ஸ்டாலின் மனசில் "அந்த" ரணம்.. ஆமா.. இது லிஸ்ட்லேயே இல்லையே.. பாமக முடிவென்ன? விஷயத்துக்கு வந்த பாஜக
திமுகவுடன் பாமக இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன
சென்னை: தமிழக அரசியலில், முக்கியமான விஷயம் ஒன்று பரபரத்து வருகிறது.. வரப்போகும் எம்பி தேர்தலுக்கான மும்முரங்களையும் திமுக முன்னெடுத்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
அதிமுகவும் சரி, திமுகவும் சரி, தேர்தல் என்றாலே முதலில் பாமகவுடன் தான் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தும்.. காரணம், வடமாவட்டங்களில் அக்கட்சிக்கு செல்வாக்கு இருப்பதால், வன்னிய ஓட்டுக்களை வளைத்து போட முதலில் முந்திக் கொள்ளும்.
ஒருகட்டத்தில் பாமக எந்த கூட்டணியில் இருக்கிறதோ, அந்த கட்சி ஆட்சியை பெறும் என்பது கடந்த கால வரலாறு..

எடப்பாடி பழனிசாமி
அந்தவகையில், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில், பாமகவுக்கு குறிப்பிட்ட சதவீத ஓட்டுகள் இருப்பதால், சட்டசபை தேர்தலிலும் அக்கட்சியுடனான கூட்டணியை எடப்பாடி பழனிசாமி தொடர்ந்தார்.. இதற்காகவே, மற்ற சாதிகளின் அதிருப்தியை சம்பாதித்து கொண்டு வன்னியர் உள் ஒதுக்கீடு சட்டத்தையும் இயற்றினார்.. மேலும் சட்டசபை தேர்தலில் 23 தொகுதிகளையும் தாராளமாக ஒதுக்கினார்.. ஆனால், வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே பாமக வெற்றி பெற்றது.

விமர்சனங்கள்
இதனால் பாமக தரப்பு கடுமையான அதிர்ச்சிக்கு ஆளானது.. இதை ஓபனாகவே அன்புமணி வெளிப்படுத்தினார்.. பாமக இல்லை என்றால் அதிமுகவுக்கு குறைந்த இடங்களே கிடைத்திருக்கும் என்று விமர்சித்தார்.. இதற்கு பிறகு அதிமுக - பாமக இடையே சுமூகமான உறவு இல்லை.. அதனால் மறைமுகமாக திமுகவை ஆதரிக்க பாமக துவங்கியது.. ஒருசில விமர்சனங்களை திமுக அரசு மீது முன்வைத்தாலும், அடிப்படையில் இணக்கமான போக்கை கையாள பாமக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது..

கருணாநிதி
அதனால்தான் வன்னியர் உள்இட ஒதுக்கீடு விஷயத்தில் தம்பி ஸ்டாலின் நிறைவேற்றுவார் என்று ராமதாஸ் நம்பிக்கை கூறினார்.. அத்துடன் இது தொடர்பாக நடத்தவிருந்த கண்டன ஆர்ப்பாட்டத்தையும் நடத்த போவதில்லை என்று அறிவித்தார்.. பிறகு திடீரென, மறைந்த கருணாநிதி தன்னுடன் சினிமா பார்க்க வந்ததை, நெகிழ்ச்சியுடன் கூறி சில நாட்களுக்கு முன்பு பரபரப்பையும் ஏற்படுத்தினார் ராமதாஸ்.. இதெல்லாம் ஒருவேளை திமுகவுடனான அடுத்த கூட்டணிக்கான அச்சாரமாகவே பார்க்கப்பட்டு வருகிறது.

பாஜக ஓவர்டேக்
இதுதான் அதிமுக, பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. பாஜகவை பொறுத்தவரை, அதிமுகவை ஓவர்டேக் செய்து வருகிறது.. திமுகவுக்கு மாற்று தாங்கள்தான் என்ற பிம்பத்தை ஏற்படுத்த முனைப்பு காட்டி வருகிறது.. அதேசமயம் திமுகவுகு டஃப் தருவதற்காக பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் என்ற அவசியத்தையும் உணர்ந்துள்ளது.. அந்த வகையில், அதிமுக கூட்டணிக்குள் மீண்டும் பாமகவை கொண்டு வருவதற்கான முயற்சியையும் மறைமுகமாக எடுத்துள்ளதாக தெரிகிறது.

