சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"முதல்வர் ஸ்டாலினின் அறிவு திறமை முன்பு நாங்களெல்லாம் சிறியவர்கள்!" நெகிழ்ந்து பேசிய துரைமுருகன்

Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன், பல நெகழ்ச்சிகரமான தருணங்களைப் பகிர்ந்து கொண்டார்.

Recommended Video

    சென்னை: கம்பீரமாய் நிற்கும் கலைஞர் சிலை... குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு திறந்துவைப்பு!

    சென்னை ஓமந்தூரார் அரசு தோட்ட வளாகத்தில் மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் சிலையைக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று திறந்து வைத்தார்.

    அதைத் தொடர்ந்து கலைவனர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வரவேற்புரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர் "சிலை திறந்த வைத்த துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு வணக்கம்!

     Duraimurugan praises CM Stalin Karunanidhi statue unveiling function

    இன்று நமக்கு ஒரு சிறந்த மகழ்சசியான நாள். காரணம் கருணாநிதி நம்மிடம் நேரில் பேசுவதைப் போலவே சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதைக் கண்டு கண்ணீர் விடாமல் வெளியே வர முடியவில்லை. கருணாநிதிக்கு அங்கு தான் சிலை வைக்க வேண்டும் என்று இடத்தை தேர்வு செய்தவர் முதல்வர் ஸ்டாலின் தான்.

    சாதாரண இடமாக இருந்த அந்த இடத்தை மகத்தான சட்டசபை இருக்கும் இடமாக மாற்றியவர் கருணாநிதி. கட்டுமானப் பணிகள் நடக்கும் போது, ஒவ்வொரு செங்கல்லாகப் பார்த்துப் பார்த்து அடுக்கினார்.

    அப்போது நான் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தேன். இதைக் கட்டும் வேலை எனக்கு இருந்தது. இருப்பினும், இதற்கு யோசனை சொன்னது எல்லாம் கருணாநிதி தான். அவர் கனவு நினைவாகி வந்த சமயத்தில், அதை இப்படி ஆக்கிவிட்டார்கள்.

     Duraimurugan praises CM Stalin Karunanidhi statue unveiling function

    கருணாநிதி சிலையை வைக்க ஓமந்தூரார் தோட்டத்தை ஸ்டாலின் தேர்வு செய்தபோது அப்பனுக்குத் தப்பாமல் பிறந்திருக்கிறாரே என்று நினைத்தேன். வயதில் நாங்கள் மூத்தவர்களாக இருக்கலாம். ஆனால், உங்கள் அறிவு திறமை முன்பு நாங்கல் இளையவர்கள்.

    இங்குக் காமராஜர் சிலை அதைத் திறந்தது நேரு. அடுத்து பெரியார் சிலை அதைத் திறந்தது கருணாநிதி. அடுத்து அண்ணா சிலை அதைத் திறந்தது ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான ராமசாமி உடையார். இன்று கருணாநிதி சிலையை நீங்கள் (வெங்கையா நாயுடு) திறந்துள்ளீர்கள்.

    இந்த சிலை இருக்கும் வரை உங்கள் பெயர் இந்த அண்ணா சாலையில் இருக்கும். தமிழகத்தைத் தலை நிமிரச்செய்தவர், திராவிடர் முன்னேற்றக்கழகத்தை 50 ஆண்டுகள் தோளில் சுமந்தவர் கருணாநிதி. அண்ணா சாலையில் சாதாரணமாகக் காட்சியளித்த இடத்தில் மகத்தான கட்டிடத்தை எழுப்பியவர் கருணாநிதி!

    சரியான இடத்தில் முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறக்கப்பட்டுள்ளது வரலாற்றில் இடம் பெற்று விட்டது. கருணாநிதி கைது செய்யப்பட்ட போது நேரடியாக வந்து விசாரித்ததை நேரில் பார்த்திருக்கிறேன். கருணாநிதி சிலையை நீங்கள் திறந்து வைத்தது பெரு மகிழ்ச்சியாக உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

    கோலாகல கருணாநிதி சிலைத் திறப்பு விழா: ரஜினிகாந்த் உட்பட.. பங்கேற்ற விஐபிகள் யார் யார் தெரியுமா? கோலாகல கருணாநிதி சிலைத் திறப்பு விழா: ரஜினிகாந்த் உட்பட.. பங்கேற்ற விஐபிகள் யார் யார் தெரியுமா?

    English summary
    Duraimurugan praises CM Stalin Karunanidhi statue unveiling function
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X