சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வட தமிழகத்தில் ஒரே ஒரு தனித் தொகுதியில் மட்டும் திமுக போட்டி.. அதிருப்தியில் தலித்துகள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    லோக் சபா தேர்தல்: திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் அறிவிப்பு

    சென்னை: "அப்படின்னா நாங்க எல்லாம் உங்களுக்கு கணக்கே இல்லையே, எங்களை எல்லாம் கண்ணுக்கே தெரியலையா" என்று வட தமிழகத்தில் உள்ள தலித் மக்களிடையே திமுக மீது சின்ன அதிருப்தி கிளம்பியுள்ளது.

    இன்று காலை திமுக கூட்டணி எங்கெங்கு போட்டியிட போகிறது என்று அக்கட்சி தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்து அந்த தொகுதிகளையும் தெரிவித்துள்ளது.

    7 தனி தொகுதிகள் நம் மாநிலத்தில் உள்ளன. இவற்றில் 5 கூட்டணி தொகுதிகளுக்கு ஒதுக்கியது போக மீதமுள்ள 2 தனித்தொகுதிகள் அதாவது காஞ்சிபுரம், நீலகிரியில் திமுக போட்டியிடுகிறது. இதில் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், நாகப்பட்டினம், சிதம்பரம் என 5 தொகுதிகள் வட தமிழகத்தில் உள்ளன. மீதமுள்ள தென்காசி தெற்கிலும், நாகை மத்தியிலும் உள்ளன.

    இங்கதான் போட்டியிடப் போறோம்... எங்க கூட்டணி பெயர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி.. ஸ்டாலின்இங்கதான் போட்டியிடப் போறோம்... எங்க கூட்டணி பெயர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி.. ஸ்டாலின்

     வன்னியர்கள்

    வன்னியர்கள்

    வட தமிழகத்தில்தான் ஆதிதிராவிடர் மற்றும் வன்னியர்கள் பெரும்பாலும் வசித்து வருகிறார்கள். இங்குள்ள பெரும்பாலான தனித் தொகுதிகளை அதாவது 5ல் 4 தொகுதிகளை கூட்டணிக்கு ஒதுக்கித் தந்து விட்டது திமுக. ஒரே ஒரு தொகுதியில் அதாவது காஞ்சிபுரத்தில் மட்டும் அது போட்டியிடுகிறது.

     காஞ்சிபுரம்

    காஞ்சிபுரம்

    வட தமிழகத்தில் பெரும்பாலான தனித் தொகுதிகளை திமுக தவிர்க்க முக்கியக் காரணம், பெரும்பான்மை வன்னியர் வாக்கு வங்கியில் ஓட்டை விழுந்து விடாமல் தவிர்க்கவே. அதேசமயம், தலித்துகளை நாங்கள் முழுமையாக புறக்கணிக்கவில்லை என்று காட்டிக் கொள்ள காஞ்சிபுரத்தை மட்டும் தான் வைத்துக் கொண்டுள்ளது.

     இதுதான் பாரம்பரியமா?

    இதுதான் பாரம்பரியமா?

    50 வருட பாரம்பரியம் உள்ள கட்சி இப்படி ஒரே ஒரு தனி தொகுதியில் போட்டியிடுவது சம நிலையில் இல்லையே என்ற அதிருப்தியும் கேள்வியும் எழுந்துள்ளது. தலித்துகளுக்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம் என்று காட்ட குறைந்தது பாதி தொகுதியிலாவது திமுக போட்டியிட்டிருக்க வேண்டும் அல்லவா. தனி தொகுதியில் போட்டியிடுவதற்காகவே கூட்டணிகளை பயன்படுத்தி கொள்வதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

     5 வருட புகழ்

    5 வருட புகழ்

    இதே வட தமிழகத்தில் 13 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. அது மட்டும் சாத்தியமாகும்போது கூடுதல் தனி தொகுதிகளிலும் அது போட்டியிட வேண்டாமா. ஒருவேளை ஒதுக்கப்பட்ட இடங்களில் கூட்டணி கட்சியே வெற்றி பெறுவதாக வைத்து கொண்டாலும் அங்கேயும் திமுக புகழ்தான் 5 வருடத்திற்கு கூட வரும்!

     தலித்துகள்

    தலித்துகள்

    உண்மையில் தனி தொகுதிகள் என்று இருக்கப் போய்தான் தலித் மக்களுக்கான பிரதிநிதித்துவம் ஒரளவுக்காவது பெரிய கட்சிகளிடமிருந்து கிடைக்கிறது. இல்லாவிட்டால் அதைக் கூட முற்றிலும் ஒதுக்கி விட்டு முழுக்க பிற ஜாதியினரைத்தான் பெரிய கட்சிகள் நிறுத்தும், முற்றிலுமாக தலித்துகளை புறம் தள்ளி விடுவார்கள் என்ற பொதுவான குற்றச்சாட்டு ரொம்ப காலமாக இருக்கிறது. அதை மெய்ப்பிப்பது போலத்தான் இந்த பட்டியல் உள்ளது.

    English summary
    The DMK has set aside a number of Reservation Constituencies for the Coalition parties
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X