Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈபிஎஸ் இன்றோடு காலி.. ‘பதவியில்லா பழனி’ - உற்சாக ஓபிஎஸ் அணி.. எடப்பாடி எடுத்த ‘அதிரடி’ அஸ்திரம் ‘5’!

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஜூலை 11ஆம் தேதி அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டபோது, 4 மாதங்களுக்குள் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி இன்றோடு 4 மாதங்கள் முடிவடைவதால், எடப்பாடி பழனிசாமியின் பதவி காலாவதியாகிறது என்கிறார்கள் ஓபிஎஸ் தரப்பினர்.

பொதுச் செயலாளர் ஆவதற்காக ஏற்கனவே இணை ஒருங்கிணைப்பாளர் பதவியையும் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்து விட்டதால் இனி அவர் பதவியில்லா பழனிசாமி தான் என்கிறார்கள்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, வழக்கு முடியும் வரை பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த மாட்டோம் என உத்தரவாதம் அளித்தது எடப்பாடி தரப்பு. அதன் காரணமாக தேர்தல் நடத்தும் பேச்சை அதன்பிறகு எடுக்கவில்லை.

இந்நிலையில், பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் 4 மாத கால அவகாசம் முடிவடைவதால் எடப்பாடி பழனிசாமிக்கு இனி எந்தப் பதவியும் கிடையாது என ஓபிஎஸ் தரப்பினர் பேச ஆரம்பித்திருக்கின்றனர். ஆனால், அதற்கு பதிலடியாக அதிரடியாக ஒரு வாதத்தை முன்வைக்கிறது ஈபிஎஸ் டீம்.

நிரந்தர பொதுச் செயலாளர்

நிரந்தர பொதுச் செயலாளர்

முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக இருந்தவருமான ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, பொதுச் செயலாளராக ஆக்கப்பட்டார் சசிகலா. பின்னர், சசிகலாவை கட்சியில் இருந்து வெளியேற்றிவிட்டு, இரட்டைத் தலைமை பதவி உருவாக்கப்பட்டது. அதிமுக நிரந்தரப் பொதுச்செயலாளராக ஜெயலலிதாவே நீடிப்பார் எனத் தெரிவித்து ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் பொறுப்பேற்றனர். நான்கு ஆண்டுகள் இரட்டைத் தலைமையின் கீழ் பயணித்த அதிமுகவில், கடந்த ஜூன் மாதம் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.

அதிமுக பொதுக்குழு

அதிமுக பொதுக்குழு

கடந்த ஜூன் 23-ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்திலும் பிரச்சனை ஏற்பட்டது. ஐகோர்ட் இரு நீதிபதிகள் அமர்வு அளித்த உத்தரவால், அன்று ஒற்றைத் தலைமை குறித்து எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. அதிமுக அவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட தமிழ்மகன் உசேன், பொதுக்குழு மீண்டும் ஜூலை 11ஆம் தேதி கூடும் என அறிவித்தார். அதற்கு எதிராக ஓபிஎஸ் வழக்கு தொடுத்தபோதும், பொதுக்குழுவுக்கு தடை விதிக்கப்படவில்லை. ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில், ஜெயலலிதாவின் நிரந்தர பொதுச் செயலாளர் பதவியை ரத்து செய்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இ.பொ.செ எடப்பாடி

இ.பொ.செ எடப்பாடி


மேலும், கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை 4 மாதங்களில் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேர்தல் அதிகாரிகளாக நத்தம் விஸ்வநாதன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரை நியமித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு ஓபிஎஸ் போட்டியிடுவதை தடுக்கும் வகையில் இதுவரை இல்லாத அளவுக்கு பொதுச்செயலாளர் தேர்தலுக்கான விதிகளில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. 10 மாவட்டச் செயலாளர்கள் வழிமொழிய 10 மா.செக்கள் முன்மொழிந்தால் மட்டுமே பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட முடியும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 மாறி மாறி தீர்ப்பு

மாறி மாறி தீர்ப்பு


ஜூலை 11 பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன், பொதுக்குழு செல்லாது என்றும், அதிமுகவில் ஜூன் 23-ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததோடு, அதிமுக பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை நிலுவையில் உள்ளதால் இறுதி முடிவை எடுப்பதற்கு முன்பாக கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தக்கூடாது என்று உத்தரவிட்டு அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

