"கன்பார்ம்டு".. லகானை சுழட்டும் மு.க. ஸ்டாலின்.. யார் அந்த 3 "தலை"கள்.. இந்த முறை மிஸ் ஆகாதாம்

திமுக அமைச்சர்கள் சிலரின் பதவிகள் பறிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்தடுத்த மக்கள் பணியில் திமுக அரசு ஆர்வம் காட்டி வந்தாலும், கட்சிக்குள் ஏகப்பட்ட இடியாப்ப சிக்கல்கள் உள்ளதாம்.. அதற்காகத்தான் முதல்வர் ஸ்டாலின் முக்கிய முடிவை விரைவில் எடுக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த முறை 10 வருடம் கழித்து திமுக ஆட்சியை பிடித்துள்ளது.. அதிரடி நடவடிக்கைகள், நலத்திட்டங்கள், வாக்குறுதிகளை நிறைவேற்றுதல் உள்ளிட்டவைகளில் முதல்வர் ஸ்டாலின் காட்டும் அக்கறை அதீதமானது..

ஆனால் அதேசமயம், இந்த ஆட்சி அமைந்ததில் இருந்தே சில அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து விமர்சனங்கள் எழ ஆரம்பித்துவிட்டன.. மேலும் சில அமைச்சர்கள் மீதான பெரிய அளவில் இம்பாக்ட் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

கண்டிப்பு

கண்டிப்பு

முதன்முதலில் அமைச்சரவை நியமிக்கப்பட்டு, அவரவர் பதவியேற்பு முடிந்ததுமே, சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் முதல்வர் தனியாக பேச்சு நடத்தினார்.. அப்போது, மக்கள் நலனில் முக்கிய கவனத்தை காட்ட வேண்டும், எதிர்க்கட்சிகள் இப்போதிருந்தே நம்மை கண்காணிக்க ஆரம்பித்துவிட்டனர், யார் மீதாவது புகார்கள் வந்தால், நிச்சயம் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி, கறாரான சில இன்ஸ்ட்ரக்ஷனையும் தந்திருந்தார்.

 புகார் மேல் புகார்

புகார் மேல் புகார்

ஆனாலும், சில அமைச்சர்கள் வழக்கம்போல தங்களுடைய செயல்பாடுகளை மாற்றிக் கொள்ளாமல், அப்படியேதான் நடமாடி கொண்டிருக்கிறார்கள்.. குறிப்பாக மூத்த அமைச்சர்கள் தான் இப்படியெல்லாம் செய்வதாக தலைமைக்கு புகார் போயுள்ளது.. ஆட்சி ஆரம்பித்ததுமே அமைச்சரவையில் கை வைக்க கூடாது என்று முதல்வர் அமைதி காத்ததாக சொல்லப்பட்டது.. இதற்கு பிறகு சட்டப்பேரவை பட்ஜெட், உள்ளாட்சி தேர்தல் என அடுத்தடுத்த பரபரப்புகள் தமிழகத்தை சூழ்ந்தன.

விமர்சனங்கள்

விமர்சனங்கள்

அப்போதுகூட, அமைச்சர்கள் செயல்பாடுகள் பற்றின ரிப்போர்ட் ஸ்டாலினுக்கு போயுள்ளது.. ஒன்றும் சொல்லி கொள்கிற மாதிரி அமைச்சர்கள் செயல்படுவதில்லை, அதிலும் தலைமைக்கு எப்போதும் நெருக்கமாக இருக்கும் ஒரு அமைச்சரின் செயல்பாடுகளும், பேட்டிகளும் விமர்சனத்துக்குள்ளாகி வருகின்றன என்றும் அந்த ரிப்போர்ட்டில் சொல்லப்பட்டது.

 ஸ்டாலின் நடவடிக்கை

ஸ்டாலின் நடவடிக்கை

மூத்த அமைச்சர் என்றில்லை.. சென்னைக்கு அருகே முக்கிய பகுதியை சேர்ந்த அமைச்சர், கொங்கு மண்டலத்தில் உள்ள பெண் அமைச்சர், என நாலாபக்கமும் புகார்கள் தலைமைக்கு பறந்தன.. அப்போதுதான் அமைச்சரவையில் மாற்றம் செய்தே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாராம் ஸ்டாலின்.. ஆனால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடப்பதால், இந்த நடவடிக்கையை தள்ளி போட்டுள்ளதாகவும், எப்படியும் தேர்தல் முடிந்தவுடன் சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்படும் என்றும் முணுமுணுக்கப்பட்டது.

 வாக்கு எண்ணிக்கை

வாக்கு எண்ணிக்கை

இப்போது நகர்ப்புற தேர்தலும் நடந்து முடிந்துவிட்டது.. நாளைக்கு வாக்கு எண்ணிக்கை நடக்க போகிறது.. இதற்கு பிறகு, மேயர் மற்றும் சேர்மன்கள் பதவியேற்பு விழா நடத்தப்படும்.. அதற்கு பிறகு நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறது.. இந்த பட்ஜெட் தயாரிப்பு பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றுவிட்டதாம்.. இன்னும் தேதி குறிக்கப்படுவதுதான் பாக்கி என்கிறார்கள்.

 இலாகா மாற்றம்

இலாகா மாற்றம்

அநேகமாக மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என்கின்றன கோட்டை வட்டாரங்கள். இதற்கு இடைப்பட்ட நேரத்தில்தான், பட்ஜெட் கூட்டம் முடிந்ததும், அமைச்சரவை மாற்றம் அல்லது இலாகா மாற்றம் செய்ய ஸ்டாலின் திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அமைச்சரவை மாற்றம் குறித்து பல முறை செய்திகள் கசிந்தாலும், இந்த முறை மாற்றம் உறுதி என்கிறார்கள்.. அதிலும் குறைந்த பட்சம் இலாகாவை மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளாராம் முதல்வர்.

 3 அமைச்சர்கள்

3 அமைச்சர்கள்

அதிலும் அந்த 3 அமைச்சர்கள் குறித்த தொகுதி செயல்பாடுகள் சரியில்லை என்பதால், அவர்களுக்குதான் முதல் கல்தா கொடுக்கப்படும் என்று கூறுகிறார்கள்.. அவர்களிடம் உள்ள துறையை பறித்து, உதயநிதி அல்லது வேறு சில அச்சர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் சொல்கிறார்கள்.இதைவிட இன்னொரு பேச்சும் அடிபடுகிறது.. ஒருவேளை சீனியர் அமைச்சர்கள் மீது நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியாத பட்சத்தில், அவர்களின் இலாகாக்கள் குறைக்கப்பட்டு டம்மியாக்கப்பட்டாலே போதும் என்றும் திமுக மேலிடம் யோசித்து வருகிறதாம்.. எப்படியோ, இந்த முறை ஸ்டாலின் லகானை கையில் எடுக்க போவது உறுதி..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+