“டங்க் ஸ்லிப்” ஆச்சு.. பாஜகவில் 4 நடிகைகள் ”ஐயம்” என்றே சொல்ல வந்தேன்! மழுப்பிய திமுக சைதை சாதிக்
சென்னை: திமுக பொதுக்கூட்டத்தில் பாஜகவில் 4 நடிகைகள் குறித்து இரட்டை அர்த்தத்தில் தவறான வார்த்தையில் பேசியதாக திமுக பேச்சாளர் சைதை சாதிக் மீது விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் ஐயம் என்று சொல்வதற்கு பதில் வாய் தவறி அதுபோல் பேசிவிட்டதாக கூறி இருக்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக 2வது முறை தேர்வு செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து சென்னை ஆர்.கே.நகரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக பேச்சாளர் சைதை சாதிக் பாஜகவை சேர்ந்த நடிகைகளை இரட்டை அர்த்தத்தில் பேசியது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

ஆங்கில வார்த்தை
அவர் பேசியதாவது, "பாஜகவில் இருக்கும் தலைவர்களை பொறுத்தவரை நடிகைகள் குஷ்பு, நமிதா, காயத்ரி ரகுராம், கவுதமி 4 பேருமே ****." என்று அவர்களை குறிப்பிட்டு ஆங்கிலத்தில் தவறான அர்த்தம் தரும் வார்த்தையை பயன்படுத்தினார். குஷ்பு தாமரை மலர்ந்தே தீரும் என்று தலை மேல் கையை உயர்த்தி சொல்வதாக சாதிக் ஒருமையில் பேசினார்.

இரட்டை அர்த்த பேச்சு
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தலைமுடி பற்றியும் விமர்சித்து பேசிய அவர், குஷ்பு திமுகவில் இருக்கும்போது அவரை வைத்து இளைய அருணா கூட்டம் கூட்டியதை இரட்டை அர்த்தம் தரும் வகையில் சைதை சாதிக் பேச அங்கு சிரிப்பலை எழுந்தது. சைதை சாதிக்கின் இந்த பேச்சுக்கு பலர் கண்டனம் தெரிவித்தனர்.

குஷ்பு கண்டனம்
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட குஷ்பு, "பெண்களை இழிவுபடுத்தும் ஆண்களிடம், அவர்கள் வளர்ந்த விதம் மற்றும் அவர்கள் வளர்க்கப்பட்ட நச்சுத்தன்மையான சூழலை பார்க்க முடிகிறது. ஒரு பெண்ணின் கருப்பையை ஆண்கள் அவமதிக்கிறார்கள். இந்த ஆண்கள்தான் தங்களை கலைஞரின் சீடர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள். இதுதான் முதலமைச்சர் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியா?" என கேள்வி எழுப்பினார்.

கனிமொழி மன்னிப்பு
இதற்கு பதிலளித்த திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி, "பெண்ணாகவும், மனிதராகவும் இந்த பேச்சுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பேசப்பட்ட இடம், அவரது கட்சி எதுவாக இருந்தாலும் இந்த பேச்சை ஏற்க முடியாது. முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் திமுகவால் இந்த பேச்சை ஒருபோதும் ஏற்க முடியாது." என்றார்.

காவல்நிலையத்தில் புகார்
இந்த நிலையில் சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக மகளிர் அணியினர் புகாரளித்து இருக்கிறார்கள். மாநில பொதுச்செயலாளர் நதியா சீனிவாசன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் புகாரளித்துள்ளனர்.

சைதை சாதிக் மழுப்பல்
இதுகுறித்து தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் திமுக பேச்சாளர் சைதை சாதிக் விளக்கம் கொடுத்து இருக்கிறார். அதில், "4 நடிகைகளை வைத்து பாஜக கட்சி நடத்துகிறது. எங்களுக்கு என்ன ஐயம் என்றால், என்றே நான் பேச வந்தேன். அது மாறிவிட்டது." என்று கூற நெறியாளர், நீங்கள் சொல்வது அந்த ஃப்ளோவில் இல்லை என்று சொன்னார். உடனே சைதை சாதிக், "ஐயம் என்றுதான் சொல்ல வந்தேன்." என்றே பதிலளித்தார். நெறியாளர் பார்ப்பவர்கள் முட்டாளா என்று கேட்க, அதற்கு நான் என்ன செய்வது." என்று பதிலளித்தா சாதிக்.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications