அடுத்த மாதம் உயரலாம்.. ஐசியு வார்டில் உள்ள அனைவருக்குமே ஒரு ஒற்றுமை.. ராதாகிருஷ்ணன் அலார்ட்
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதால் மக்கள் கொரோனா தொடர்பான விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
இது தொடர்பாக பிரபல தமிழ் ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: ஐசியூ வார்டில் இன்றைய தேதிக்கு சில நோயாளிகள் இருக்கிறார்கள்.
இவர்கள் யாருமே தடுப்பூசி போடாதவர்கள். ஐசியு வரை வந்தற்கு காரணம் தடுப்பூசி போடாதது தான். இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் கண்டிப்பாக போட்டுக்கொள்ள வேண்டும்.

உயரும் வாய்ப்பு
மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி வருவதன் படி, கண்டிப்பாக கொரோனா விவகாரத்தில் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏற்கனவே தமிழகத்தில் 2000 வரை போய் கொரோனா இறங்கி உள்ளது. தற்போது 1500 முதல் 1600ஆக தினசரி பாதிப்பு உள்ளது. இந்த எண்ணிக்கை அக்டோபரில் உயரும் வாய்ப்பு உள்ளதாக வல்லுநர்கள் சொல்கிறார்கள்.

அறிவுறுத்தல்
எனவே இந்த நேரத்தில் பொதுமக்கள் தங்கள் ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும். மக்கள் இப்போதிருந்தே கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.
Recommended Video

கோவையில் அதிகம்
இதனிடையே தமிழகத்தில் நேற்று புதிதாக 1,693 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 202 பேரும், கோவையில் 206 பேரும், ஈரோட்டில் 134 பேரும், செங்கல்பட்டில் 135 பேரும், திருப்பூரில் 110 பேரும், தஞ்சாவூரில் 108 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் குறைந்தபட்சமாக விருதுநகர், திருப்பத்தூரில் தலா 7 பேரும், தேனி, பெரம்பலூரில் தலா 6 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனைகளில் சிகிச்சையில் 16 ஆயிரத்து 756 பேர் உள்ளனர். தமிழகத்தில் இதுவரை மொத்தம் 35 ஆயிரத்து 271 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.

கோவை கவனம்
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பு 20000 என்கிற அளவில் உள்ள நிலையில், கேரளாவின் எல்லையை ஒட்டிய மாவட்டங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. குறிப்பாக கோவை மாவட்ட எல்லையை முழுமையாக கண்காணிக்க வேண்டும் என்றும் மக்கள் கோரியுள்ளனர். ஏனெனில் அங்கு தான் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகமாகவே உள்ளது. இதற்கு காரணம் கோவை எல்லையில் கேரள பயணிகளை சரியாக சோதிக்காமல் அனுப்பியது தான் என்ற குற்றச்சாட்டு உள்ளது. கொரோனா தடுப்பு விதிகளை தீவிரமாக அமல்படுத்தினால் பாதிப்பை கட்டுப்படுத்த முடியும் என்பதால் அரசு அதை தீவிரமாக்கி வருகிறது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications