கனிமொழி ஆவேசம்.. தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாடு 10 தொகுதிகளை இழக்குமாம்! ஆமா அதென்ன Pro rata?
சென்னை: டிலிமிட்டேஷன் எனப்படும் தொகுதி மறுசீரமைப்பு காரணமாகத் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் லோக்சபாவில் தங்கள் தொகுதிகளை இழக்கலாம் என்பதே திமுக உள்ளிட்ட பல தமிழக அரசியல் கட்சிகள் வைக்கும் பிரதான குற்றச்சாட்டாக இருக்கிறது. இதற்கிடையே தொகுதி மறுவரையறை தொடர்பாக சில கேள்விகளை எழுப்பியுள்ள திமுக எம்பி கனிமொழி, இது குறித்து மத்திய அரசு விளக்கம் தர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த சில காலமாகவே தொகுதி என்பது தமிழ்நாடு அரசியல் அரங்கில் பேசுபொருளாகியுள்ளது. அதாவது மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் தங்கள் தொகுதிகளை இழக்கலாம் என்று திமுக உள்ளிட்ட பல தமிழக அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகிறது.

கனிமொழி
தமிழ்நாடு உள்ளிட்ட எந்தவொரு மாநிலமும் தற்போதுள்ள தொகுதிகளை இழக்காது என்று பாஜகவினர் கூறி வருகிறார்கள். இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியுள்ள திமுக எம்பி கனிமொழி, இது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக திமுக எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள வீடியோவில், "தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நமது முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பிய நிலையில், கோவையில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதற்குப் பதிலளித்திருந்தார்.
தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாடு எந்தவொரு தொகுதியையும் இழக்காது எனக் குறிப்பிட்டார். மேலும் Pro rata முறை பின்பற்றப்படும் என குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் உள்ள பாஜக தலைவர்களுக்கே Pro rata என்றால் என்னவென்று விளக்கம் தர முடியவில்லை. மத்திய அரசு மட்டுமே இது குறித்து விளக்கம் அளிக்க முடியும் என மாநில பாஜக தலைவர்களே கூறுகிறார்கள்.
10 தொகுதிகள் குறையலாம்
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாகவும் அது எப்படி மேற்கொள்ளப்படும் என்பது தொடர்பாகவும் நமது முதல்வர் ஸ்டாலின் முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளார். தொகுதி மறுசீரமைப்பு எப்படி செய்யப்படும் என்பது குறித்து தமிழ்நாடு உட்படத் தென் மாநிலங்களுக்கு விளக்கம் தரப்பட வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் தமிழ்நாடு குறைந்தது 10 இடங்களை இழக்க நேரிடும்.
மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய மற்ற தென் மாநிலங்களும் கூட தங்கள் தொகுதிகளை இழக்க நேரிடும். அதேநேரம் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த தவறிய மாநிலங்களுக்குக் கூடுதல் தொகுதிகள் கிடைக்கும். இதன் காரணமாகவே நமது முதல்வர் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்கள் தொகை அடிப்படையில் கூடாது
கடந்த காலங்களில் தொகுதி மறுசீரமைப்பு மக்கள் தொகை அடிப்படையிலே செய்யப்பட்டன. ஆனால், 1971 முதல் இந்த முறை நிறுத்தி வைக்கப்பட்டது. சில மாநிலங்கள் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த சரியான நடவடிக்கை எடுக்கவில்லை.. இதனால் மக்கள் தொகையைப் பின்பற்றி தொகுதி மறுசீரமைப்பு செய்தால் அது சரியாக நடவடிக்கை எடுத்த மாநிலங்களைத் தண்டிப்பது போல இருக்கும் என்பதாலே இந்த முறை நிறுத்தி வைக்கப்பட்டது.
விளக்கம் வேண்டும்?
எனவே, இந்த விவகாரத்தில் விளக்கம் தர வேண்டும். தொகுதி மறுசீரமைப்பு எதன் அடிப்படையில் செய்யப்படுகிறது என்பது குறித்து மத்திய அரசு, உள் துறை அமைச்சர், பிரதமர் விளக்கம் தர வேண்டும். நமது தென்னிந்திய மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படக் கூடாது. நாம் நமது பிரதிநிதித்துவத்தை இழக்கக்கூடாது.
பாஜக தனது அரசியல் லாபங்களுக்காகத் தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் மக்கல் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களின் இடங்களைக் குறைக்கக்கூடாது. தொகுதி மறுசீரமைப்பு, Pro rata குறித்து விளக்கம் கொடுத்துக் குழப்பத்தைத் தீர்க்க வேண்டும். தென் மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி!












Click it and Unblock the Notifications