சென்னையின் அடுத்த மேயர் நீங்கள் தானா? கேள்வி வந்ததும் திவ்யா சத்யராஜ் முகத்தில் அவ்வளவு சிரிப்பு!
சென்னை: அடுத்த சென்னை மேயர் நீங்கள் தான் என்று தொடர்ந்து பேசப்படுவதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு திவ்யா சத்யராஜ் பதில் அளித்துள்ளார். திமுகவுக்கு என்னால் முடிந்த அளவிற்கு பங்களிக்க விரும்புகிறேன் என்று கூறிய திவ்யா சத்யராஜ், அம்மாவின் உடல்நிலை கருதியே திமுக கொடுத்த வாய்ப்பை மறுத்ததாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
அண்மையில் திமுக சார்பாக தேர்தலில் போட்டியிட நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் விருப்ப மனு கொடுத்திருந்தார். ஆனால் திவ்யா சத்யராஜுக்கு எதிர்பார்த்தபடி சீட் கொடுக்கப்படவில்லை. இதனிடையே தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டதாகவும், அதனை திவ்யா சத்யராஜ் மறுத்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது.

தொடர்ந்து 2 நாட்களில் தனது அடுத்தக்கட்ட அரசியல் முடிவை எடுக்க உள்ளதாக திவ்யா சத்யராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறி இருந்தார். இந்த நிலையில் திவ்யா சத்யராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தொண்டாமுத்தூர் தொகுதியில் கார்த்திகேயன் தான் வெற்றிபெற போகிறார். அவர் அளவிற்கு களத்தில் யாராலும் பணியாற்ற முடியாது.
என்னுடைய அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை. 6 ஆண்டுகளாகவே அவர் கோமாவில் இருக்கிறார். எனக்கு அம்மாவை கவனித்துக் கொள்ள வேண்டும். அதற்காக சில விஷயங்களை தியாகம் செய்ய வேண்டிய சூழல் உள்ளது. கார்த்திகேயன் வெல்வதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். அவர் நிச்சயம் வெல்ல வேண்டும். அதேபோல் முதல்வர் ஸ்டாலின் ஒரு தந்தையை போன்றவர்.
என் தந்தை சத்யராஜிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லையோ, அதுபோல் முதல்வர் ஸ்டாலினிடமும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. நான் திமுகவுக்கு என்ன செய்கிறேன்.. என்னால் என்ன பங்களிப்பு செய்ய முடியும் என்பதையே பார்க்கிறேன். கட்சியில் இணைந்த உடனே ஐடி விங்கில் மாநிலச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. அந்த பொறுப்புக்கு உண்மையாக உழைக்க வேண்டும்.
சென்னை மேயர் என்று பேசுவதற்கான காலம் இது அல்ல. எங்கள் தொகுதியில் எழிலன் நாகநாதன் போட்டியிடுகிறார். அவருக்காக வாக்கு சேகரிக்க செல்ல ஆர்வமாக உள்ளேன். அதேபோல் விஜய் சாரை மிகவும் பிடிக்கும். ஆனால் அரசியல் ரீதியாக விஜய்யை கேள்வி கேட்க எனக்கு உரிமை உள்ளது. அவரின் ரசிகர்கள் திட்டுவது பற்றி கவலை கிடையாது.
மாஸ், அழகு இருந்தால் தான் கேள்வி கேட்கலாம் என்று யாரும் சொல்ல கூடாது. கொளத்தூரில் விஜய்க்கு கூடிய கூட்டம் நடிகருக்கானது. அரசியல்வாதிக்காக கூடிய கூட்டம் அல்ல. சிபிராஜ் விஜய்யை ஆதரிப்பதில் எனக்கு எந்த கவலையும் இல்லை. அவரின் விருப்பம் அது. இதனால் குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. அதேபோல் திமுகவின் தேர்தல் அறிக்கை மிகச்சிறந்த ஒன்றாக வந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியானது.. சின்னதுரைக்கு மீண்டும் வாய்ப்பு! -
பெரும் பணக்காரர்களுக்கு செல்வ வரி விதிக்கப்படுமா? நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. வில்சன் கேள்வி -
முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு? சொந்தமாக வாகனம், நகை எதுவும் இல்லை! -
ஆர்.கே.நகர் தொகுதியில் அனல் பறக்கும் போட்டி.. வாக்குறுதிகளை அள்ளி வீசி களமிறங்கிய தவெக வேட்பாளர்! -
திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம்..விஜய் மைக்குடன் பிரச்சாரம் செய்யக் கூடாதா? தவெக அடுக்கடுக்காக கேள்வி -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
வில்லிவாக்கத்தில் கொடி நாட்டுவாரா ஆதவ் அர்ஜுனா? சுத்துப் போட்ட திமுக! சூடு பிடிக்கும் களம் -
நாங்க 10000..அவங்க 8000 தான்! அத்தைக்கு மீசை வச்சா சித்தப்பா மாதிரி இருக்கு! திண்டுக்கல்லார் ராக்ஸ்!












Click it and Unblock the Notifications