சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டி.ராஜேந்தர் நிலையை பார்த்தீங்களா.. லட்சிய திமுக வெற்று கட்சி.. அறிவித்த தேர்தல் ஆணையம்.. நெக்ஸ்ட்?

Google Oneindia Tamil News

சென்னை: நடிகரும் இயக்குநருமான டி ராஜேந்தரின் லட்சிய திமுகவை செயல்படாத கட்சியாக தேரதல் ஆணையம் அறிவித்துள்ளது.

2014, 2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் போட்டியிடாத கட்சிகள் எவை என்பது குறித்து தமிழகம், பீகார், டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் பட்டியலை அனுப்பினர்.

அந்த வகையில் மேற்கொண்ட 7 மாநிலங்களில் மொத்தம் 253 கட்சிகள் செயல்படாத கட்சிகள் என அறிக்கை அனுப்பப்பட்டன. அரசியல் கட்சியானது தொடர்ந்து 6 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் அது பதிவு செய்த கட்சிகளின் பட்டியலில் இருந்து நீக்கப்படும். அதன்படி 253 கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன.

தாமரை, இலை.. சண்முகத்துக்கு வந்த சிக்கல்.. தமிழ்நாட்டில் 7 கட்சிகள் நீக்கம் - தேர்தல் ஆணையம் அதிரடி! தாமரை, இலை.. சண்முகத்துக்கு வந்த சிக்கல்.. தமிழ்நாட்டில் 7 கட்சிகள் நீக்கம் - தேர்தல் ஆணையம் அதிரடி!

 டி ராஜேந்தர்

டி ராஜேந்தர்

அந்த வகையில் டி ராஜேந்தரின் லட்சிய திமுக செயல்படாத கட்சி என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இயக்குநர், நடிகர், பாடலாசிரியர், நடன இயக்குநர், தயாரிப்பாளர், வசன கர்த்தா, பின்னணி பாடகர் என பல முகங்களை கொண்டவர் டி ராஜேந்தர். இவர் 1980 களில் எடுத்த படங்கள் மக்கள் மனதில் இவருக்கென ஒரு இடத்தை கொடுத்தது.

திரைத் துறை

திரைத் துறை

அண்ணன் தங்கை பாசம் குறித்த படங்கள் எல்லாம் அந்த காலத்து ஹிட். திரைத்துறையில் கால் பதித்த டி ராஜேந்தர் அரசியலிலும் முத்திரை பதிக்க விரும்பினார். ஆனால் அவர் நினைத்தது நடக்கவில்லை. இவர் திமுகவில் தனது முதல் அரசியல் பயணத்தை தொடங்கினார். இதையடுத்து திமுகவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 1991 ஆம் ஆண்டு தாயக மறுமலர்ச்சி கழகம் என்ற ஒரு அரசியல் அமைப்பை தொடங்கினார்.

டி ராஜேந்தர் மீண்டும் திமுகவில் இணைந்தார்

டி ராஜேந்தர் மீண்டும் திமுகவில் இணைந்தார்

தனி கட்சியிலும் சோபிக்க முடியாத டி ராஜேந்தர் அந்த கட்சியை கலைத்துவிட்டு மீண்டும் திமுகவிலேயே இணைந்தார். திமுகவின் நட்சத்திர பேச்சாளராகி தனது அடுக்குமொழி வசனங்களால் கிராமப்புற மக்களை தேர்தல் பிரச்சாரங்களில் கவர்ந்தார். இதையடுத்து அவருக்கு 1996 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பூங்கா நகர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை கருணாநிதி, டி ராஜேந்தருக்கு வழங்கினார். வெற்றியும் பெற்றார். எனினும் சில பிரச்சினைகள் காரணமாக மீண்டும் திமுகவிலிருந்து விலகினார்.

லட்சிய திமுக அமைப்பு

லட்சிய திமுக அமைப்பு

பின்னர் 2004 ஆம் ஆண்டு லட்சிய திமுக என்ற அமைப்பை தொடங்கினார். 9 ஆண்டுகளில் 2013 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அழைப்பை ஏற்று மீண்டும் திமுகவில் இணைந்தார். இதையடுத்து சில ஆண்டுகள் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்த டி ராஜேந்தர் 2021 ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தல்

நாடாளுமன்ற தேர்தல்

ஆனால் அவர் போட்டியிடவில்லை. அந்த தேர்தலில் யாருக்கும் தனது ஆதரவு இல்லை என அறிவித்துவிட்டார். 2021 வாக்குப் பதிவின் போது வாக்குச் சாவடி மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த டி ராஜேந்தர் , 2024 ஆம் ஆண்டுக்குள் லட்சிய திமுகவின் கட்டமைப்பை பலப்படுத்திக் கொண்டு தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். ஆனால் அதற்குள் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அமெரிக்கா சென்றிருந்தார்.

என்ன செய்வார் டி ராஜேந்தர்?

என்ன செய்வார் டி ராஜேந்தர்?

தற்போது உடல்நலம் தேறி வருவதால் கட்சி பணிகளை கவனிப்பார் என கருதப்பட்ட நிலையில் அவரது கட்சி செயல்படாத கட்சி என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுளளது. இதனால் டி ராஜேந்தர் என்ன செய்வார் என தெரியவில்லை. தேர்தல் ஆணையத்தின் முடிவில் ஏதேனும் மாற்றுக கருத்து இருந்தால் தங்களை அணுகுமாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே டி ராஜேந்தர் தேர்தல் ஆணையத்தை அணுகுவாரா அவ்வாறு அணுகினால் அவருக்கு எந்தமாதிரியான நிவாரணத்தை தேர்தல் ஆணையம் வழங்கும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. மகன் சிம்புவை அரசியலுக்கு வருமாறு அழைத்து வருகிறார். தனக்கு ரசிகர்களின் ஆதரவு எவ்வளவு இருக்கிறது என்பதையும் அவர் உடல்நல பாதிப்பின் போது அறிந்து கொண்டு நெகிழ்ச்சி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Election Commission of India says that T.Rajendar's Latchiya DMK is inactive.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X