அதிரடி.. ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறது தமிழக அரசு.. முதல்வர் பங்கேற்க மாட்டார்
சென்னை: இன்று மாலை நடைபெறும் ஆளுநரின் தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணிக்கும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே தொடக்கம் முதலே சுமுகமான உறவு இல்லை.
கேரளா, மேற்கு வங்க மாநிலங்களைப் போலவே தமிழ்நாட்டிலும் மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கே நிலவி வருகிறது.

தமிழக அரசு
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் எந்தவொரு மசோதாக்களுக்கும் ஆளுநர் ரவி ஒப்புதல் அளிப்பதில்லை என்று கூறப்படுகிறது. நீட் விலக்கு உட்பட மொத்தம் 10க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை என்று கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்திலும் பேசிய திமுக எம்பிகள், தமிழக ஆளுநரை உடனடியாக திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

ஆளுநர் உடன் சந்திப்பு
இதற்கிடையே இன்றைய தினம் மாலை ஆளுநர் சார்பில் தேநீர் விருந்து அளிக்கப்பட இருந்தது. ஆளுநர் அளிக்கும் இந்த தேநீர் விருந்தில் பங்கேற்கப் போவது இல்லை என்று ஏற்கனவே இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, மமக ஆகிய கட்சிகள் அறிவித்து இருந்தன. இதற்கிடையே சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ரவியை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா. சுப்பிரமணியம் ஆகியோர் திடீரென சந்தித்தனர்.

தமிழக அரசு புறக்கணிப்பு
இதையடுத்து ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. ராஜ்பவனில் ஆளுநரைச் சந்தித்த பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு இத்தகவலைத் தெரிவித்தார். தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக ஆளுநர் ஆர்.என் ரவியிடம் நேரில் தெரிவித்துள்ளோம் என்று தங்கம் தென்னரசு குறிப்பிட்டார். தமிழ்நாடு சட்டசபை மாண்பை சீர்குலைக்கும் வகையில் ஆளுநர் செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

மக்கள் உணர்வுகள்
மக்களை உணர்வுகளையும் மதிக்காத வகையில் செயல்பட்டு வருவதாலேயே தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அமைச்சர் கூறினார். மேலும் ஆளுநரின் தேநீர் விருந்து பாரதியார் சிலை திறப்பு விழாவில் முதல்வர் உள்ளிட்ட யாரும் பங்கேற்கப்போவதில்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். ஏற்கனவே, திமுகவின் மற்ற கூட்டணி கட்சிகள் தேநீர் விருந்தில் பங்கேற்க போவதில்லை என அறிவித்து இருந்த நிலையில், இப்போது திமுகவும் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.

நீட் விலக்கு
அதேபோல நிலுவையில் உள்ள நீட் விலக்கு தீர்மானத்திற்கு உடனே ஒப்புதல் தரவும் நேரில் வலியுறுத்தியதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். இருப்பினும், நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பது தொடர்பாக ஆளுநர் எந்தவொரு உறுதியையும் தரவில்லை என்றும் அவர் கூறினார். கடந்த பிப். மாதம் திமுக அரசு 2ஆவது முறையாக நீட் விலக்கு தீர்மானத்தை அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications