தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி.. வயது மூப்பால் தளர்ச்சி என தகவல்
வயது மூப்பினால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக முதல்வர் மு.க ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: முதல்வர் ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல் நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வழக்கமான உடல் பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள். இவர் சில ஆண்டுகளாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை கோபாலபுரம் இல்லத்தில் வசித்து வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டு அரசியலில் இருந்து ஒதுங்க ஆரம்பித்ததிலிருந்து, தயாளு அம்மாவிற்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. தனக்கு நெருக்கமானவர்களையும் அடையாளம் காண்பதில் அவருக்கு சிரமம் இருந்ததாக கூறுகிறார்கள். பல்வேறு உடல் உபாதைகளால் சிரமப்பட்டு வரும் தயாளு அம்மாளுக்கு வீட்டிலேயே சில சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தன.

தயாளு அம்மாள்
கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது கூட அவரைப் பார்க்க தயாளு அம்மாள் வீல்சேரின் மூலமாகத்தான் அழைத்துவரப்பட்டார். இதனால் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்தார். முக்கிய நிகழ்ச்சிகளின் போது , முதல்வரும், மகனுமான மு.க. ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து ஆசி பெறுவது வழக்கம்.

ஆசி பெறும் மு.க ஸ்டாலின்
கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர் தயாளு அம்மாள் எந்த நிகழ்ச்சிக்காவும் வீட்டைவிட்டு வெளியே வருவதில்லை. முதல்வர் ஸ்டாலின் அவ்வப்போது தனது தாயாரை சந்தித்து ஆசி பெற்று வந்தார். அந்த புகைப்படங்கள் வெளியாகிவந்தன. அண்மையில் ஸ்டாலின் தனது பிறந்தநாளுக்கு கோபாலபுரம் வீட்டுக்கு சென்ற புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியான போதும், தயாளு அம்மாளை சந்தித்த புகைப்படம் வெளியாகவில்லை.

மருத்துவமனையில் அனுமதி
இந்த நிலையில் வயது மூப்பின் காரணமாக அவருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவர் ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் கோபாலபுரம் வீட்டில் இருந்து அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

மு.க அழகிரி
தயாளு அம்மாளின் மகன்கள் மு.க அழகிரி, தமிழரசு, மகள் செல்வி ஆகியோர் மருத்துவமனையில் உள்ளனர். வழக்கமான மருத்துவ பரிசோதனை தான் எனவும் மாலை 6 மணி அல்லது இரவு 7 மணிக்குள் வீடு திரும்பி விடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வர் மு.க ஸ்டாலின்
முதல்வர் மு.க. ஸ்டாலின் தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்று தனது தாயாரின் உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தயாளு அம்மாவிற்கு ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு மூச்சுத்திணறல் ஏற்பட அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் வீடு திரும்பினார். அவருக்கு ஏற்கனவே ஞாபகமறதி நோய் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
-
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல்












Click it and Unblock the Notifications