"நாங்க சொல்கிறோம் கேளுங்க.. திமுக ஒரு தீய சக்தி.." குட்டி கதை சொல்லி சாடிய எடப்பாடி பழனிசாமி
சென்னை: சென்னையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழாவில் கலந்து கொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி திமுகவைக் கடுமையாகச் சாடினார். குட்டிக் கதை சொல்லி திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, சிறுபான்மையினர் கபட வேடதாரிகள் கண்டறிந்து ஏமாறாமல் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், திமுகவை தீய சக்தி என்றும் அவர் விமர்சித்தார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள சி.எஸ்.ஐ தேவாலய வளாகத்தில் அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்றினார். திமுகவைத் தீய சக்தி எனக் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, தீய சக்திகளிடம் நாம் ஏமாந்து போய்விட்டால் பின்னர் விடியலே இருக்காது என்றும் தமிழகம் இருளில் மூழ்கி விடும் என்றும் சாடினார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி மேலும் பேசுகையில், "அனைவருக்கும் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்.. எம்ஜிஆரின் திரைப்படங்களில் இயேசுவின் போதனைகள் இடம்பெற்று இருக்கிறது. கிறிஸ்தவ மக்களை எம்.ஜி.ஆர் மிகவும் நேசித்தார். தீய சக்திகளை அழிக்கவே இயேசு ஒளியாக வந்தார்" என்று தனது பேச்சைத் தொடங்கினார்.
குட்டி கதை
தொடர்ந்து குட்டிக் கதை ஒன்றைச் சொன்ன எடப்பாடி பழனிசாமி, "விவசாயி ஒருவர் தனது விளைநிலங்கள் அருகே ஆட்டுப் பண்ணையில் பல ஆடுகளை வளர்த்து வந்தார்.. ஆடுகளின் பாதுகாப்பிற்குக் காவலாளிகள் மற்றும் மேய்ப்பர்களை நியமித்தார். அந்த பராமரிப்பில் ஆடுகள் நன்கு வளர்ந்தன. அந்த ஆடுகளைப் பிடிக்கச் சில ஓநாய்கள் திட்டமிட்டன. இருப்பினும் கண்காணிப்பு கடுமையாக இருந்ததால் ஓநாய்கள் ஆடுகளைக் கவர்ந்து செல்ல முடியவில்லை.
இதனால் ஆடுகளைத் தந்திரமாக வேட்டையாட ஓநாய்கள் திட்டமிட்டன. ஒரு நாள் இரவு ஆடு தோலைத் தங்கள் மீது போட்டுக் கொண்டு ஓநாய்கள் கொல்லைப்புற வாசல் வழியாக உள்ளே நுழைந்தன. ஆடுகளைப் போல நடித்த ஓநாய்கள், அப்பாவி ஆடுகளை அங்கிருந்து அழைத்துச் சென்று, தங்களுக்கு இரையாக்கிக் கொண்டன. அதன் பிறகே தாங்கள் மோசம் போய்விட்டதை ஆடுகள்
கவனம் தேவை
இந்த ஓநாய்களைப் போலத் தான் இன்றைய தினம் தங்களுக்கு மட்டுமே பதவி வேண்டும் என்ற நோக்கத்தில் வாக்கு வங்கிக்காக ஆட்டுத் தோலைப் போற்றிக் கொண்டு வரும் ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தீய சக்திகளிடம் ஏமாந்தால் விடியலே இருக்காது. தமிழகம் இருளில் மூழ்கிவிடும். திமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு வழக்கமாகக் கிடைத்து வந்த பல நலத்திட்டங்கள் இப்போது கிடைக்கவில்லை.
அதிமுக இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காகப் பாடுபடும் ஒரு இயக்கம். ஆனால், திமுக ஆட்சி என்பது விளம்பர மாடல் ஆட்சி, விடியல் இல்ல வெற்று ஆட்சி, மக்களை ஏமாற்றம் ஆட்சி.. கமிஷன் கரப்ஷன் கலெக்ஷன் என்பதுதான் திமுகவின் ஒரே தாரக மந்திரம்.. சிறுபான்மையினர் வாக்குகளைப் பெற இப்போது கபட நாடகம் ஆடுகிறார்கள்..ஒரு மேடையில் கடவுள் இல்லை என்பார்கள்.. மற்றொரு மேடையில் எனது மனைவி கிறிஸ்துவர் என்பதால் நானும் கிறிஸ்துவன் என்று பொய் பேசுவார்கள். இந்த கபடவேடதாரிகள் யார் என்பது சிறுபான்மை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
முதலில் சொன்னது அதிமுக தான்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தியுள்ள மதச்சார்பின்மையை நாங்கள் கடைப்பிடிக்கிறோம். எவ்வளவு நெருக்கடி வந்தாலும் எங்கள் கொள்கையில் எப்போதும் உறுதியாக இருக்கிறோம். கூட்டணி என்பது தேர்தல் சமயத்தில், கட்சிகளுக்கு இடையே ஏற்படுத்திக் கொள்கின்ற ஒப்பந்தம் மட்டுமே.. கொள்கை என்பது எங்களது கட்சியின் உயிர் மூச்சு போன்றது. எம்ஜிஆர் தான் முதலில் திமுகவை தீய சக்தி என்று அடையாளம் காட்டினார். ஜெயலலிதா தன் வாழ்நாள் முழுவதும் தீய சக்தி எதிர்த்துப் போரிட்டார்" என்று அவர் தெரிவித்தார்.
-
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் சற்றுநேரத்தில் வெளியீடு? -
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
தனபால் மட்டுமல்ல.. பட்டியலின முன்னாள் அமைச்சர்களும் அதிமுகவில் புறக்கணிப்பு.. பிரஷரில் எடப்பாடி! -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள்












Click it and Unblock the Notifications