இன்று "கிளைமேக்ஸ் ஸ்கெட்ச்.." ஓபிஎஸ் பதவியை காலி செய்யும் எடப்பாடி? ஒற்றை தலைமை நோக்கி அதிமுக
சென்னை: ஓபிஎஸ்ஸின் எதிர்ப்பை தாண்டி அதிமுக பொதுச் செயலாளராகிறாரா எடப்பாடி பழனிச்சாமி? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக பொதுக் குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இது தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து பேசியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பகிரங்கமாக அறிவித்தார்.
அன்று முதல் கடந்த 8 நாட்களாக அதிமுகவில் சலசலப்புகளும் பதற்றங்களும் பஞ்சம் இல்லாமல் உள்ளன. மூத்த நிர்வாகிகளுடன் இரு தலைமைகளும் தனித்தனியே ஆலோசனை நடத்தியதால் மேலும் விறுவிறுப்பு கூடியது.

தீர்மானம்
இந்த நிலையில் பொதுக் குழுவுக்கான தீர்மானத்தை இறுதி செய்யும் குழுவின் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இதில் எடப்பாடி பழனிச்சாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்வதற்கான தனித்தீர்மானம் இறுதி செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுக் குழு
பொதுக் குழு கூட்டத்திற்கு ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும் அதை நடத்தியே தீர வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் முடிவு செய்துள்ளனர். இதற்கு ஓபிஎஸ் தரப்பினர் என்ன செய்வர் என்பது தெரியவில்லை. இந்த நிலையில் கடந்த 7 நாட்களுக்கு பிறகு அதிமுக ஐடி விங் கூட்டம் ஒன்றில் எடப்பாடி பழனிச்சாமி நேற்று இரவு பேசியிருந்தார்.

உள்கட்சி பூசல்
அப்போது அவர் உள்கட்சி பூசல் குறித்து பேசியுள்ளார். அதிமுகவை வீழ்த்த சிலர் முயற்சி செய்வதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக வீழ்ந்ததாக சரித்திரமே இல்லை. கட்சியை நாம் காப்பாற்றுவோம். அதிமுகவின் நல்ல எதிர்காலத்தை உறுதி செய்ய உங்களுடன் பாடுபடுவேன் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
Recommended Video

மும்முரம்
அப்போது அங்கிருந்த அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் "அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி" என கோஷமிட்டனர். அப்போது எடப்பாடி பழனிச்சாமி அவர்களை தடுக்கவில்லை. அவர்களின் கருத்தை ஆமோதிப்பது போல் அமைதியாக நின்றிருந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. இதனால் அதிமுக பொதுச் செயலாளராக மும்முரம் காட்டி வருகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
அதிமுக வேட்பாளர் பட்டியல்.. தொகுதி மாறிய முக்கிய தலைகள்.. மாஜி அமைச்சர்கள் புதிய வியூகம்! -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி!












Click it and Unblock the Notifications