அதிபரே! ஆமையின் வால் ஒட்ட நறுக்கப்படும் - சீமானின் பதிவுக்கு திமுக எம்.பி.செந்தில்குமார் பதில்
சென்னை: மின்வெட்டு தொடர்பாக ட்விட்டரில் விமர்சித்திருந்த சீமானை, ஆமையின் வால் ஒட்ட நறுக்கப்படும் என தருமபுரி திமுக எம்.பி. ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.
Recommended Video
திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து அக்கட்சினர் திராவிட மாடல் அரசின் சாதனைகள் என பட்டியலிக்கு கொண்டாடி வருகின்றனர்.
அதேநேரம் அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஓராண்டுகால திமுக அரசை விமர்சித்து வருகின்றனர்.

சீமான் விமர்சனம்
அந்த வகையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்விட்டரில் வெளியிட்ட பதிவு நேற்று ட்விட்டரில் அதிகளவில் டிரெண்டானது. "ஏப்பா சீமான்.. இந்த ஆட்சியின் ஒரு ஆண்டு சாதனையை டிவில போடுறாங்கலாம்.. அது என்னனு பார்க்கலாம்னு பாத்தா எழவு கரண்ட் இல்லப்பா.. அது தான் பெரியம்மா திராவிட மாடல்..!" என அவர் தமிழ்நாட்டில் நிலவும் மின் தடையை பிரச்சனையை சுட்டிக்காட்டி பதிவிட்டிருந்தார்.

செந்தில் பாலாஜி பதில்
இதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "கடும் கோடையிலும் உச்சபட்ச மின் தேவை இருந்த போதும் தமிழ்நாடு மின் வாரியம் மிகச் சிறப்பாகக் கையாண்டு வருகிறது. அண்ணன் சமீபத்தில் குடியேறி இருக்கும் கடற்கரையோர சொகுசு பங்களாவின் மின் இணைப்பு எண்ணைக் கொடுத்தால் அங்கு 'உண்மையிலேயே' மின் வெட்டு இருந்ததா என்பதை விசாரித்துச் சொல்கிறேன்." எனக் குறிப்பிட்டு இருந்தார்.

குடிசையில் இடம் கிடைக்குமா?
இதற்கு மீண்டும் ட்விட்டரில் பதிலளித்த சீமான், "மின்சாரத்துறை அமைச்சர் அன்புத்தம்பி செந்தில் பாலாஜி அவர்களுக்கு! அண்ணனின் கடற்கரையோர வாடகை சொகுசு பங்களாவில் நீங்கள் வந்து குடியிருங்கள். நீங்கள் ரொம்பநாளா குடியிருக்கிற 'குடிசையில' அண்ணன் தங்கிக்கொள்ள தயவுசெய்து அனுமதி கொடுங்கள்!" என தெரிவித்து இருந்தார்.

மின் இணைப்பு எண் கொடுங்க
சீமானின் இக்கருத்துக்கு மீண்டும் செந்தில்பாலாஜி ட்விட்டரில் பதிலளித்துள்ளார். அதில், "குடிசையோ- மாளிகையோ அரசாங்க இல்லத்தில் தங்குவதற்கு, மக்கள் வாக்களித்து சட்டமன்றத்துக்கு அனுப்ப வேண்டுமே! விரும்பினால், கரூர் வீட்டில் விருந்தினராக தங்க எங்கள் அன்பு உண்டு. அதுசரி, சொகுசு பங்களாவில் மின்தடை ஏற்பட்டதாகச் சொன்னீர்கள். வீட்டின் மின் இணைப்பு எண்ணைக் கேட்டிருந்தேன்!" எனப் பதிவிட்டுள்ளார்.

செந்தில்குமார் விளக்கம்
இந்த நிலையில் சீமானின் கருத்து குறித்து தருமபுரி திமுக எம்.பி. செந்தில்குமார் ட்விட்டரில் கருத்திட்டுள்ளார். அதில், "அதிபரே! உங்களுக்கு என்ன., என்ன வேண்டுமானாலும் கேட்பிங்க. ஆனா தப்பான விலாசதுல கேட்கிறீங்க. உங்களுக்கு படி அளக்க இது உங்க அதிமுகவும் கிடையாது. உங்க பாஜகவும் கிடையாது. இது உடன் பிறப்புகளின் திமுக. ஆமையின் வால் ஒட்ட நருக்கப்படும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications