சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாட்டிலேயே அதிக வருமானம் உள்ள மாநில கட்சி திமுக! ஏடிஆர் ரிப்போர்ட்! அதிமுக வருமானம் சரிவு!

Google Oneindia Tamil News

சென்னை : தி.மு.க, 2020 - -2021ஆம் நிதியாண்டில் 149.95 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி மாநில கட்சிகளில் அதிக வருவாய் ஈட்டிய கட்சி எனப் பெயர் பெற்றுள்ளது.

அரசியல் கட்சிகளின் வருமானம் குறித்த அறிக்கையை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (ADR) ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி கடந்த ஆண்டில் நாட்டிலேயே அதிக வருமானம் ஈட்டிய மாநிலக் கட்சியாக திமுக உள்ளது. இரண்டாவது இடத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி உள்ளது.

திமுக, அதிமுக இந்து விரோத கட்சிகளாம்... தமிழகம் முழுவதும் பிரச்சார பயணம் செல்லும் இந்து முன்னணி திமுக, அதிமுக இந்து விரோத கட்சிகளாம்... தமிழகம் முழுவதும் பிரச்சார பயணம் செல்லும் இந்து முன்னணி

 ஏடிஆர் ஆய்வு

ஏடிஆர் ஆய்வு

அரசியல் கட்சிகளின் வருமானம் குறித்த அறிக்கையை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (ADR) ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், 2020-2021ஆம் ஆண்டில் கட்சிகளின் வருமானத்தை பட்டியலிட்டுள்ளது இந்த அமைப்பு. இந்த வருமானத்தில் கட்சிகள் பெற்ற நன்கொடை, கட்சிகளின் சொத்து விற்பனை, உறுப்பினர் கட்டணம், வங்கிகளில் டெபாசிட் செய்த தொகைகளிலிருந்து வரும் வட்டி உள்ளிட்ட அனைத்து வழிமுறைகளில் கிடைத்த தொகையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 எதன் அடிப்படையில்

எதன் அடிப்படையில்

நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள், 2020 - 2021ஆம் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட வரவு - செலவு கணக்குகளை தேர்தல் ஆணையம் முன் சமர்ப்பித்தன. இதில், 31 பெரிய கட்சிகளின் வரவு - செலவு கணக்குகளை, ஏ.டி.ஆர் எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் ஆய்வுக்கு உட்படுத்தியது. அதன் முடிவிலேயே கட்சிகளின் வருமானம் குறித்த அறிக்கையை ஏடிஆர் வெளியிட்டுள்ளது.

 திமுக முதலிடம்

திமுக முதலிடம்

தமிழக ஆளுங்கட்சியான தி.மு.க 2020 - 2021ஆம் நிதியாண்டில் 149.95 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி மாநில கட்சிகளில் அதிக வருவாய் ஈட்டிய கட்சி எனப் பெயர் பெற்றுள்ளது. தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு முந்தைய ஆண்டான 2019 - 2020ஆம் நிதியாண்டில் அக்கட்சியின் வருமானம் 64.90 கோடி ரூபாயாக இருந்தது. இது, கடந்தாண்டில் 131 சதவீதம் உயர்ந்து, 149.95 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

 இரண்டாவது இடம்

இரண்டாவது இடம்

திமுகவுக்கு அடுத்தபடியாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 107.99 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி இரண்டாவது இடம் பிடித்துள்ளது. ஒடிசாவின் பிஜு ஜனதா தளம் கட்சி 73.34 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. ஜேடியு 65 கோடி ரூபாயும், டி.ஆர்.எஸ் 37.65 கோடி ரூபாயும் வருமானம் ஈட்டியுள்ளன.

அதிமுக

அதிமுக

அ.தி.மு.க 34 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது. அக்கட்சி ஆட்சியில் இருந்த 2019 - 2020ல், 89 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியது. இந்தத் தொகை, 2020 - 21ல் 34 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. அதே நேரத்தில், ம.தி.மு.க, பா.ம.க ஆகிய கட்சிகளின் வருமானம் கடந்த ஆண்டை விட உயர்ந்துள்ளது. கடந்த 2019ல் 1.50 கோடியாக இருந்த ம.தி.மு.கவின் வருமானம் 2020ல் 2.86 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பா.ம.கவின் வருமானம் 55.60 லட்சம் ரூபாயில் இருந்து 1.16 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

 செலவு கணக்கு

செலவு கணக்கு

மாநிலக் கட்சிகள் மொத்தம் ரூ.414.02 கோடி செலவு செய்ததாக கணக்கு காட்டியுள்ளன. கடந்த 2020 - 2021ஆம் நிதியாண்டில் கிடைத்த வருமானத்தை விட அதிகம் செலவிட்டுள்ளதாக தி.மு.க கணக்கு காட்டியுள்ளது. தி.மு.க 218 கோடி ரூபாய் செலவு கணக்கு காட்டியுள்ளது. அதிமுக 42.36 கோடி செலவு செய்ததாக கூறியுள்ளது.

English summary
According to the ADR report, DMK got highest income among regional parties in 2020-2021.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X