ரஜினி கட்சி அர்ஜுன மூர்த்தி முரசொலி மாறனின் ஆலோசகராக இருந்தது கிடையாது.. தயாநிதி மாறன் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்த் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அர்ஜுன மூர்த்தி என்பவர் தனது தந்தை முரசொலி மாறனுடன் இணைந்து பணியாற்றியவர் என்ற தகவல் பொய்யானது என மத்திய சென்னை திமுக எம்பி தயாநிதி மாறன் விளக்கம் அளித்துள்ளார்.

புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதாக நடிகர் ரஜினிகாந்த் நேற்று உறுதிபட அறிவித்தார். மேலும் தனது கட்சிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி என்பவரை நியமனம் செய்தார்.

Dayanidhi Maran denies Arjunamurthys link with Murasoli Maran

இந்த அர்ஜுன மூர்த்தி ஏற்கனவே பாஜகவில் அறிவுசார் குழுவின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர். இந்த நிலையில் அந்த பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்தார்.

இதனிடையே சில ஊடகங்களில் அர்ஜுன மூர்த்தி இதற்கு முன்பாக மறைந்த முரசொலி மாறனின் உதவியாளர் மற்றும் ஆலோசகராக இருந்ததாக செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து, தயாநிதி மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று ஒரு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: சில நாளிதழ்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் அர்ஜுன மூர்த்தி எனது தந்தை முரசொலி மாறனின் உதவியாளர் மற்றும் ஆலோசகராக இருந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. இதுபோன்ற தவறான தகவல்களை ஊடகங்கள் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+