ரகசிய பேச்சு
அதனால், அன்புமணி மத்திய அமைச்சராக இருந்தபோது எழுந்த புகார்களை மறுபடியும் விசாரித்து, பாமகவுக்கு நெருக்கடி தர வேண்டும், அதன்மூலம் செக் வைக்க வேண்டும், அப்போதுதான் அக்கட்சி வழிக்கு வரும் என்று பாஜக நம்புகிறதாம்.. இதற்காகவே, அதிமுகவும் பாஜகவும் ரகசிய பேச்சு நடத்திய தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் பாமகவுக்கு சிக்கல் எழுந்துள்ளது.. இந்த அதிரடிக்கு பயந்து, வரப்போகும் எம்பி தேர்தலில், அதிமுகவுடனேயே கூட்டணியை தொடர போவதாக அறிவிக்கப் போகிறதா? அல்லது திமுகவுடன் இணைய போகிறதா? என்று தெரியவில்லை.

மூலப்பத்திரம்
ஒருவேளை திமுகவில் இணைவதாக இருந்தாலும், அதற்கு முதல்வர் ஸ்டாலின் ஒப்புக் கொள்வாரா என்று சந்தேகம்தானாம்.. இதற்கு 2 காரணங்கள் சொல்லப்படுகின்றன.. ஒன்று, முரசொலி நாளிதழின் மூலப்பத்திரம் தொடர்பாக அன்புமணி மீது ஸ்டாலினுக்கு கோபம் இன்னமும் உள்ளதாம்.. டாக்டர் ராமதாஸ் அன்று வெளியிட்ட அறிக்கையும், திமுக மேலிடத்துக்கு ரணமாகி உள்ளதாக தெரிகிறது.. இந்த கோபம் தணிந்தால்தான், பாமகவுடன் கூட்டணி ஏற்படும் என்கிறார்கள்..

திருமாவளவன்
மற்றொன்று, விசிக திமுக கூட்டணியில் உள்ளதால், அக்கட்சி இருக்கும்போது, பாமகவை உள்ளே அனுமதிக்கவும் ஸ்டாலினுக்கு தயக்கம் இருப்பதாக தெரிகிறதாம். வரப்போகிற எம்பி தேர்தலில் பலமான கூட்டணியை உருவாக்க முதல்வர் ஸ்டாலின் மாஸ்டர் பிளானில் இறங்கி உள்ளதாக கூறப்படும் நிலையில், அதில் பாமக இடம்பெறுமா? இல்லையா என்பது இனிமேல் தான் தெரியவரும்.. பார்ப்போம்.
-
கீழ்வேளூரில் வடிவேல் ராவணன், அம்பத்தூரில் சேகர்.. பாமகவின் 3 வேட்பாளர்களை அறிவித்த அன்புமணி! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி அறிவித்த எடப்பாடி! ஆனா 5 பவுன் நகை கடன் ரத்து இல்லையே! -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
சினிமாவில் சிகரெட் தடை டூ ‘மாற்றம் முன்னேற்றம்’ வரை - 2016இல் அன்புமணி செய்த கார்ப்பரேட் பிரச்சாரம் -
குறிவைத்து அடித்த எடப்பாடி பழனிசாமி.. வீழ்த்தப்பட்ட ஜெயக்குமார்.. அதிமுக 2021 தேர்தல் பிளாஷ்பேக் -
திருப்போரூர் அல்லது பாப்பிரெட்டிபட்டி.. செளமியா அன்புமணி களமிறங்கும் தொகுதி எது? -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
அய்யாவுக்கு கடைசி சான்ஸ்.. ’மாம்பழம்’ கேட்டு அடம் பிடிக்கும் ராமதாஸ்! இன்று கோர்ட்டில் விசாரணை! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?












Click it and Unblock the Notifications