Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஆபரேஷன் சி".. ஸ்டாலின் கையில் எடுக்கும் புதிய அஸ்திரம்.. புள்ளிகளுக்கு வைக்கப்படும் குறி.. பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஸ்டாலின் ஆபரேஷன் சி என்ற திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளதாக அறிவாலய வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.

முதல்வர் ஸ்டாலின் தற்போது ஆளுனர் ரவியுடன் மோதல், மின்சார நிலக்கரி தட்டுப்பாடு விவகாரம், அமைச்சரவையை மாற்ற ஏற்பாடுகள் என்று பல விஷயங்களில் பிசியாக இருக்கிறார்.

இதற்கு இடையில் இன்னொரு பக்கம் திமுக உட்கட்சி தேர்தல் மீதும் அவர் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்.

உட்கட்சி தேர்தல்

உட்கட்சி தேர்தல்

திமுகவில் தற்போது பல்வேறு பதவிகளுக்கு உட்கட்சி தேர்தல் நடைபெறுகிறது. பேரூராட்சி, நகராட்சியில் கடந்த 22ம் தேதி தொடங்கிய தேர்தல் இன்று வரை நடக்கிறது. இதில் வட்ட அவைத்தலைவர், வட்டச்செயலாளர்,வட்ட துணைச் செயலாளர்கள், பொருளாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்வாகி வருகின்றனர். மாநகராட்சிகளில் கட்சி நிர்வாகிகளுக்கான தேர்தல் நாளை மறுநாள் தொடங்கி மே 1ம் தேதி வரை நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்ப விநியோகம் எல்லாம் ஏற்கனவே முடிந்துவிட்டது.

 முதல்வர் ஸ்டாலின் ஜனநாயகம்

முதல்வர் ஸ்டாலின் ஜனநாயகம்

இந்த உட்கட்சி தேர்தல் என்பது மிகவும் கண்டிப்புடன் நடந்து வருகிறது. பொதுவாக திமுக உட்கட்சி தேர்தல் என்றால் மிகவும் ஒழுங்குடன், ஜனநாயகத்துடன் நடக்கும். அமைப்பு ரீதியாக கட்சியை அடிமட்ட அளவில் பலப்படுத்தும் வகையில் இந்த தேர்தல் இதுநாள் வரை நடந்து இருக்கிறது. இந்த முறையும் அதேபோல் ஜனநாயக முறைப்படி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட வேண்டும். கட்சிக்குள் இருக்கும் ஒழுங்கு முறையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறாராம்.

போட்டி

போட்டி

சில இடங்களில் ஒரே பதவிக்கு பலர் ஆசைப்படலாம். அங்கே ஜனநாயக முறைப்படி தேர்தல் வைத்து தேர்வு செய்யுங்கள். மற்ற இடங்களில் தகுதி உள்ள நிர்வாகிகளுக்கு மற்றவர்கள் விட்டுக்கொடுங்கள். தேவையின்றி போட்டி செய்து, மோதல்களுக்கு வழி வகுக்க வேண்டாம். தேர்தலில் தேர்வாகும் நிர்வாகிகளுக்கு மற்ற எல்லோரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தேவையின்றி சண்டை இருக்க கூடாது என்று நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வாய் மொழி உத்தரவு போட்டு இருக்கிறாராம்.

டாப் தலைகள் இறக்கப்பட்டனர்

டாப் தலைகள் இறக்கப்பட்டனர்

இது போக கட்சியில் மாவட்டங்கள், ஒன்றியங்கள், பகுதிகள் எல்லாம் முறையாக பிரிக்கப்பட்டு உள்ளதா என்று முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்ய உத்தரவிட்டு இருக்கிறாராம். இதற்காக மூத்த நிர்வாகிகள் ஆ ராசா, கே என் நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் அடங்கிய குழுவும் களமிறக்கப்பட்டு இருக்கிறதாம். மாவட்டங்கள் எப்படி உள்ளன. எங்காவது மாவட்ட வரையறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டுமா, கூடுதலாக இருக்கும் மாவட்டங்களை குறைக்க வேண்டுமா என்று ஆலோசனைகளை இவர்கள் வழங்க உள்ளனராம்.

ஆபரேஷன் சி

ஆபரேஷன் சி

இந்த நிலையில்தான் கோவை மாவட்டத்திற்காக முதல்வர் ஸ்டாலின் ஆபரேஷன் சி என்ற பிளானை கையில் எடுத்து இருக்கிறாராம். அதன்படி கோவையில் கடந்த உள்ளாட்சி தேர்தலின் போதே கோஷ்டி மோதல் இருந்தது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தேர்தல் பொறுப்பு கொடுக்கப்பட்டதை அங்கு இருந்த மாவட்ட நிர்வாகிகள் விரும்பவில்லை. கோவையில் 2 தொகுதிக்கு 1 மாவட்டம் என்று 5 மாவட்டங்கள் உள்ளன. இதில் சிலர் செந்தில் பாலாஜிக்கு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

கோவை வெற்றி

கோவை வெற்றி

ஆனால் அதையும் மீறி கோவையில் திமுக வென்றது. அதோடு செந்தில் பாலாஜியை நேரில் அழைத்தும் கூட முதல்வர் ஸ்டாலின் பாராட்டி இருந்தார். இந்த நிலையில் தேர்தலின் போது சரியாக ஒத்துழைப்பு அளிக்காத நிர்வாகிகளை பற்றி செந்தில் பாலாஜி முதல்வர் ஸ்டாலினிடம் புகார் பட்டியல் வாசித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்தே தற்போது கோவையில் அமைப்பு ரீதியான மாற்றம், நிர்வாகிகள் மாற்றத்தை செய்ய முதல்வர் ஆபரேஷன் சியை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏன் மாற்றம்?

ஏன் மாற்றம்?

இதன் மூலம் கோவையில் அமைப்பு ரீதியாக உள்ள 5 மாவட்டம் 3 ஆக குறைக்கப்படலாம் என்கிறார்கள். 3 தொகுதிக்கு ஒரு மாவட்டம் என்று 3 ஆக குறைக்கப்படும். இதனால் 2 பேரின் பதவி காலியாகும் என்கிறார்கள். முதல்வர் ஸ்டாலினுக்கு சென்ற புகாரில் இருக்கும் 2 புள்ளிகளின் பதவிகள் இந்த ஆபரேஷன் மூலம் பறிக்கப்படலாம் என்றும் திமுக வட்டாரத்தில் பேச்சாக உள்ளது. நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து இந்த மாற்றங்கள் நடப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+