எடப்பாடியின் தென் மாவட்ட சுற்றுப்பயணம் ரத்து? டாக்டர் சரவணன் ஏற்பாடு செய்யும் விழா தள்ளிப்போகுமா?
சென்னை : அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தென் மாவட்ட சுற்றுப்பயணம் ரத்து செய்யப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக அவசர ஆலோசனைகளை நடத்தி வரும் நிலையில், ஈபிஎஸ் இந்த பயணத்தை தற்போதைக்கு ரத்து செய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
உச்ச நீதிமன்றம் பொதுக்குழுவைக் கூட்டி அதிமுக வேட்பாளரை தேர்வு செய்யுமாறு உத்தரவிட்ட நிலையில், அதுதொடர்பான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது எடப்பாடி தரப்பு.
வேட்பாளர் தேர்வு குறித்த ஒப்புதல் படிவத்தை பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரிடமும் வழங்கி கையெழுத்து பெற எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு செய்து ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

அதிமுக வேட்பாளர்
ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி அணியினர் முன்னாள் எம்.எல்.ஏ கே.எஸ்.தென்னரசுவையும், ஓபிஎஸ் தரப்பினர் செந்தில் முருகனையும் வேட்பாளராக அறிவித்தனர். இதனால் இருவரில் யாருக்கு இரட்டை இலை கிடைக்கும் என்ற கேள்வி எழுந்தது. இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி, தங்கள் தரப்பிற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பொதுக்குழு முடிவு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை பொதுக்குழு கூடி தீர்மானிக்கலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். பொதுக்குழுவின் வாக்கு அடிப்படையில் அதிமுக வேட்பாளரை தேர்ந்தெடுக்கலாம், ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் இதில் பங்கேற்க வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், பொதுக்குழு தேர்ந்தெடுக்கும் வேட்பாளரை தேர்தல் ஆணையத்துக்கு அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அனுப்ப வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அதனை ஏற்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

ஞாயிறுக்குள்
இதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து, அதிமுக மூத்த நிர்வாகிகளுடன், எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தி வருகிறார். உச்சநீதிமன்றம் பொதுக்குழுவைக் கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய உத்தரவிட்ட நிலையில், வேட்பாளர் ஒப்புதலுக்கான சுற்றறிக்கை படிவம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று முதல் வழங்கப்படுவதாக ஈபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது. பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒப்புதல் படிவம் வழங்கப்பட்டு ஞாயிறு இரவுக்குள் தலைமைக் கழகத்தில் கையெழுத்திட்டு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நாளை மதுரை பிளான்
இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமி நாளை காலை மதுரைக்கு செல்வதாக இருந்தது. தற்போது, அதிமுக பரபரப்புகளுக்கு மத்தியில் எடப்பாடி பழனிசாமி மதுரைக்குச் செல்வாரா எனும் கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அவரது முன்னிலையில் அதிமுகவில் இணைந்த டாக்டர் சரவணன், தனது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோரை அதிமுகவில் இணைக்கவுள்ளார். அதற்கான இணைப்பு விழா பிரமாண்டமாக நாளை (பிப்ரவரி 5) மதுரையில் நடத்த திட்டமிடப்பட்டது.

டாக்டர் சரவணன் ஏற்பாடு
மதுரை விமான நிலையம் அருகே பிப்ரவரி 5 ஆம் தேதி காலை 9 மணிக்கு எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் டாக்டர் சரவணன் தலைமையில் 5 ஆயிரம் பேர் அதிமுகவில் இணையும் விழா நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் முழு வீச்சில் நடத்தப்பட்டு வந்தது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆலோசனைப்படி, இந்த பிரமாண்ட விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தார் டாக்டர் சரவணன். இப்போது, எடப்பாடி பழனிசாமி, பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெறும் பணியில் பிஸியாக இருப்பதால், நாளை மதுரையில் இணைப்பு விழாவில் பங்கேற்பாரா, அல்லது ஈபிஎஸ்ஸின் எடப்பாடி சுற்றுப் பயணம் ரத்து செய்யப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

ஈபிஎஸ் ரொம்ப பிஸி
நாளை பரமக்குடியில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ முத்தையா இல்ல திருமண விழாவிலும் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ள திட்டமிடப்பட்டு இருந்தது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் நெருங்கி வரும் சூழலில், உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால், பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெற்று தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டியது குறித்த பணிகள் உள்ளதால் பிப்ரவரி 5 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமியின் தென் மாவட்ட சுற்றுப்பயணம் ரத்து செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. இன்று இரவுக்குள் ஈபிஎஸ்ஸின் திட்டம் குறித்து தெரியவரும்.

பிளான் சேஞ்ச்?
பிப்ரவரி 23ஆம் தேதி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மகள் திருமணம் உட்பட 51 ஜோடிகளுக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் டி.கல்லுப்பட்டி அருகே திருமணம் நடைபெறவுள்ளது. அதற்காக மதுரை செல்ல இருக்கிறார் ஈபிஎஸ். தற்போது, எடப்பாடி பழனிசாமியின் மதுரை சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டால், பிப்ரவரி 23ல் மதுரையில் டாக்டர் சரவணன் ஆதரவாளர்கள் அதிமுகவில் இணையும் விழா நடத்தப்படலாம் என அதிமுக வட்டாரத்தில் பேச்சுகள் அடிபடுகின்றன.
-
4 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு? முதல்வரான ஜெயலலிதா.. 2001இல் கருணாநிதி பேசிய கடைசி தேர்தல் வசனம்! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
அதிமுகவுக்கு கூடுதல் சீட் கேட்டு டெல்லி சென்ற இபிஎஸ்! "அப்ப கடைக்கு ஓனர் டக்ளஸ் அண்ணே இல்லையா? நேரு -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
தேனியில் உள்ள 4 தொகுதிகளில் 3ல் உதயசூரியன் உதிப்பது உறுதி.. பெரியகுளம் ரிசல்ட் விஜய் கையில் இருக்கு! -
ஒன்றரை மாதத்தில் என்ன ஆகும்? அரியணை ஆட்டம்.. 2016 Vs 2021.. தமிழக தேர்தல் களத்தின் 'பவர்' ரிப்போர்ட் -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
கிராமங்கள் vs நகரங்கள்.. 2021 சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுகவின் செயல்பாடுகள் எப்படி?












Click it and Unblock the Notifications