன்பழகன் கொரோனா காரணமாக பலியாகி உள்ளதால் அவரின் உடலை சாதாரணமாக அடக்கம் செய்ய முடியாது. உடலை அடக்கம் செய்ய உலக சுகாதார மையம் கொடுத்த வழிமுறையை பின்பற்றி உள்ளனர். அதன்படி முதலில் அன்பழகன் உடல் முழுக்க முழுக்க கிருமி நாசினி கொண்டு கழுவப்பட்டது. உடலில் இருக்கும் காது, மூக்கு உள்ளிட்ட அனைத்து துளைகளும் கிருமி நாசினி கொண்டு சுத்தமாக கழுவப்பட்டது.

    சட்டசபையில் சண்டமாருதமாய் முழங்கியவர்... எதற்கும் அஞ்சாத கொள்கைச் சிங்கம் ஜெ. அன்பழகன்: வைகோசட்டசபையில் சண்டமாருதமாய் முழங்கியவர்... எதற்கும் அஞ்சாத கொள்கைச் சிங்கம் ஜெ. அன்பழகன்: வைகோ

    துணியை வைத்து

    துணியை வைத்து

    அதன்பின் உடலில் துளைகள், வெட்டுக்கள் இருந்தால் அந்த பகுதிகள் மொத்தமாக மூடப்பட்டது. அதன்பின் உடலை சுற்றி துணியை வைத்து மூடினார்கள். உடலின் அனைத்து பகுதியும் துணியால் மொத்தமாக மூடப்பட்டது. அதை தொடர்ந்து அதன் மேல் பகுதியில் பிளாஸ்டிக் கவர் கொண்டு மூடப்பட்டது. அதன் மேல் இன்னொரு பிளாஸ்டிக் கவர் கொண்டும் மூடப்பட்டது.

    தோனியின் தீவிர ரசிகர்.. அஸ்வினுக்காக பொங்கியவர்.. அன்பழகனின் அறியப்படாத கிரிக்கெட் பக்கம்!தோனியின் தீவிர ரசிகர்.. அஸ்வினுக்காக பொங்கியவர்.. அன்பழகனின் அறியப்படாத கிரிக்கெட் பக்கம்!

    பாதுகாப்பு

    பாதுகாப்பு

    பின் கடைசியாக உடலை புதைக்கும் முன் மூன்றாவதாக பிளாஸ்டிக் கவர் கொண்டு உடல் மூடப்படும். இப்படியாக மூன்று அடுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படும். அதன்பின் இறுதியாக உடல் அடக்கம் செய்யப்படும். அன்பழகன் உடலை மொத்தம் 4 பேர் சேர்ந்து அடக்கம் செய்வார்கள். இவர்கள் எல்லோரும் சுகாதாரத்துறை நியமனம் செய்த பணியாளர்கள். இவர்கள் எல்லோரும் பிபிஇ உடை அணிந்து இருப்பார்கள்.

    உறவினர்கள்

    உறவினர்கள்

    முழுக்க முழுக்க ஹு விதித்த விதிமுறைகளின் படி மட்டுமே அடக்கம் நடைபெறும். இதில் திமுகவினர், தலைவர்கள் யாரும் கலந்து கொள்ள வாய்ப்பு இல்லை. அன்பழகன் உறவினரின் கோரிக்கையை பொறுத்தே அவர்கள் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியுமா, முடியாதா என்பது தெரியும். இறுதி சடங்கில் யார் எல்லாம் கலந்து கொள்வார்கள் என்பது தொடார்பாக இன்னும் விவரம் வெளியாகவில்லை.

    ஏன் இப்படி

    ஏன் இப்படி

    பொதுவாக கொரோனா காரணமாக பலியாகும் நபரின் உடலில் கொரோனா வைரஸ்கள் இருக்கும். இந்த வைரஸ்கள் அந்த நபர் பலியான பின்பும் பரவும் திறன் கொண்டது. இதனால் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் உரிய பாதுகாப்போடு உடலை அடக்கம் செய்ய வேண்டும். இதற்காக உலக சுகாதார மையம் மேற்கூறிய பாதுகாப்பு விதிகளை வெளியிட்டு இருக்கிறது.

    ஏஆர்டிஎஸ் பிரச்சனை.. நன்றாக தேறி வந்த உடல்நிலை.. கடைசி நேரத்தில் பலியான அன்பழகன்.. என்ன நடந்தது?ஏஆர்டிஎஸ் பிரச்சனை.. நன்றாக தேறி வந்த உடல்நிலை.. கடைசி நேரத்தில் பலியான அன்பழகன்.. என்ன நடந்தது?

    English summary
    Coronavirus: DMK MLA J Anbazhagan body will be buried by the WHO regularities.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X