இப்பவும் இல்லையா? முணுமுணுக்கும் டெல்டா திமுக! கோட்டையை பறிகொடுத்துட கூடாது.. தலைமைக்கு அலெர்ட் !
சென்னை : டெல்டா மாவட்டங்களில் ஒருவர் கூட அமைச்சரவையில் இடம்பெறாதது டெல்டா திமுகவினர் மத்தியில் அதிருப்தியாக இருந்து வந்த நிலையில், தற்போதும் அமைச்சரவையில் இடம் கிடைக்காதது அவர்களை கடுமையாக அப்செட் ஆக்கியுள்ளதாம்.
4 மாவட்டங்களில் 18க்கு 15 இடங்களில் வென்றும் ஒருவருக்கு கூட அமைச்சர் பதவி வழங்கப்படாதது முணுமுணுப்பை ஏற்படுத்தி இருந்தது. அடுத்த அமைச்சரவை மாற்றத்தில் தங்களுக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்த்தனர்.
ஆனால், தற்போது அமைச்சர்கள் மாற்றப்படாத நிலையில், அமைச்சரவையின் ஃபுல் கெப்பாசிட்டி நிரம்பியுள்ளதால், இனி வாய்ப்பு கிடைப்பது அரிது என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், டெல்டா மாவட்ட திமுகவில் அதிருப்திக் குரல்கள் எழுந்துள்ளன.

டெல்டாவில் முணுமுணுப்புகள்
உதயநிதி ஸ்டாலின், தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளது திமுகவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுள்ளதை தமிழகம் முழுவதுமுள்ள திமுக உடன்பிறப்புகள் கொண்டாடி வருகின்றனர். எனினும், டெல்டா மாவட்டங்களில் மீண்டும் முணுமுணுப்புகள் கிளம்பி இருப்பதாகக் கூறப்படுகிறது. இது உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக இல்லை என்றாலும், அமைச்சரவை மாற்றம் தொடர்பானது தான்.

டெல்டா அதிருப்தி
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட அமைச்சரவையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் யாருக்கும் அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவில்லை. இதனால், டெல்டா மாவட்ட திமுகவினர் அதிருப்தி அடைந்தனர். 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில் டெல்டா மாவட்டங்களுக்கு அமைச்சர் கிடைக்காதது அந்த மாவட்ட மக்களுக்கும், கட்சியினருக்கும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

டெல்டா - திமுக கோட்டை
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த திமுக எம்எல்ஏக்கள் யாருக்குமே அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இத்தனைக்கும், ஒருங்கிணைந்த காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மொத்தமுள்ள 18 தொகுதிகளில் 15 தொகுதிகளைத் திமுக கூட்டணி கைப்பற்றியது.

ஒருவர் கூட இல்லை
டெல்டா மாவட்டங்களில் திமுகவின் புதிய அமைச்சரவையில் திருவையாறு துரை.சந்திரசேகரன், கும்பகோணம் சாக்கோட்டை க.அன்பழகன், மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா, திருவாரூர் பூண்டி கலைவாணன், பட்டுக்கோட்டை கா.அண்ணாத்துரை ஆகியோரில் சிலர் பெயர்கள் இடம்பெறக்கூடும் எனத் திமுகவினரால் அப்போது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒருவர் பெயர் கூட இடம்பெறாததால் திமுகவினரும், டெல்டா மாவட்ட மக்களும் அதிருப்தி அடைந்தனர்.

அமைச்சரவையில் புறக்கணிப்பு
ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் டெல்டா மாவட்டங்கள், திமுகவை காப்பாற்றியுள்ளன. 2011-ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் திமுகவைச் சேர்ந்த 23 பேர் மட்டுமே வெற்றி பெற்ற நிலையிலும் கூட திருவாரூர், மன்னார்குடி, கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய தொகுதிகளில் திமுக எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றனர். கருணாநிதியின் சொந்த மாவட்டமான திருவாரூரும் அமைச்சரவையில் புறக்கணிக்கப்பட்டது. திமுகவுக்கு எப்போதும் சாதகமாக இருக்கும் டெல்டா மாவட்டங்களை அமைச்சரவையில் புறக்கணித்தது சலசலப்புகளை ஏற்படுத்தியது.

ஸ்டாலின் சொன்ன வார்த்தை
ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்டா மாவட்டங்களில் இருந்து யாரும் அமைச்சரவையில் இடம்பெறவில்லை என கவலைப்பட வேண்டாம், உங்கள் மாவட்டத்தில் இருந்து தான் நான் இன்று முதலமைச்சராகி இருக்கிறேன் என சென்டிமென்ட்டாகப் பேசினார். இது அப்போதைக்கு டெல்டா மாவட்ட திமுகவினருக்கு ஆறுதல் அளிப்பதாக இருந்தாலும், அவ்வப்போது குமுறல்கள் தொடர்ந்து எழுந்து வந்தன.

