திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக 23 கட்சிகளுடன் பிரம்மாண்ட கூட்டணி அமைத்து களத்தில் முந்திக் கொண்டிருக்கிறது. திமுக மாணவரணி செயலாளராக இருந்த ராஜீவ் காந்தி, சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட காய் நகர்த்தி வருகிறார். இந்நிலையில் மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்த ராஜீவ் காந்தி திடீரென மாற்றப்பட்டுள்ளார். அந்தப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ள ஈரோட்டைச் சேர்ந்த வீரமணி திமுக மாணவரணியின் முதல் பெண் செயலாளர் ஆவார்.
நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக இருந்தவர் ராஜீவ் காந்தி. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு அந்தக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். திமுகவில் இணைந்தவுடன் அவருக்கு ஊடக பிரிவு இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பிறகு திமுக மாணவரணி தலைவராக நியமிக்கப்பட்டார். (DMK Rajiv Gandhi)

ராஜீவ் காந்தி பதவி
ஊடக விவாதங்களில் கலந்து கொண்டு தன்னுடைய கருத்துகளை கூறி வந்தார். கடந்த 2025 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி திமுகவின் மாணவரனி செயலாளராக நியமிக்கப்பட்டார். நேற்றுடன் அவர் திமுக மாணவரணி செயலாளராக நியமிக்கப்பட்ட ஓராண்டு நிறைவடைந்துள்ளது. திமுகவில் இணைந்த குறுகிய காலத்தில் அவருக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டன.
இதுகுறித்து ராஜீவ் காந்தி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திமுக மாணவர் அணி செயலாளராக பொறுப்பேற்று இன்றோடு ஓராண்டை நிறைவு செய்கிறேன். இந்த எளியவனுக்கு கழகத்தின் உயர் பொறுப்புகளின் ஒன்றான கழக போராட்ட வரலாற்றை தாங்கி நிற்கும் கழகத்தின் மாணவர் அணி செயலாளர் பொறுப்பு வழங்கி, கழகப் பணியாற்ற வாய்ப்பளித்த கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோருக்கு என்றென்றும் நன்றி உடையவனாக இருப்பேன்.
பணிகள் குறித்து பதிவு
மாவட்டந்தோறும் கள ஆய்வு செய்தும், கீழடி அகழாய்வை அங்கீகரிக்காத ஒன்றிய அரசைக் கண்டித்து மதுரையில் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தி, கோவில் நிதியில் கல்லூரி கட்ட எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி கூறியதைக் கண்டித்து கோவையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தை கழக மாவட்டந்தோறும் மிகப்பெரிய அளவில் நடத்தி கழகத் தலைவரோடு மாணவர்கள் மொழிப்போர் தியாகிகளின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி, கழகத் தலைவர் அவர்களின் முத்தான திட்டங்களை துண்டறிக்கைகள் மூலம் கல்லூரி மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பது மற்றும் கல்லூரி வாயில் கூட்டம், கல்லூரி மாணவர்கள் சந்திப்பு, கழகப் பணியில் மாணவர்களை ஒருங்கிணைத்து செயலாற்றியது எனத் தொடர்ந்து கழக மாணவர் அணியை ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுத்தியிருக்கிறோம் என்று கூறியிருந்தார்.
திடீரென மாற்றம்
இந்தப் பதிவு வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுக மாணவரணி துணை செயலாளராக இருந்த வீரமணி திமுக மாணவரணி செயலாளராக நியமிக்கப்படுகிறார். மாணவரணி செயலாளராக இருந்த ராஜீவ் காந்தி திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார் என்று கூறியுள்ளார்.
ஈரோட்டைச் சேர்ந்த வீரமணி திமுக மாணவரணியின் முதல் பெண் செயலாளர் என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ள நிலையில் திமுக மாணவரணி செயலாளராக இருந்த ராஜீவ் காந்தி மாற்றப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
"செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிட காரணம் இதுதான்" - பிரச்சாரத்தில் ஓப்பனாக சொன்ன முதல்வர் ஸ்டாலின் -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
சென்னையின் அடுத்த மேயர் நீங்கள் தானா? கேள்வி வந்ததும் திவ்யா சத்யராஜ் முகத்தில் அவ்வளவு சிரிப்பு! -
பஞ்சாயத்து.. பிரசாரம்.. அனல் பறக்கும் 'கேப்டன்' கோட்டை! பிரேமலதா முடிவால் அப்செட்டில் உடன்பிறப்புகள் -
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக் -
கரூர் டூ கோவை தெற்கு.. செந்தில் பாலாஜிக்கு தொகுதியை மாற்றியது ஏன்? ஸ்டாலின் கொடுத்த விளக்கம்! -
அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது.. திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஸ்டாலின்! ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications