பிடிச்சா இருங்க.. இல்லனா கெளம்புங்க ‘தகுதியே இல்ல’ - பொதுவிலேயே பண்ருட்டியாரை வறுத்தெடுத்த எடப்பாடி!
சென்னை : சீசன் பறவை போல கட்சி மாறுபவர் பண்ருட்டி ராமச்சந்திரன். தற்போது நமக்கு அறிவுரை சொல்கிறார். உங்கள் அறிவுரை எதுவும் வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம், அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்துப் பேசிய நிலையில், நேற்று பிரஸ் மீட்டில் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார் பண்ருட்டியார்.
இந்நிலையில், அவரது பேச்சுக்கு இன்று நடந்த அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பதிலடி கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
பண்ருட்டி ராமச்சந்திரன் அதிமுகவில் இருந்தபோதே ஜெயலலிதாவை விமர்சித்தவர். அங்கிருந்து பாமகவுக்கு போனார், பின்னர் பாமகவை மறந்து விட்டார். தேமுதிகவுக்கு போனார். அந்தக் கட்சியை மழுங்கடித்து விட்டார் என அட்டாக் செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

திடீர் மீட்டிங்
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தை நாடி தங்களுக்கு சாதகமான பலனைப் பெற ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் தான் நேற்று முன்தினம் இரவு ஓ.பன்னீர்செல்வம் திடீரென அதிமுகவின் மூத்த தலைவரான பண்ருட்டி ராமசந்திரனை சந்தித்துப் பேசினார். சுமார் ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சரவெடி காட்டிய பண்ருட்டி
இந்த ஆலோசனைக்குப் பிறகு டைரக்டாகவே எடப்பாடி பழனிசாமியை எதிர்த்துப் பேசினார் பண்ருட்டி ராமச்சந்திரன். நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுக இன்று ஒரு நெருக்கடியை சந்தித்துள்ளது, நெருக்கடியில் இருந்து மீட்க ஓ.பன்னீர்செல்வம் பாடுபடுகிறார். அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டியது அனைவரது கடமை. கடைசியாக நடைபெற்ற மூன்று தேர்தலிலும் அதிமுகவை மக்கள் தோற்கடித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி தலைமையை மக்கள் நிராகரிக்கிறார்கள் என்பது தான் இதற்கு அர்த்தம் எனத் தெரிவித்தார்.

எடப்பாடி மாறணும்
மேலும், எடப்பாடிக்கு தலைமை பண்பு இல்லை என்பது நிரூபணம் ஆகியுள்ளது. அதிமுகவின் இக்கட்டான இந்த நேரத்தில் எடப்பாடி பழனிசாமி தனிப்பட்ட விருப்பு வெறுப்பை வைத்து தலைமை பொறுப்பில் இருந்து அரசியலை நடத்துவது கட்சிக்கு ஆபத்து. அதிமுகவில் தற்போதைய போக்கு நீடித்தால் கட்சி அழியும். இந்த நேரத்தில் தலைமையை மாற்றுவதே சரி. அதிமுகவின் தற்போதைய போக்கால் பாஜகவுக்குத் தான் பலன் கிடைக்கும் என அதிரடி கருத்துகளைப் பேசியிருந்தார்.

உங்க அட்வைஸே வேணாம்
இந்நிலையில், பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு பதிலடி கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. திமுக ஆட்சியில் மின்கட்டண உயர்வுக்கு எதிராக செங்கல்பட்டில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, "பண்ருட்டி ராமச்சந்திரன் அதிமுகவில் இருந்தபோதே ஜெயலலிதாவை விமர்சித்தவர். அங்கிருந்து பாமகவுக்கு போனார், பின்னர் பாமகவை மறந்து விட்டார். தேமுதிகவுக்கு போனார். அந்தக் கட்சியை மழுங்கடித்து விட்டார். சீசன் பறவை போல கட்சி மாறுபவர் பண்ருட்டி ராமச்சந்திரன்.

எனக்கு குழிபறித்தார்கள்
தற்போது நமக்கு அறிவுரை சொல்கிறார். உங்கள் அறிவுரை எதுவும் வேண்டாம். நாங்கள் நன்றாக இருக்கிறோம். நான்காண்டு காலம் முதலமைச்சராக இருந்தபோது பல போராட்டங்களை சந்தித்தேன். அரசை நடத்த வேண்டும் அதேசமயம் வறட்சி ஒரு பக்கம், மழை ஒரு பக்கம், கொரோனா ஒரு பக்கம் என பல்வேறு சோதனைகளை சந்தித்தேன். இது தவிர நம் கட்சிக்குள்ளேயே எனக்கு குழிபறித்தார்கள்.

கிளை செயலாளருக்கான தகுதி கூட இல்லை
கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தேன். 75 எம்.எல்.ஏ.க்களை பெற்றோம். நான் ஒரு சாதாரண தொண்டன். ஆனால் ஒரு சிலர் தூண்டுதலின் பேரில் பண்ருட்டி ராமச்சந்திரன் விமர்சிக்கிறார். ஒரு கிளை கழக செயலாளருக்கு இருக்கும் தகுதி கூட அவருக்கு இல்லை. எங்களை ஏற்றுக்கொண்டால் அதிமுகவில் தொடருங்கள். அதற்கு மனமில்லை என்றால் புறம் பேச வேண்டாம்." எனக் கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.
-
ரஜினிகாந்த் சொன்ன ஒற்றை வார்த்தை.. அதிமுகவை பாதாளத்துக்கு தள்ளிய ரிசல்ட்! 173 இடங்களில் திமுக வெற்றி -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
1989ல் திமுக இமாலய வெற்றி! 91இல் ஆட்சியைக் கலைத்த ஜெயலலிதா.. சிவாஜியின் புதுக்கட்சி எங்கே? -
’அம்மா’ இல்லாத பிள்ளையான அதிமுக..எடப்பாடியை அசிங்கப்படுத்திய அமித் ஷா! மனதுக்குள் குமுறும் ர.ர.க்கள் -
2021ல் திமுக vs அதிமுக.. எந்த மண்டலத்தில் எந்தெந்த கட்சி ஆதிக்கம் செய்தது? தமிழ்நாடு MAPஐ பாருங்க! -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
நாளை டெல்லிக்கு பறக்கும் தினகரன், அன்புமணி? அமித் ஷா முன்னிலையில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு டீல்? -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு ஸ்கெட்ச்.. ஐகோர்ட்டில் பரபர மனு! -
“2 மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை?” அதிமுக தலைவர்களின் பேச்சுக்கு ஸ்டாலின் காட்டிய ரியாக்ஷன்! -
தமிழக தேர்தல் வரலாறு: ‘ஜெ’ அணியா? ‘ஜா’ அணியா? - செங்குத்தாக உடைந்த அதிமுக.. அன்று நடந்தது என்ன? -
பதவியைக் காக்க கருணாநிதியிடம் ஆதரவு கேட்ட ஜானகி? 1988இல் ஆட்சி கலைப்பு.. ஜெயலலிதா எடுத்த சபதம்?











Click it and Unblock the Notifications