இரவினில் ஆட்டம்.. பகலில் தூக்கம்.. உதயநிதியை இறங்கி அடிக்கும் எடப்பாடி.. தீவிரமான பர்சனல் அட்டாக்!
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS), ஆளும் திமுக அரசு மற்றும் அதன் தலைவர்கள் மீது முன்வைக்கும் கடுமையான தனிநபர் விமர்சனங்கள் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
படத்தில் ஒரு பாடல் இருக்கிறது.. இரவினில் ஆட்டம்.. பகலில் தூக்கம் என்று.. உதயநிதி ஸ்டாலின் அப்படித்தான் இருக்கிறார்.. இரவில் என்ன செய்கிறார்.. இரவில் ஆடுகிறார்.. பகலில் தூங்குகிறார்.. மக்களை பார்க்கமால் இருக்கிறார் என்று எடப்பாடி பழனிச்சாமி நேற்று நடத்த அதிமுக பிரச்சார கூட்டத்தில் பேசி உள்ளார்.

ஈரோடு பவானிசாகர் தொகுதி அரியப்பம்பாளையம் பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர், அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணி தானாக அமைந்தது. இது வலிமையான கூட்டணி. திமுக - காங்கிரஸ் கூட்டணி இருப்பது சந்தேகம். காங்கிரஸ் ஆட்சியில் பங்கு தர வேண்டும், தங்களுக்கு உரிய மரியாதை கொடுக்காவிடின் பதிலடி கொடுப்போம் என்று காங்கிரஸ் எம்பி ஒருவர் கூறியுள்ளார். காங்கிரஸ் - திமுக கூட்டணி கலக்கத்தில் உள்ளது. திமுக கெஞ்சிக்கொண்டு இருக்கிறது.
எடப்பாடி பழனிச்சாமி - உதயநிதி ஸ்டாலின்
படத்தில் ஒரு பாடல் இருக்கிறது.. இரவினில் ஆட்டம்.. பகலில் தூக்கம் என்று.. உதயநிதி ஸ்டாலின் அப்படித்தான் இருக்கிறார்.. இரவில் என்ன செய்கிறார்.. இரவில் ஆடுகிறார்.. பகலில் தூங்குகிறார்.. மக்களை பார்க்கமால் இருக்கிறார்
இதெல்லாம் போக அவர் என்ன செய்கிறார்.. இன்ஸ்ட்டாகிராமில் ஆட்டம் போடுகிறார்.. அங்கே ஒரு விஷயத்திற்கு லைக் போடுகிறார்.. நான் சொல்லவில்லை.. நீங்களே என்ன செய்தார் என்று பாருங்கள்.. இப்படிப்பட்ட நபர் தமிழ்நாட்டிற்கு தேவையா ? இவரெல்லாம் துணை முதல்வராக இருக்க வேண்டுமா?,
எப்போது பார்த்தாலும் எடப்பாடி எப்படி வந்தான் தெரியுமா என்று கேட்பார்கள். நான் புகுந்து வந்தேன். பறந்து வந்தேன் என்பார்கள்.. நான் எப்படியோ வந்துவிட்டேன்ல.. நான் உழைத்து வந்தேன் என்று எடப்பாடி பழனிச்சாமி இறங்கி அடித்து ஆட தொடங்கி உள்ளார்.
முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் மீது தாக்குதல்
சமீபத்திய பொதுக்கூட்டங்களில் பேசிய எடப்பாடி பழனிசாமி, கொள்கை ரீதியான விமர்சனங்களைத் தாண்டி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் உடல்நிலை குறித்து கடுமையான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். "தனது கைகளை உயர்த்தினால் விரல்கள் நடுங்காது" என்று கூறியதன் மூலம் முதலமைச்சரை மறைமுகமாக அவர் கேலி செய்ததாக திமுகவினர் கொந்தளித்துள்ளனர்.
அதேபோல், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இன்ஸ்டாகிராம் செயல்பாடுகள் மற்றும் சமூக வலைதளப் பதிவுகளையும் இபிஎஸ் கடுமையாகச் சாடியுள்ளார். உதயநிதி ஒரு "இன்ஸ்டாகிராம் முதலமைச்சர்" போலச் செயல்படுவதாகவும், மக்கள் பிரச்சனைகளை விட சமூக வலைதள மோகமே அவரிடம் அதிகமாக இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
என்ன காரணம்?
எடப்பாடி பழனிசாமியின் இந்த அதிரடி மாற்றத்திற்குப் பின்னணியில் ஒரு அரசியல் கணக்கு இருப்பதாகப் பார்க்கப்படுகிறது. தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) மற்றும் பாஜகவின் தீவிரமான செயல்பாடுகளால் அதிமுகவின் குரல் மங்கிவிடக்கூடாது என்பதற்காகவே, இபிஎஸ் இதுபோன்ற "பிளோ தி பெல்ட்" (Below the belt) தாக்குதல்களைக் கையில் எடுத்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
செய்திகளில் தொடர்ந்து இடம்பிடிக்கவும், தொண்டர்களை உற்சாகப்படுத்தவும் இபிஎஸ் இந்தத் தனிநபர் விமர்சன உத்தியைக் கையாள்கிறார்.. பிரச்சாரத்தை டிரெண்டாக்கவும் எடப்பாடி இப்படி செய்கிறார் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
திமுகவின் பதிலடி
இபிஎஸ்-ஸின் இந்த விமர்சனங்களுக்கு திமுகவும் சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகிறது. எடப்பாடி பழனிசாமியை பாஜகவின் முரட்டு அடிமை என்று உதயநிதி ஸ்டாலின் வர்ணித்துள்ளார். மேலும், சசிகலாவின் காலில் விழுந்த பழைய நிகழ்வுகளை நினைவுபடுத்தி, அதிமுகவின் சுயமரியாதை எங்கே போனது என்றும் திமுக தரப்பு கேள்வி எழுப்பி வருகிறது.
-
கொங்குவில் உடையும் அதிமுக கோட்டை.. 4 மண்டலங்களிலும் திமுக தான் ‘டாப்' - கருத்து கணிப்பு ரிசல்ட் -
சுந்தர்.சி வேட்பாளர் ஆனதற்கு எதிர்ப்பு.. புதிய நீதி கட்சியின் அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
55% வாக்கு இலக்கு.. விஜய் குறைத்து மதிப்பிடுகிறார்! டேட்டாவுடன் சொல்லும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் -
டூவீலரில் மோதிய எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு வாகனம்.. 28 வயது இளைஞர் உயிரிழப்பு.. பெரும் சோகம் -
அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது.. திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஸ்டாலின்! ‘அட்டாக்' -
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
அதிமுகவை நம்பி சாத்தூரில் களமிறங்கும் நயினார் நாகேந்திரன்.. கைகொடுக்குமா முக்குலத்தோர் வாக்குகள்? -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
அதிமுகவுக்கு ஆப்பு வைக்கப் போறாரு விஜய்! இப்பவே உஷாராவது நல்லது! அடித்துச் சொல்லும் ஜெ.வின் நிழல்!












Click it and Unblock the Notifications