அதிரடி..ஆளுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு! திமுக கூட்டணி கட்சிகளின் முடிவு! நாளைக்கு இருக்கு கச்சேரி!
சென்னை : தமிழகத்தில் ஆளும் திமுக கூட்டணிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே நாளுக்கு நாள் மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில் நாளை தமிழ்நாடு சட்டசபை ஆளுநர் உரையை திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழக ஆளுநராக ஆர் என் ரவி பொறுப்பேற்றதிலிருந்தே திமுக அரசுக்கும் ஆளுநர் தரப்புக்கும் கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. சட்டசபையில் நிறைவேற்றிய பல்வேறு மசோதாக்களை அவர் முடக்கி வைத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தவிர ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் சனாதனம், அகண்ட பாரதம், திருக்குறள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருவது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. திமுக மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் ஆளுநருக்கு எதிராக திரும்பி இருக்கின்றன.

ஆளுநர் ரவி
மேலும் அவரை திரும்ப பெற வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்து வருகிறது. தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்த ஆளுநர் ரவி தற்போது பேசியிருக்கும் பேச்சு கடும் கொந்தளிப்பினை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாடு என்பது பாரதத்தின் ஆன்மா பாரதத்தின் அடையாளம் சொல்லப் போனால் தமிழ்நாடு என்பதை தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் என கூறினார். ஆளுநர் ஆர் என் ரவியின் தமிழ்நாடு - தமிழகம் குறித்த பேச்சு அரசியல் தாண்டி சமூக வலைதளங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சட்டசபை கூட்டத் தொடர்
இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் நாளை காலை 10 மணிக்கு கூட இருக்கிறது. ஆளுநர் ஆர் என் ரவி உரையுடன் இந்த கூட்டமானது நடைபெற இருக்கும் நிலையில் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக கூட்டணி கட்சிகள் முக்கிய முடிவினை எடுத்து இருக்கின்றன. ஏற்கனவே தமிழக சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டம் தடை, கூட்டுறவு மசோதா உள்ளிட்ட சுமார் 20-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.

கூட்டணி கட்சிகள்
ஆனால் இது குறித்து ஆளுநர் எந்தவித முடிவு எடுக்காமலும் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்திருக்கிறார். இதனால் திமுக அரசுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் ஆளுநர் மீதான எதிர்ப்பு அதிகரித்து இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஆளுநர் தான் கலந்து கொள்ளும் கூட்டங்களில் சனாதனம் திருவள்ளுவர் உள்ளிட்ட விவகாரங்களில் தெரிவிக்கும் கருத்துக்களும் தற்போது தமிழ்நாடு குறித்து அவர் தெரிவித்த கருத்தும் சர்ச்சையை கூட்டி இருக்கிறது.

ஆளுநர் உரை புறக்கணிப்பு
இதனால் ஆளுநரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆளுநர் உரையை புறக்கணிக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் வெளிப்பாடாகவே தமிழக ஆளுநர் தொடர்ந்து குதர்க்கமான கருத்துக்களை கூறி வருகிறார். தமிழகம் என்றாலும் தமிழ்நாடு என்றாலும் ஒன்றுதான் திராவிட கோட்பாட்டிற்கு எதிரான ஆளுநர் தமிழகத்தில் நீடிப்பதற்கு தகுதியில்லை, அவருக்கு சட்டமன்றத்தில் பேச தகுதியில்லை என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்ததை சுட்டிக்காட்டுகின்றனர். அதே நேரத்தில் திமுக கூட்டத்தில் கலந்து கொள்ளும். மேலும் அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் நாளை சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி?












Click it and Unblock the Notifications