நெருக்கடியில் தள்ளப்பட்ட ஈபிஎஸ் - எதிர்காலம்

நெருக்கடியில் தள்ளப்பட்ட ஈபிஎஸ் - எதிர்காலம்

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டார் ஈபிஎஸ். பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தி கட்சியை முழுமையாக கையில் எடுக்க ஈபிஎஸ் திட்டமிட்டிருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் எடப்பாடி அணியினருக்கு சிக்கல் ஏற்பட்டது. தற்போதைய சூழலில் பொதுக்குழு விவகாரத்தில் நவம்பர் 21ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி பிறப்பிக்கும் இறுதி உத்தரவே, அதிமுகவில் ஈபிஎஸ், ஓபிஎஸ்ஸின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

பதவியில்லா பழனிசாமி - 6வது தீர்மானம்

பதவியில்லா பழனிசாமி - 6வது தீர்மானம்

இந்நிலையில் தான் ஜூலை 11 பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 6வது தீர்மானத்தின்படி 4 மாதங்களில் நடைபெற்றிருக்க வேண்டிய பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்படவில்லை. இன்றோடு 4 மாதங்கள் நிறைவடைவதால் எடப்பாடி பழனிசாமி வகித்து வந்த ‘இடைக்கால பொதுச் செயலாளர்' பதவி காலாவதியாகிவிடும். ஏற்கனவே தனது இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்வதாக தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களைச் சமர்ப்பித்து விட்டார் எடப்பாடி பழனிசாமி. எனவே, இன்று முதல் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எந்தப் பதவியும் இல்லை. அவருக்கே பதவி இல்லாத போது, தற்காலிக பதவி காலத்தில் அவர் நியமித்த நியமனங்களும் செல்லாது, கூண்டோடு காலியாகிவிட்டார்கள் என விமர்சிக்கிறது ஓபிஎஸ் தரப்பு.

எடப்பாடி டீம் பதிலடி - தீர்மானம் 5

எடப்பாடி டீம் பதிலடி - தீர்மானம் 5

ஓபிஎஸ் தரப்பின் இந்த விமர்சனத்துக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு பதிலடி கொடுக்கிறது. நீங்க தீர்மானம் 6-ஐ வைத்து விமர்சிக்கிறீங்க.. தீர்மானம் 5-ஐ முழுசா படிச்சுப் பாருங்கப்பா எனக் கூறுகிறார்கள் ஈபிஎஸ் தரப்பினர். அதாவது, இடைக்கால பொதுச் செயலாளரை தேர்வு செய்த தீர்மானத்தில்,
"பொதுக்குழு உறுப்பினர்களின் பெரும்பான்மை முடிவின்படி விதி எண் 20.அவின் படி கழகப் பொதுச் செயலாளர் பொறுப்பு மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளதால், புதிய பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, கழக இடைக்கால பொதுச் செயலாளர் ஒருவரை தேர்வு செய்ய வேண்டியுள்ளது. அதன்படி, எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுகிறார்" என அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அட பொறுங்கப்பா

அட பொறுங்கப்பா

எனவே, பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தி முடித்து புதிய பொதுச் செயலாளார் தேர்ந்தெடுக்கப்படும் வரை எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளர் தான். நாங்கள் திட்டமிட்டபடி தேர்தலை நடத்தி இருந்தால் இந்நேரம் ஓபிஎஸ் வேறு ஏதாவது கட்சியிலேயே போய் சேர்ந்திருக்கிறார். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தான் எடப்பாடியார் நிரந்தர பொதுச் செயலாளர் ஆவதில் தாமதம் ஏற்படுகிறது, விரைவில் தீர்ப்பு வரும், ஓபிஎஸ் நிரந்தரமாக வெளியேற்றப்பட்டு, ஈபிஎஸ் நிரந்தர பொதுச் செயலாளர் ஆவார் எனச் சூளுரைக்கிறார்கள் எடப்பாடி பழனிசாமி அணியினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+