சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உபவாசம் உயிர் கவசம்.. முன்னோர் சொன்னதில் அறிவியல் இருக்கு.. எப்படி.. விளக்குகிறார் டாக்டர் ஒய். தீபா

Google Oneindia Tamil News

சென்னை: உபவாசம் உயிர் கவசம் என்றால் என்ன? நம் உடலில் நோய் கிருமிகள் அண்டினாலும் அதை எதிர்கொள்வது எப்படி, கேன்சர், கட்டியை ஏற்படுத்தும் என்சைம்களை உடைப்பது எப்படி என்பது குறித்து அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையின் கைநுட்ப பிரிவின் தலைவர் டாக்டர் ஒய் தீபா அறிவுறுத்தியுள்ளார்.

Recommended Video

    உபவாசம் உயிர் கவசம்.. முன்னோர் சொன்னதில் அறிவியல் இருக்கு.. எப்படி.. விளக்குகிறார் டாக்டர் ஒய். தீபா

    இதுகுறித்து டாக்டர் ஒய் தீபா ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில், அண்மையில் ஒரு ஆய்வை படித்தேன். அதில் பல நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கையில் நம் இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவு என குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு காரணமாக புவர் சானிடேஷன், புவர் ஹைஜீன் என சொல்கிறார்கள்.

    ஆனால் நம் உடலில் எந்த ஒரு கிருமி நுழைந்தாலும் அதை எதிர்கொண்டு நம் உடல் எதிர்ப்பு சக்தியை உண்டு செய்து எதிர்த்து போராடும் அளவுக்கு உடல் தயார் நிலைக்கு செல்கிறது. இதனால்தான் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. இதுதான் காரணமே தவிர புவர் சானிடேஷன், புவர் ஹைஜீன் காரணம் அல்ல.

    உபவாசம்

    உபவாசம்

    நம் நாட்டில் பலதரப்பட்ட மதங்களை சேர்ந்த மக்கள் உள்ளார்கள். அவர்கள் உபவாசத்தை மேற்கொள்கிறார்கள். அதாவது முஸ்லிம் மதத்தினர் ரம்ஜான் நோன்பை கடைப்பிடிக்கிறார்கள். அது போல் கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையில் நோன்பிருக்கிறார்கள். இந்துக்களும் பல்வேறு பண்டிகைகளுக்கு நோன்பிருக்கிறார்கள்.

    நோன்பு

    நோன்பு

    ஒரு நாள் முழுவதும் உணவை எடுத்துக் கொள்ளாமல் மறுநாள் அந்த உண்ணாவிரதத்தை நாம் விடும் போது நம் உடலில் உள்ள செல்கள் அனைத்து மீண்டும் புத்துணர்ச்சி பெறுகின்றன. இதுதான் உபவாசம் உயிர் கவசம் ஆகும். இந்த கொரோனா காலத்தில் நம்மை எது காப்பாற்றியது என்பதை பார்ப்போம். ஆரோக்கியமான உணவும், இந்த நோன்பும்தான் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கியது.

    எதிர்ப்பு சக்தி

    எதிர்ப்பு சக்தி

    இந்த நோன்பிருக்கும் போது நம் உடலில் பலவிதமான எதிர்ப்பு சக்தி மீண்டும் உருப்பெறுகிறது. இதை பல ஆய்வுகளும் கூறுகின்றன. எளிதில் ஜீரணமாகும் காய்கறிகள், பழச்சாறுகளை நாம் எடுத்துக் கொள்ளும்போது நம் உடலில் ஸ்டெம் செல்கள் தூண்டப்படுகின்றன. இதனால் நமது உடலில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. இவைதான் தொற்றுகளை எதிர்த்து போராடும் வலிமையை நமக்கு கொடுக்கிறது.

    கொரோனா

    கொரோனா

    இந்த ஸ்டெம் செல்கள் தூண்டப்படுவதால் கொரோனா போன்ற எந்த நோயாக இருந்தாலும் அதை எதிர்த்து போராடி நம் உடல் மீண்டும் வலிமை பெற உதவுகிறது. எந்த வித நோய் தாக்குதலுக்கும் ஆளாமல் இருந்தால் நம் உடல் எப்படி எதிர்ப்பு சக்தியை பெறும்? இந்த கொரோனாவை எதிர்த்து நாம் போராடியதன் காரணமாகத்தான் பாதிப்பு குறைவாக இருக்கிறது.

