துரைமுருகனை கவனித்தீர்களா! டேப்லெட்டை ஓரம் கட்டிவிட்டு என்ன செய்தார் தெரியுமா? சட்டசபை ருசிகரம்!
சென்னை: தமிழக சட்டசபையின் 2023ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் அமைச்சர் துரைமுருகன் கெத்து காட்டிய நிகழ்வு நடந்துள்ளது.
ஆளுநர் உரையின் போது அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் சீரியஸாக டேப்லெட்டில் அவரது உரையை வாசித்துக் கொண்டிருக்க, அமைச்சர் துரைமுருகனோ தனக்கு கொடுக்கப்பட்ட டேப்லேட்டை தூக்கி ஓரமாக போட்டுவிட்டு நமக்கென்னவென்று அமர்ந்திருந்தார்.
இதனிடையே முதலில் டேப்லெட்டை கையில் எடுத்து அதை ஆன் செய்ய முயன்ற துரைமுருகன், பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை அதை அப்படியே ஓரமாக போட்டுவிட்டார்.

சட்டசபை கூட்டம்
தமிழக சட்டசபையின் 2023ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. கூட்டம் தொடங்கியவுடன் ஆளுநருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் தமிழ்நாடு வாழ்க என கோஷம் எழுப்பியதோடு வெளிநடப்பும் செய்தனர். இவர்களை அவை முன்னவரான அமைச்சர் துரைமுருகன் சமாதானப் படுத்துவர என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சைலண்டக அமர்ந்து ஆளுநருக்கு எதிரான முழக்கத்தை ரசித்தார்.

டேப்லெட்
இதையடுத்து ஆளுநர் தனது உரையை வாசிக்கத் தொடங்கியதும் எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் மிக சீரியஸாக தங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த டேப்லெட் சாதனத்தை ஆன் செய்து ஆளுநர் உரையை படித்து பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் மூத்த அமைச்சர் துரைமுருகனோ டேல்லெட்டை தூக்கி ஓரமாக வைத்துவிட்டு ஆளுநரை பார்ப்பதும், எதிர்க்கட்சி உறுப்பினர்களை பார்ப்பதுமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

உடல்மொழி
மேலும், தனது அருகில் அமர்ந்திருந்த அமைச்சர் கே.என்.நேரு டேப்லெட்டில் ஆளுநர் உரையை கவனித்துக் கொண்டிருந்த போது, அதிலென்ன தெரிகிறது என்பது போல் ஒரு ரியாக்ஷனை வெளிப்படுத்தி அவரை மேலும் கீழுமாக பார்த்து வழக்கம் போல் தனது உடல்மொழியால் கெத்துகாட்டினார் துரைமுருகன். சட்டசபை கூட்டத் தொடர் லைவ் செய்யபடுகிறது என்பதை அறிந்தும் எப்போதும் போல் தனது வழக்கமான நடவடிக்கைகளில் இருந்து அவர் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை.

ஓரமாக வைத்துவிட்டு
இதனிடையே முதலில் டேப்லெட்டை கையில் எடுத்து அதை ஆன் செய்ய முயன்ற துரைமுருகன், பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை அதை அப்படியே ஓரமாக போட்டுவிட்டார். காகிதமில்லா சட்டசபை என்ற முயற்சியின் கீழ் புத்தகங்களுக்கு பதில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு டேப்லெட்டில் ஆளுநர் உரை கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications