விவசாயிகள் அதிருப்தி.. கீழடியில் அருங்காட்சியகம் அமைப்பதில் சிக்கல்.. நிலம் தரமாட்டோம் என மறுப்பு!
சென்னை: கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க அரசாங்கத்துக்கு நிலம் தரமாட்டோம் என அகழாய்வுக்கு இடம் கொடுத்தவர்கள் எதிர்ப்பு.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம அமைக்க தமிழக அரசு திட்டமிருக்கிறது. அதறகான முதற்கட்ட வேலைகள் தொடங்கி நடந்துவருகிறது. அகழாய்வு நடத்த இடம் கொடுத்த விவசாயிகள் அருங்காட்சியகம் அமைக்க அரசுக்கு அந்த இடங்களைக் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக தெரியவந்துள்ளது.
வைகை நதிக்கரையில் நடத்தப்பட்ட அகழாய்வில், கிழடி அருகே மிகப்பெரிய நகர நாகரிகம் இருந்ததை தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் கண்டறிந்தனர். அதன்பிறகு கீழடியில் பல மாற்றங்கள் நடந்து, அகழாய்வு பணிகள் தொடர்வதில் சிக்கல் எழுந்தது. அகழாய்வைத் தொடர்ந்த அமர்நாத் அங்கிருந்து அசாம் மாநிலத்துக்கு மாற்றப்பட்டார்.

15 ஆயிரம்
அதன்பிறகு கீழடிக்காக தமிழ் சமூகம் தொடர்ந்து குரல் கொடுத்தது. தமிழக அரசு கீழடியில் அகழாய்வுப்பணிகளை எடுத்து நடத்தியது. அதன்பிறகு தொடர்ச்சியாக கீழடியில் அகழாய்வு நடைபெற்று வருகிறது. இதுவரை ஏழு கட்ட அகழாய்வுப் பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நாகரிகம்
தமிழர் நாகரிகம் நகர நாகரிகம் என்பது கீழடியால் உறுதியானது. கீழடியில் கிடைத்த பொருட்களை கார்பன் பகுப்பாய்வு செய்தபோது, அதன் காலம் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது. தமிழர் நாகரிகத்தை உலகறிய செய்ததில் கீழடியின் பங்கு இன்றியமையாதது. இதனால் கீழடியைப் பாதுகாக்க தமிழ் அமைப்புகள் அதிக ஆர்வம் காட்டின.
இந்நிலையில் கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் கீழடி அகழாய்வு சுற்றி கீழடி கொந்தகை அகரம் மணலூர் அகழாய்வு நடந்த இடங்களை பாதுகாக்கப்பட்ட பகுதியாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதையடுத்து தமிழகத்தில் பல புதிய இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றது. அதை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரடியாகவே பார்வையிட்டு வருகிறார்.

அருங்காட்சியகம்
கீழடியில் , ஏழாம் கட்ட அகழாய்வுப் நடந்து முடிந்திருக்கிறது. இந்த இடம் திறந்தவெளி அருங்காட்சியமாக அமைக்கப்படும். மக்கள் எப்பொழுதும் வேண்டுமானாலும் வந்து பார்த்து செல்லலாம் என்று தமிழக அரசு கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவித்தது. ஆனால் அதற்கான இடம் இன்னும் அரசின் கைகளுக்குக் கிடைக்கவில்லை.
கீழடியில் அகழ்வாய்வு செய்ததும், அந்த இடங்களை சரிசெய்து விவசாயிகளிடம் நிலத்தை திருப்பி கொடுத்து விடுவார்கள் விவசாயிகள் மறுபடியும் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார்கள். இதுவரை இப்படித்தான் நடந்தது. தற்போது 7ம் கட்ட அகழாய்வுக்கு நிலத்தை கொடுத்த விவசாயிகள் மிகுந்த ஏமாற்றத்தை அளித்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அதிருப்தி
விவசாயிகள் கூறுகையில், ''நிலத்தை வாங்கி மீண்டும் தருவதாக கூறி தான் எங்கள் நிலத்தை வாங்கினார்கள். ஆனால் தற்போது அது திறந்தவெளி அருங்காட்சியகமாக இருக்கும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. இங்கு தென்னை மரங்கள் இருக்கிறது. அதை நம்பிதான் எங்களின் வாழ்வாதாரமே இருக்கிறது. எங்கள் நிலத்தை அரசாங்கம் கைப்பற்ற முயற்சிப்பதில் எங்களுக்கு துளி அளவுகூட விருப்பமில்லை. மேலும் எட்டாம் கட்ட அகழாய்வுக்கு எங்கள் தரப்பில் இருந்து எந்த ஒரு நிலமும் தரப்படாது'' என கீழடியில் அகழாய்வுக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் தெரிவித்திருக்கின்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications