கலாய்த்த கம்பீர்.. பேட்டால் பதிலடி கொடுத்த "டிகே" - இரண்டே பால்! என்னா அடி - சும்மா அதிருதுல்ல
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், தினேஷ் கார்த்திக்கை 10 முதல் 12 பந்துகள் மட்டுமே பிடிக்கும் வீரர் என விமர்சித்த நிலையில், நேற்று அவருக்கும், தன்னை விமர்சித்த மற்றவர்களுக்கும் இரண்டே பந்துகளில் அவர் பதிலடி கொடுத்து இருக்கிறார்.
2022 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் 22 நாட்களே உள்ள நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது.
ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருக்கும் சூழலில் இந்த டி20 தொடர் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. மொஹாலியில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

8 ஓவர்கள்
இந்த நிலையில் நேற்று இரு அணிகளுக்கு இடையேயான 2 வது டி20 போட்டி நாக்பூரில் நடைபெற்றது. மழை காரணமாக தாமதமாக தொடங்கப்பட்ட இப்போட்டியில் ஓவர்கள் 8 ஆக குறைக்கப்பட்டன. டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலியா ஸ்கோர்
முதலில் பேட் செய்யத் தொடங்கிய ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் 31 ரன்களை விளாசினார். கேமரான் க்ரீன், மேக்ஸ்வெல், டிம் டேவிட் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளிக்க, மேத்திவ் வேட் 20 பந்துகளில் 43 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இறுதியாக ஆஸ்திரேலிய அணி 8 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 90 ரன்களை குவித்தது. 2 ஓவர்கள் வீசிய அக்சர் பட்டேல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தியா பேட்டிங்
அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் அடுத்தடுத்து அடித்து ஆடி ஆட்டமிழந்தாலும் நிலைத்து ஆடிய கேப்டன் ரோகித் சர்மா 20 பந்துகளில் 46 ரன்களை விளாசி அசத்தினார். கடைசி ஓவரில் இந்திய அணி இலக்கை கடந்து வெற்றிபெற்றது.

தினேஷ் கார்த்திக்
இதில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 20 பந்துகளில் ஆடிய ஆட்டம் எப்படி ரசிகர்களை கவர்ந்ததோ அதேபோன்று தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 2 பந்துகளில் ரசிகர்களை வியக்க வைத்தார். சீனியர் வீரரான தினேஷ் கார்த்திக்கை அணியில் சேர்ப்பதற்கே எதிர்ப்புகள் எழுந்த நிலையில் 'நான் பழைய ஃபார்மில்தான் இருக்கிறேன்' என்று நிரூபித்து இருக்கிறார்.

கடைசி ஓவர்
நேற்றைய போட்டியில் இந்திய அணி வெற்றிபெற கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டன. ஆஸ்திரேலியாவின் இன் ஃபார்ம் பந்துவீச்சாளரான டேனியல் சாம்ஸ் பந்துவீசினார். இதுபோன்ற தருணங்களில் பல வீரர்கள் சொதப்பிவிடுவார்கள். ஆனால் 'பினிஷிங்கில் நானும் மாஸ்டர்தான்' என்று நிரூபிக்கும் வகையில் முதல் பந்தில் சிக்சரையும், 2வது பந்தில் பவுண்டரியையும் விளாசி 2 பந்துகளில் 10 ரன்களை குவித்து ஆட்டத்தை முடித்தார் டிகே.

கவுதம் கம்பீர்
தினேஷ் கார்த்திக் கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்திய அணியில் இடம்பெற்று உள்ளார். இவரை அணியில் தேர்வு செய்ததற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், "வெறும் 10-12 பந்துகளை விளையாடுவதற்காக ஒரு வீரரை டி20 போட்டியில் சேர்க்க முடியாது. அவரால் வெற்றியை பெற்றுத் தர முடியும் என உறுதியாக கூற முடியாது." என்று விமர்சித்தார். இந்த விமர்சனங்களுக்கு நேற்று தனது பேட்டால் பதிலடி கொடுத்துள்ளார் தினேஷ் கார்த்திக்.
-
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
இந்தியாவுக்கு வர வேண்டிய ஈரான் எண்ணெய் கப்பல்.. சீனாவுக்கு திடீர் யூ-டர்ன்.. நடந்தது என்ன? -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது?












Click it and Unblock the Notifications