ஆளுநர் ரவி டெல்லி போவது இதற்காகத்தானா? ஜனாதிபதியிடம் பேசியதை பகிரங்கமாக சொல்ல முடியாது : டி.ஆர்.பாலு
சென்னை : நாங்கள் குடியரசுத் தலைவரைச் சந்தித்துப் பேசியதன் தொடர்ச்சியாக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி செல்லக்கூடும் என திமுக எம்.பி டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்து திமுக எம்.பிக்கள் டெல்லி சென்று குடியரசுத் தலைவரைச் சந்தித்து முறையிட்ட நிலையில் இன்று ஆளுநர் ரவி டெல்லி சென்றுள்ளார்.
இன்று டெல்லி புறப்பட்டுச் சென்ற தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு சட்டப்பேரவை விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் குடியரசுத் தலைவரை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய திமுக எம்.பி டி.ஆர்.பாலு, நாங்கள் குடியரசுத் தலைவரை சந்தித்து பேசியதன் தொடர்ச்சியாக, கவர்னர் ரவி டெல்லி செல்லலாம் என்று நினைக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் - திமுக மோதல்
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 9ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது தமிழ்நாடு அரசு தயாரித்த ஆளுநர் உரையின் சில பகுதிகளை படிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்தார். அதேசமயம், ஆளுநர் உரையில் இடம்பெற்றிராத சில கருத்துகளையும் ஆளுநர் பயன்படுத்தினார். இதையடுத்து, விதி 17ஐ தளர்த்தி சட்டசபையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநரின் இந்த செயலுக்கு தனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்டதுடன், தமிழ்நாடு அரசு அச்சிட்டு தந்த வாசகங்கள் அல்லாமல் ஆளுநர் தானாக படித்தவற்றை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் எனவும் தீர்மானம் கொண்டுவந்தார். இதைத்தொடர்ந்து ஆளுநர் ரவி சட்டப்பேரவையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.

முக்கியமான மூவ்
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சட்ட நிபுணர்கள், மூத்த வழக்கறிஞர்கள், முக்கிய நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி ஆளுநர் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்த முடிவெடுக்கப்பட்டது. சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றியபோது நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பாக தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, திமுக எம்.பி.க்கள் ஆ.ராசா, பி.வில்சன் மற்றும் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் அடங்கிய குழுவினர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தனர். முதல்வர் ஸ்டாலின் வழங்கிய சீலிடப்பட்ட கவரை அவர்கள் குடியரசு தலைவரிடம் ஒப்படைத்தனர்.

டிஆர் பாலு
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு, "முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை சீலிடப்பட்ட கவரோடு குடியரசுத் தலைவரிடம் வழங்கினோம். தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 9-ஆம் தேதி, அவை மரபுகளை மீறி ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்டது பற்றி எடுத்துரைத்தோம். முதலமைச்சரின் கடிதத்தில் அன்றைய சம்பவங்கள் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன. அதை வாசித்துவிட்டு குடியரசுத் தலைவர் முடிவெடுப்பார். அவர் என்ன முடிவெடுப்பார் என்பதை நாம் கணிக்க முடியாது. " எனத் தெரிவித்தார்.

டெல்லி சென்ற ஆளுநர்
இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். 2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார். இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. இவர் இன்றும் நாளையும் டெல்லியில் இருப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த பயணத்தின்போது, ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு சட்டப்பேரவை விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அல்லது குடியரசுத் தலைவரை சந்திப்பாரா என்பது குறித்து இதுவரை அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் குடியரசுத் தலைவரை ஆளுநர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எங்கள் புகார் காரணமாக
இந்நிலையில் டெல்லியில் இருந்து திரும்பிய டி.ஆர்.பாலு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "தமிழ்நாடு ஆளுநர் சட்டமன்றத்தில் எப்படி செயல்பட்டார் என்பதை பற்றி, ஜனாதிபதி திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து சொல்லிவிட்டு வந்துள்ளோம். கவர்னர் ரவி டெல்லி செல்ல இருப்பது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. நாங்கள் ஜனாதிபதியை சந்தித்து பேசியதன் தொடர்ச்சியாக, கவர்னர் ரவி டெல்லி செல்கிறார் என்று நினைக்கிறோம். ஜனாதிபதியிடம் நாங்கள் என்ன பேசினோம் என்பதை முழுமையாக தெரிவிக்க முடியாது. நாங்கள் என்ன பேசினோம் அங்கு என்ன நடந்தது என்பது பற்றி பொது இடத்தில் பகிரங்கமாக கூற முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.
-
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி












Click it and Unblock the Notifications