Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டான் பார்த்து விட்டு ட்விட்டரில் விமர்சித்த டாக்டர் ராமதாஸ்..நன்றி சொன்ன சிவகார்த்திக்கேயன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்றுள்ள டான் படத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் எழுதியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் டான் படத்தை பார்த்து விட்டு ட்விட்டரில் விமர்சித்துள்ளார். பாடம் சொல்லும் படம் என்றும் கூறியுள்ளார் டாக்டர் ராமதாஸ். அவரது ட்வீட்டை ரீ ட்வீட் செய்து நன்றி கூறியுள்ளார் சிவகார்த்திக்கேயன்.

அட்லி உதவி இயக்குனரான சிபி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் எஸ் ஜே சூர்யா சமுத்திரக்கனி, பிரியங்கா மோகன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வெளியான டான் திரைப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

பள்ளி, கல்லூரி கால கலாட்டா திரைப்படமாக மட்டுமல்லாமல் ரசிகர்களை திரையரங்கில் கண்ணீர் விட்டு அழ செய்யும் அப்பா-மகன் செண்டிமெண்ட் திரைப்படமாக இந்த திரைப்படம் அமைந்தது.

 ரசிகர்கள் பாராட்டு மழையில்

ரசிகர்கள் பாராட்டு மழையில்

vசிவகார்த்திக்கேயன் திரைப்படங்கள் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடியதாக உள்ளது. நகைக்சுவைக்கு அதிக முக்கியத்துவம் தரும் படமாகவும் எடுக்கப்படுவதான் அதன் சிறப்பம்சம். டான் திரைப்படத்திலும் நகைக்சுவையோடு கடைசியாக அப்பா சென்டிமெண்ட் இடம்பெற்றுள்ளது பெரும்பாலானவர்களை கவர்ந்துள்ளது.

நம்பிக்கை தரும் படம்

நம்பிக்கை தரும் படம்

இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களை தொடர்ந்து கேலி செய்து வரும் நிலையில் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு நம்பிக்கை தரும் திரைப்படமாக இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது. சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்த நிலையில், டான் திரைப்படம் அதையும் தாண்டி வசூல் செய்திருக்கிறது.

டாக்டர் ராமதாஸ்

டாக்டர் ராமதாஸ்

தற்போது இந்த திரைப்படம் நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் டான் படத்தை பார்த்து விட்டு ட்விட்டரில் விமர்சித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் பார்த்தேன். "பெற்றோரை அவர்கள் இருக்கும் போதே கொண்டாடுங்கள் (Celebrate Your Parents When They Are With You)" என்ற பாடத்தை சொல்லும் அந்த திரைப்படம் அனைவராலும் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்!' என்று கூறியுள்ளார்.

Recommended Video

    படம் தான் முக்கியம் | சம்பளத்த யோசிக்க வேண்டாம் | Sivakarthikeyan | Don Success Meet *Kollywood
    சிவகார்த்திக்கேயன் நன்றி

    சிவகார்த்திக்கேயன் நன்றி

    பொதுவாகவே எந்த படத்தையும் பார்த்து பெரிதாக பாராட்டமாட்டார் டாக்டர் ராமதாஸ். நாடகக் காதலுக்கு எதிரான படங்கள் என்றால் பார்க்கலாம் என்று ட்விட்டரில் பதிவிடுவார். சமீபத்தில் புதிதாக எந்த சினிமாவையும் டாக்டர் ராமதாஸ் பெரிதாக பாராட்டவில்லை. இந்த நிலையில் டான் படத்தை பார்த்து விட்டு பாராட்டியுள்ளார். இந்த பதிவினை ரீ ட்வீட் செய்துள்ள சிவகார்த்திகேயன், ராமதாஸின் பதிவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+