சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையில் கன்டெய்ன்மென்ட் ஏரியாக்கள் எவை எவை.. வெளியானது முழு லிஸ்ட்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் நீங்கள் எந்த ஏரியாவில் வசிக்கிறீர்கள்.. உங்கள் தெரு கன்டெய்ன்மென்ட் ஜோனில் உள்ளதா என்பது குறித்து இதில் அறியலாம். ஏனெனில் சென்னை மாநகராட்சி சென்னையின் எந்தெந்த பகுதிகள் கன்டெய்ன்மென்ட்ஜோனில் வருகிறது என்பதை இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக நேற்று மாலை நிலவரப்படி 2323 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் 1258 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போதைய நிலையில் 1035 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வருகிறார்கள். இதில் சென்னையில் தான்அதிகம் பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்

மக்கள் அடர்த்தி மிகுந்த சென்னை நகரம் என்பது வெறும் மாநகரம் என்பது மட்டுமல்ல. ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களும் உள்ள ஊர் ஆகும். தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் யாராவது ஒருவர் நிச்சயம் சென்னையில் இருப்பார். தமிழகத்தின் இதயமே சென்னை தான். அந்த ஊர் இப்போது கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. கொத்துக்கொத்தாக பரவி உள்ளது.

அச்சத்தில் மக்கள்

அச்சத்தில் மக்கள்

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 900த்தை தாண்டி உள்ளது. கடந்த மூன்று நாளில் மட்டும் 300க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நேற்று ஒரு நாளில்மட்டும் சென்னையில் 138 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் பொதுமக்களிடையே இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும் என்கிற அச்சம் அதிகரித்துள்ளது.

கட்டுப்பாட்டு பகுதிகள்

கட்டுப்பாட்டு பகுதிகள்

இந்த சூழலில் கொரோனாவை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் கொரோனா பாதித்த பகுதிகளை தடை செய்யப்பட்ட மற்றும் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளாக அறிவித்து கன்டெய்ன்மென்ட் ஜோனில் கொண்டுவந்துள்ளது. அப்படி ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிப்புக்குள்ளாகுபவர்களின் லிஸ்டை பொறுத்து பகுதிகளை அதிகரிக்கவும் குறைக்கவும் செய்து வருகிறது.

198 தெருக்கள்

198 தெருக்கள்

அந்தவகையில் மே 1ம் தேதியான இன்றைய நிலவரப்படி சென்னையில் கண்டெய்ண்மெண்ட் ஜோன் எது எது என்பது குறித்து முழு லிஸ்டை இன்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில் மொத்தம் 198 தெருக்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளாக உள்ளது.மிக அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்திலும், அதற்கு அடுத்தபடியாக திருவிகநகர் மண்டலத்திலும், கோடம்பாக்கம் மண்டலத்திலும் அதிகப்படியாக பகுதிகள் கொரோனா தடுப்பு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மக்கள் கவனம் தேவை

மக்கள் கவனம் தேவை

இந்த லிஸ்டில் சில தெருக்களின் பெயர்கள் மட்டுமே உள்ளது, சிலவற்றில் எந்தஏரியா என்பதும் உள்ளது. அத்துடன் கண்டெய்ண்மெண்ட் ஜோனில் எந்த தேதி முதல் தெருக்கள் எல்லாம் வந்தன என்பதையும் தெரிவித்துள்ளது. கூகுளிலும் கண்டெய்ண்மெண்ட் ஜோன் எவை எவை என்பது காட்டுகிறது. எனவே மக்கள் கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளுக்கு செல்வதை தவிர்த்து வீடுகளுக்குள்ளேயே இருப்பது நலம். கன்டெய்ன்மென்ட் முழு லிஸ்ட் கீழே உள்ளன.

English summary
covid -19 : Updated list of containment areas in chennai . corporation relased this list at may 1 2020
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X