ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? சத்யபிரதா சாகு சொன்ன பதில் இதுதான்!
சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதியில் இடைத்தேர்தல் ஆறு மாதங்களில் நடைபெறும் என்று தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார். ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா மரணமடைந்ததை அடுத்து அந்த இடம் காலியானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.
இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னையில் வெளியிட்டார். நவம்பர் 9ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலின் படி 6.20 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் 3.04 கோடி ஆண், 3.12 கோடி பெண் வாக்காளர்கள்; 8,027 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர். அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.66 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். குறைந்த வாக்காளர் உள்ள தொகுதி சென்னை துறைமுகம். 1.7 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
இரண்டாவது பெரிய தொகுதியாக கவுண்டம்பாளையத்தில் 4.5 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 3.82 கோடி வாக்காளர்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். 1500 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி வீதம் அமைத்து வருகிறோம். அதற்கு மேல் சென்றால் கூடுதல் வாக்குச்சாவடி அமைக்கப்படும். திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் குறித்த சந்தேகங்களுக்கு 1950 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பதில் பெறலாம். இறுதி வாக்காளர் பட்டியல் அறிவிக்கப்பட்டாலும் தொடர்ந்து வாக்காளர் பெயர் சேர்க்கும் செய்யலாம். 17 வயது முடிந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம், 18 வயதாகும் போது பெயர் சேர்க்கப்படும்.

தேர்தல் ஆணையத்தில் கொடுத்த முகவரியின் அடிப்படையிலேயே அதிமுகவுக்கு கடிதம் அனுப்பப்பட்டது என ஒருங்கிணைப்பாளர்கள் எனக்குறிப்பிட்டு கடிதம் அனுப்பியது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈவெரா திருமகன் மரணம் நேற்றைய தினம் மாரடைப்பால் மரணமடைந்தார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்னும் சில மாதங்களில் இடைத்தேர்தல் வர உள்ளது. பொதுவாக ஒரு எம்எல்ஏ இடம் காலியானால் 6 மாதங்களில் இடைத்தேர்தல் நடத்தப்படும். தமிழ்நாடு அரசுடன் ஆலோசனை செய்துவிட்டு, தேதி முடிவு செய்யப்படும். இந்த நிலையில் ஜூன் மாதத்திற்குள் தற்போது காலி ஆகி இருக்கும் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும். இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி என்பதை தேர்தல் ஆணையம் எம்எல்ஏ சீட் காலியானதாக அறிவிக்கப்பட்டு 6 மாதங்களுக்கு நடத்தப்பட்ட தீர வேண்டும். இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், இந்திய தேர்தல் ஆணையம், ஈரோடு கிழக்குத் தொகுதி காலியானதாக அறிவித்த பின்னர் ஆறுமாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று கூறினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications