சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Exit Poll 2021: எம்ஜிஆர் காலம் முதல் அதிமுகவின் கோட்டையாக இருந்த தென்தமிழகம்.. இனி திமுகவசம்?

Google Oneindia Tamil News

சென்னை: தென் தமிழகத்தில் மொத்தமுள்ள 56 தொகுதிகளில் திமுக கடந்த தேர்தலை காட்டிலும் அதிக இடங்களில் வெற்றி பெறும் என ஏபிபி சி வோட்டர் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

Recommended Video

    தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் - Republic Exit Poll

    தமிழகத்தில் வரும் 2021-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக ஆட்சி அமையும் என ஆங்கில, தமிழக சேனல்களின் கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளன. அந்த வகையில் ஏபிபி சி வோட்டர் கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளது.

    அதில் தென் தமிழகத்தில் மொத்தமுள்ள 56 தொகுதிகளில் திமுக 33 முதல் 35 தொகுதிகள் வரை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. 2016-ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் முடிவுகளை ஒப்பிடும் போது திமுகவின் வெற்றி வாய்ப்புகள் பல்வேறு மண்டலங்களில் அதிகரித்துள்ளது.

    திமுகவுக்கு '190' இடங்கள்.. பெரும்பான்மை ஆட்சி - P-MARQ தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புதிமுகவுக்கு '190' இடங்கள்.. பெரும்பான்மை ஆட்சி - P-MARQ தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு

    58 தொகுதிகள்

    58 தொகுதிகள்

    தென் மாவட்டங்கள் என வரும் போது சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகியவை ஆகும். இதில் மொத்தம் 58 தொகுதிகள் உள்ளன. எந்த கட்சியாக இருந்தாலும் தமிழக மக்கள்தொகையில் பெருமளவு தென் மண்டலம் என்பதால் அங்கு அதிக தொகுதிகளில் வெல்வதை விரும்பும்.

    அமைச்சர் பதவி

    அமைச்சர் பதவி

    அதிமுக தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே தென் தமிழகம் என்பது அதிமுகவின் கோட்டையாகவே இருந்தது. அது போல் முக்கியமான மண்டலம் என்பதால் யார் ஆட்சிக்கு வந்தாலும் தென் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சர் பதவி என்பது நிச்சயமாக கொடுக்கப்படும்.

    பெரும்பகுதி

    பெரும்பகுதி

    அப்படிப்பட்ட தென் தமிழகத்தில் மொத்தமுள்ள 58 தொகுதிகளில் திமுக 33 முதல் 35 இடங்களையும் அதிமுக 21 முதல் 23 இடங்களையும் கைப்பற்றும் என கணிப்புகள் கூறுகின்றன. அதாவது இத்தனை நாள் அதிமுகவின் கோட்டையாக இருந்த தென் தமிழகம் தற்போது பெரும்பகுதி திமுக வசம் செல்ல போகிறது.

    எத்தனை இடங்கள்

    எத்தனை இடங்கள்

    கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் இந்த தென்தமிழகத்தில் அதிமுக கூட்டணி 32 இடங்களிலும் திமுக கூட்டணி 26 இடங்களிலும் வென்றது. 2016 ஐ காட்டிலும் 2021 இல் தென் தமிழகத்தில் கூடுதல் தொகுதிகளை திமுக பிடிக்கும் என தெரிகிறது. எதுவாக இருந்தாலும் இரு நாட்கள்தானே பொறுத்திருந்து பார்ப்போம்.

    English summary
    Exit Poll 2021: DMK will get more places in South Tamilnadu?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X