    உடல் தானாக

    உடல் தானாக


    நம் உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் சேதம் இருந்தாலும் நாம் நோன்பு இருக்கும் போது அதாகவே அந்த சேதத்தை சரி செய்துவிடும். அது போல் சேதமடைந்த செல்களை தானாகவே வெளியேற்ற விடும். எந்த ஒரு காயங்கள் ஏற்பட்டாலும் எந்த ஒரு உடல்நலக் குறைவு ஏற்பட்டாலும் நம் உடல் தானாகவே சரியாகிவிடும்.

    அணுக்கள்

    அணுக்கள்

    உண்ணாநோன்பு இருக்கும் போது ஆரம்பக் கட்டத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறையும். அப்போது ஸ்டெம் செல்கள் தூண்டப்படுகிறது. இது என்ன செய்யும் எனில் பல லட்சம் வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும். உபவாசத்திற்கு பிறகு நம் உடலில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும்.

    இயற்கையாகவே

    இயற்கையாகவே

    ஒரு இயற்கை மருத்துவரின் அறிவுறுத்தலின் படி நாம் நீண்ட உண்ணாவிரதம் இருக்கும் புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களை ஏற்படுத்தும் பிகேஏ என்சைம்களை குறைக்கிறது. அது போல் கேன்சர் செல்களை டேமேஜ் செய்யவும் உபவாசம் உதவுகிறது. காய்கறிகள், பழங்களை உண்ணும் போது நமது உடலுக்கு எனர்ஜி தேவைப்படும் போது நம் உடலில் ஏற்கெனவே சேமித்து வைக்கப்பட்ட குளுக்கோஸ் பயன்படுத்தப்படுகிறது. தேவையற்ற கொழுப்புகளும் குறைந்து இயற்கையாகவே நம் உடல் பருமனும் குறையும்.

    கழிவு

    கழிவு

    ஒல்லியாக இருப்பவர்கள் நோன்பு இருக்கக் கூடாது என்பதெல்லாம் கிடையாது. நம் உடல் என்பது ஒரு மெஷின். இதில் தேங்கியுள்ள கழிவுகளால் நமக்கு நோய் உண்டாகிறது. அந்த நோயை எதிர்த்து போராட எதிர்ப்பு சக்தி தேவைப்படுகிறது. அதற்காக நாம் கழிவுகளை அகற்ற வேண்டியது அவசியம்.

    3 நாட்கள் உபவாசம்

    3 நாட்கள் உபவாசம்

    இந்த உபவாசத்தை நாம் எப்படி இருப்பது என்பதை பார்ப்போம். ஒரு நாளைக்கு ஒரு வேளைக்காவது நாம் பழங்கள், காய்கறிகள், பழச்சாறுகள் மட்டும் உண்ணும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும். வாரத்தில் ஒரு நாள் மட்டுமாவது நாம் உபவாசம் மேற்கொண்டு நம் உடலில் உள்ள கழிவுகளை அகற்றிக் கொள்ளலாம். உடல் எடையை குறைக்க வேண்டும், ரத்த அழுத்தத்தை குறைக்க வேண்டும், கொலஸ்டிராலை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என நினைத்தீர்கள் என்றால் ஒரு யோகா மருத்துவரின் மேற்பார்வையில் 3 நாட்களோ அல்லது 5 நாட்களோ நாம் உபவாசத்தை மேற்கொள்ளலாம்.

    பழங்கள்

    பழங்கள்

    ஒரு நாள் முழுவதும் காய்கறிகள், பழங்களை எடுத்துக் கொண்டு மறுநாள் உபவாசத்தை விடும்போது நேரடியாக உணவை உட்கொள்ளாமல் எளிதில் ஜீரணமாகும் கஞ்சி, இடியாப்பம், இட்லி உள்ளிட்ட ஆவியில் வேகவைத்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் காரம், உப்பு, புளிப்பு, எண்ணெய் சேர்த்த பொருட்களை உண்ணக் கூடாது.

    பாசிட்டிவ் எனர்ஜி

    பாசிட்டிவ் எனர்ஜி

    பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மேற்கண்ட சுவைகளை சேர்த்துக் கொள்ளலாம். வீட்டில் இருக்கும்போதாவது நாம் உபவாசம் இருந்தால் உடலுக்கு நல்லது. நம் உடலில் உள்ள கழிவுகளை மலம், வேர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றிவிடும். மனதும் இலகுவாக இருக்கும். பாசிட்டிவ் திங்கிங்கையும் கொண்டு வரும் என்றார் ஒய் தீபா.

    English summary
    Government Yoga and Naturopathy Doctor Y Deepa says about fasting and how it helps to cleanse the body.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X