மத்திய அரசு சர்ப்ரைஸ்.. மாறும் கிராமப்புற சாலைகள்.. பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா - வரப்பிரசாதம்
டெல்லி: இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வளர்ச்சி பெற்று வரும்நிலையில், மத்திய அரசு இதுகுறித்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.. குறிப்பாக, கிராமங்களுக்கு இடையிலான இணைப்பை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு வரும்நிலையில், இதுகுறித்த கூடுதல் தகவல் ஒன்று வெளியாயிருக்கிறது.
நம்முடைய நாட்டில், கிராமங்கள் உட்பட இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் சாலை வசதியை ஏற்படுத்தி தருவதற்காகவே துவங்கப்பட்ட திட்டம்தான் "பிரதம மந்திரி கிராம் சதக் யோஜனா" திட்டமாகும்.

திட்டம்: இந்தியாவில் கிராமப்புறங்களில் குறிப்பாக மலைவாழ் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதி, பாலைவனப் பகுதி, குக்கிராமங்கள் என அனைத்துப் பகுதிகளுக்கும் 2007-ம் ஆண்டுக்குள் சாலை வசதியை ஏற்படுத்தித் தரும் நோக்கில், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 2000-ம் ஆண்டில் "பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா" என்ற திட்டத்தைத் தொடங்கிவைத்தார்... தற்போது முழு அளவில் மத்திய அரசின் நிதியிலேயே இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த PMGSY திட்டத்தில், சமவெளி பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் கிராமங்கள் நகரங்களுடன் இணைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல மலைப்பாங்கான மற்றும் பாலைவனப் பகுதிகள் என்றால் இந்த எண்ணிக்கை 250 பேர் வசிக்கும் பகுதியும் கணக்கில் கொள்ளப்படுகிறது.
கிராமப்புற சாலைகள்: அந்தவகையில், பி.எம்.ஜி.எஸ்.ஒய் ((PMGSY - பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா) என்பது இந்தியாவில் கிராமப்புற சாலைகளை மேம்படுத்துவதற்காக மத்திய அரசின் ஒரு முக்கிய திட்டமாமாகவே விளங்கி வருகிறது..
சிறந்த போக்குவரத்துக்கு கட்டமைப்பை ஏற்படுத்தி கிராமங்களை இணைப்பதன் மூலம், கிராமப்புறங்களுக்கு தரமான சாலைகள் கிடைப்பதோடு, பொருளாதாரத்தை மேம்படுத்தி வறுமையை குறைக்க வேண்டும் என்பதையே மத்திய அரசு நோக்கமாக கொண்டிருக்கிறது.
நிதியுதவி: இந்நிலையில், இந்த திட்டம் குறித்து புது தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.. அந்தவகையில், இந்த திட்டத்தின் கீழ் கிராமப்புற சாலை இணைப்புக்கு மிகப்பெரிய அளவில் நிதியுதவி வழங்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறதாம்.. இதன்மூலம் கிராமங்களில் சாலைகள் மறுசீரமைக்கப்பட்டு, கிராம பகுதிகளுக்கான இணைப்பை அதிகரிக்கவும் முடிவு செய்திருக்கிறதாம்.
இதற்காக குறைந்தபட்சம் 300 முதல் 400 பேர் வரையிலான மக்கள் வசிக்கும் கிராமங்கள் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்த தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
மக்கள் தொகை: அதேபோல, குறைந்தபட்ச மக்கள் தொகை எண் சமவெளி பகுதிகளுக்கு மட்டுமேயல்லாமல், மலைப்பாங்கான பகுதிகள், பாலைவனங்கள், பிற பின்தங்கிய பகுதிகள் என்றால் 100 பேர் வரை வசிக்கும் கிராமங்களுக்கும், இப்படியான போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதற்காக, சாலைகள் அமைக்க முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில், வரக்கூடிய பட்ஜெட்டிலேயே இதற்கான நிதி ஒதுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, இந்த திட்டத்தின் 3வது கட்டத்திற்காக இடைக்கால பட்ஜெட்டியில் 16000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்த வருடம் இந்த திட்டத்தின் 4வது கட்டம் விரைவில் தொடங்கும் என்கிறார்கள்.
சாலையோர மரங்கள்: எனவே, கிராமப்புறங்களை விவசாய சந்தைகள், மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுடன் இணைக்க, சுமார் 1.25 லட்சம் கிலோமீட்டர் நீள சாலைகள் கட்டமைக்கப்பட உள்ளது.. அதுமட்டுமல்ல, சாலைகள் அமைப்பதோடு மட்டுமல்லாமல், சாலையோரங்களில் மரங்கள், மரக்கன்றுகள், சிறு செடிகள் நடவும் முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறதாம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications