Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் மீண்டும் நியமனம்.. தேர்தல் ஆணையம் யூ-டேர்ன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக சந்தீப் மிட்டல் நியமனம் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக மீண்டும் டேவிட்சன் தேவாசீர்வாதத்தை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக நியமனம் செய்யப்பட்ட சந்தீப் மிட்டல் ஆயுதப்படை டிஜிபியாக செயல்படுவார் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

திமுக எம்பி டி ஆர் பாலு கடிதம் அளித்ததை அடுத்து அதிகாரி மாற்றத்தை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுள்ளது. ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளராக தன்னை காட்டிக்கொள்பவர் சந்தீப் மிட்டல் என டிஆர் பாலு கூறியிருந்தார்.

Davidson Devasirvatham Reappointed as DGP of DVAC Election Commission orders

தமிழகத்தில் வரும் 23 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இது ஒருபுறம் இருக்க அதிமுக, பாஜக, தவெக உள்ளிட்ட கட்சிகள் கொடுத்த புகாரின் பேரில் தமிழக தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தம், தமிழக லஞ்ச ஒழிப்பு டிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டனர். தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெறுமாறு தேர்தல் ஆணையத்துக்கு திமுக பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆர். பாலு கடிதம் எழுதி இருந்தார்.

ஐபிஎஸ் அதிகாரி சந்தீப் மிட்டலை லஞ்ச ஒழிப்புத்துறையின்-இன் தலைமை இயக்குநராக நியமித்திருப்பதற்கு கடும் ஆட்சேபணையைத் தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் டிவிஏசியின் இன் தலைமை இயக்குநர் பதவிக்கும், தேர்தல் நடத்தும் பணிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.

அரசியலமைப்பின் 324-வது பிரிவின் கீழ் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் என்பது, வாக்காளர் பட்டியலைத் தயாரித்தல் மற்றும் தேர்தல்களை நடத்துதல் ஆகிய பணிகளை மேற்பார்வையிடுதல், வழிநடத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு மட்டுமே உரியதாகும் என்று திமுக தனது கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தது. தேர்தல் ஆனையத்திற்கு இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ள நிலையில், தனது முடிவில் இருந்து தேர்தல் ஆணையம் பின்வாங்கியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+