நீ எனக்காக பிறந்தவள்.. போலீஸ்காரரின் மகளை மிரட்டி 3 வருடம் பலாத்காரம் செய்த போலி சாமியார்.. ஷாக்
மும்பை: ‛‛நீ எனக்காக பிறந்தவள்'' எனக்கூறி போலீஸ்காரரின் மகளை மிரட்டி 3 ஆண்டு பலாத்காரம் செய்து ஆபாசபடமெடுத்து மிரட்டிய போலி சாமியார் பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
மும்பையின் மேற்கு அந்தேரி பகுதயில் உள்ள வெர்சோவா பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ்குமார் ரவீந்திர நாரயண் அவஸ்தி (வயது 58). இவருக்கும் மும்பையில் போலீசாக பணியாற்றி வருவரும் ஒருவருக்கும் 12 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது.
ஐடி நிறுவனம் ஒன்றில் மேனேஜராக பணியாற்றி வரும் சுரேஷ் குமார், தன்னை சாமியார் என போலீஸ்காரரிடம் கூறினார். மேலும் அவர் கூறிய சில விஷயங்கள் நடந்துள்ளன.

நம்பிய போலீஸ்காரர்
இதனால் அந்த போலீஸ்காரர், சுரேஷ் குமாரை சாமியார் என நம்ப துவங்கினார். மேலும் அவர் நடத்தும் பூஜைகள், ஆன்மிகம் சார்ந்த நிகழ்ச்சிகளில் போலீஸ்காரர் தனது குடும்பத்துடன் பங்கேற்று வந்தார். இதற்கிடையே தான் போலீஸ்காரரின் மனைவிக்கு சாமியார் மீது சந்தேகம் ஏறு்பட்டது. இதுபற்றி அவர் தனது கணவரிடம் கூறியபோது அவர் நம்பவில்லை. மாறாக தொடர்ந்து அவர் சாமியார் சுரேஷ் குமாரை சந்தித்து வந்துள்ளார். அவருடன் அவரது மகள், மகன் சென்றுள்ளனர்.

மகள் பலாத்காரம்
இந்தநிலையில் 2019ல் போலீஸ்காரரின் 17 வயது மகளுக்கு சுரேஷ்குமார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் தனக்கு சிறப்பு சக்திகள் உள்ளது. ‛‛நீ எனக்காக பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டவள். சம்பவம் குறித்து வெளியே கூறினால் எனது சக்தியை பயன்படுத்தி குடும்பத்தை அழித்துவிடுவேன்'' என மிரட்டியுள்ளார். இதனால் சிறுமி நடந்ததை வெளியே கூறவில்லை. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய சாமியார் கடந்த 3 ஆண்டுகளாக போலீஸ்காரரின் மகளை பலாத்காரம் செய்துள்ளார்.

ஆபாசபடம் காட்டி மிரட்டி
மேலும் ஆபாசமான படங்களை செல்போனில் எடுத்து கொண்டு இணையதளங்களில் பதிவிடுவதாக மிரட்டி தொடர்ந்து சீரழித்து வந்துள்ளார். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின்போது போலீஸ்காரரின் வீட்டுக்கு சாமியார் சென்றார். அதன்பிறகு பூஜைக்காக தனி அறைக்கு மகளை அனுப்பி வைக்கும்படி போலீஸ்காரரின் மனைவியிடம் கூறினார். அவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கோபமடைந்த சுரேஷ் குமாரை அவரை திட்டிவிட்டு சென்றார்.

கைது செய்த போலீஸ்
இதற்கிடையே தான் போலீஸ்காரரின் மனைவியிடம் அவரது மகள் தனக்கு 3 ஆண்டுகளாக நேர்ந்த கொடுமை பற்றி அழுதபடி கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலி சாமியார் சுரேஷ் குமாரை கைது செய்தனர். இதுபற்றி போலீஸ் தரப்பில், ‛‛கைதான சுரேஷ் குமார் ஐடி நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். இவர் சாமியார் எனக்கூறி வந்துள்ளார். இவர் பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறோம்'' என்றார்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி!












Click it and Unblock the Notifications