டெல்டா திமுக ஆதங்கம்
அமைச்சரவை மாற்றங்கள் தொடர்பான பேச்சுகள் எழும் போதெல்லாம், டெல்டா மாவட்ட எம்.எல்.ஏக்கள், தங்களுக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா என நப்பாசையுடன் இருந்து வந்தனர். அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் டெல்டா மாவட்டங்களில் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன. டிடிவி தினகரன், ஓபிஎஸ் தரப்பினரும் டெல்டா மாவட்டங்களை குறிவைத்துச் செயல்பட்டு வருகின்றனர். இப்படியான சூழலில், இந்த 4 மாவட்டங்களுக்கும் ஒரு அமைச்சர் கூட இல்லை என்றால், அது கட்சியினரின் செயல்பாட்டிலும் தொய்வை ஏற்படுத்தும். திமுகவின் கோட்டையாக இருக்கும் டெல்டாவை இழந்துவிடக்கூடாது என்பதற்காகவாவது அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட வேண்டும் எனக் கூறி வந்தனர்.

இனி வாய்ப்பு அரிது?
ஆனால், இந்த முறை அமைச்சரவையில் இலாகா மாற்றங்கள் மட்டுமே நடந்ததோடு, உதயநிதி ஸ்டாலின் மட்டுமே புதிதாக அமைச்சர் ஆகியிருக்கிறார். சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கையில் 15 சதவீதம் வரைதான் அமைச்சர்களை நியமனம் செய்யலாம். இந்த விதிப்படி தற்போது 35 நபர்களுடன் அமைச்சரவை ஃபுல் ஆகியுள்ளதால், இனி யாரையாவது புதிதாக அமைச்சராக்க விரும்பினால் அமைச்சரவையில் இருந்து ஒருவரை நீக்க வேண்டும். எனவே, இனி டெல்டா மாவட்ட எம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்பு கிடைப்பது அரிது என்ற சூழல் உருவாகியுள்ளது.

டிஆர்பி ராஜா
மன்னார்குடி தொகுதியில் இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ ஆன டி.ஆர்.பி.ராஜா, முதல்வர் ஸ்டாலினின் குட்புக்கில் இருப்பதால் அவர் அமைச்சரவையில் இடம்பெறக்கூடும் என அவரது ஆதரவாளர்கள் பேசி வந்தனர். ஆனால், அவரும் அமைச்சரவையில் இடம்பெறவில்லை. ஐடி விங் பணிகளை தீவிரப்படுத்தி சிறப்பாக செயல்பட்டு வரும் தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என அவரும் எதிர்பார்த்ததாகவே கூறப்படுகிறது. ஆனால், அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் அவரது ஆதரவாளர்களும் அப்செட் ஆகியுள்ளனராம்.
-
Velmurugan's TVK: எதே! 10 சீட்டா? வேல்முருகனின் "பிளானால்" அதிர்ந்த திமுக! கடைசியில் சொன்னது என்ன? -
ரஞ்சனா நாச்சியார் காட்டிய ஒயிட் பேப்பர்.. விஜயை அலற விட்டவர் திமுகவில் இணைகிறாரா? லக்கி ராமநாதபுரம் -
பெரம்பூர் தொகுதியில் விஜய் களமிறங்கினால்.. சேகர்பாபுவை களமிறக்க திமுக திட்டம்? ஆலோசனையில் அறிவாலயம்! -
வருகிறார் மாஸ்டர்மைண்ட்.. டெல்லி களமிறக்கும் ஐபிஎஸ்.. சரியாக தமிழக தேர்தல் நேரத்தில் பயங்கர பிளான்! -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
நம்மகிட்ட என்ன இல்லை.. பாமக தொடங்கி 37 வருஷமாச்சு.. ஆனால்.. குமுறி தள்ளிய அன்புமணி -
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள்.. ஒன்றில் மட்டுமே தனி சின்னம்! தொகுதி பங்கீடு கையெழுத்து -
சபரீசன் கையில் விரைவில் திமுக.. அப்படியே ஆந்திரா ஸ்டைல்.. அணுகுண்டை வீசிய அஇஅதிமுக உதயகுமார் -
பிரேமலதா குடும்பத்திற்கு ஸ்டாலின் தரும் இன்னொரு சர்ப்ரைஸ்! பிரபாகரன் போட்டியிடும் தொகுதி -EXCLUSIVE -
நெல்லை முபாரக் எங்கே போட்டி? திமுகவிடம் எஸ்டிபிஐ எதிர்பார்க்கும் தொகுதி எது? பரபரக்கும் தேர்தல் களம் -
“பைத்தியக்காரத்தனம்”.. திமுக சட்ட எரிப்பைக் கிண்டல் செய்த பெரியார்? கெடு விதித்த அண்ணா! -
முக்குலத்தோர் வாக்குகள்.. 6 மாவட்டங்களில் திமுகவின் மைக்ரோ பிளான்.. ஓபிஎஸ் மூலமாக அதிமுகவுக்கு செக்!












Click it and Unblock the Notifications