வேணும்னா சசிகலாவை பாஜகவில் சேர்த்துக்கோங்க.. அதிமுகவுக்கு அண்ணாமலை என்ன அட்வைசரா? ஜெயக்குமார் நறுக்
சென்னை: சொந்த கட்சி வேலைகளை அவர் பார்க்கட்டும். அவர் என்ன அதிமுகவுக்கு அட்வைசரா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
அதிமுகவில் சசிகலாவை இணைப்பதா வேண்டாமா என்ற பிரச்சினை எழுந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை சேத்துப்பட்டில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.
அப்போது ஓபிஎஸ் பேசுகையில் திருந்தி வந்தவர்களை ஏற்பதே நல்ல தலைமைக்கு அழகு என கூறியிருந்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.

குட்டி கதையுடன் கருத்துகள்
இந்த விழாவில் ஓபிஎஸ் ஒரு குட்டி கதையுடன் சில கருத்துகளை கூறியிருந்தார். அவை சசிகலாவை மையப்படுத்தி பேசியதாகவே அரசியல் வட்டாரத்தில் சொல்லப்பட்டது. இதுகுறித்து டி ஜெயக்குமார் பிபிசி தமிழுக்கு பேட்டி அளித்திருந்தார்.

எடப்பாடி பழனிச்சாமி
அப்போது அவர் கூறுகையில் ஓபிஎஸ் சொன்ன கருத்துகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு கூறியதாக எடுத்துக் கொள்ள முடியாது. அது கிறிஸ்துமஸ் பெருவிழா. மன்னிக்கிற மனப்பாங்கை மனித குலம் பெற்றிருக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் அவர் பேசியிருந்தார். அதற்கு ஒரு உருவத்தை வைத்து பேசுவதை ஏற்க முடியாது.

தேவர் ஜெயந்தி விழா
இயேசுபிரான் செய்த உபதேசங்களைத்தான் அவர் கூறிருந்தார். தேவர் ஜெயந்தி விழாவில் ஓபிஎஸ் பேசியது குறித்தும் அவர் தலைமை அலுவலகத்தில் விளக்கமளித்துவிட்டார் என்றார். இந்த நிலையில் பழைய அதிமுகவாக ஒற்றுமையாக இருப்பதற்கு சசிகலாவையும் சேர்த்துக் கொள்ளலாம், அது தொண்டர்கள் விருப்பம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஊடக நேர்காணல் ஒன்றில் கூறியதாக வெளியான செய்திகள் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

வேலை பார்க்கட்டும்
அதற்கு அவர் அண்ணாமலை தனது கட்சி வேலையை பார்க்கட்டும். எங்கள் விவகாரத்தில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. சசிகலாவை கட்சியில் சேர்க்குமாறு அறிவுரை கொடுக்க இவர் யார்? இவர் என்ன எங்களிடம் அட்வைசரா? அவரவர் வேலையை அவரவர் பார்க்கட்டும். பா.ஜ.கவில் யாரை வேண்டுமானாலும் சேர்க்கிறார்கள். அது பற்றி நாங்கள் பேசுகிறோமா? சசிகலாவை வேண்டுமானால் பா.ஜ.கவில் சேர்த்துக் கொள்ளட்டும். அதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை என்றார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
-
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர் -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
அதிமுக வேட்பாளர் பட்டியல்.. தொகுதி மாறிய முக்கிய தலைகள்.. மாஜி அமைச்சர்கள் புதிய வியூகம்!












Click it and Unblock the Notifications